ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

பிரேம்ஜீ ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

பிரேம்ஜீ ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நீண்டகால செயலாளரும் தினகரன் ஆசிரியர் பீட முன்னாள் ஆலோசகருமான பிரேம்ஜீ ஞானசுந்தரம் நேற்று கனடாவில் காலமானார்.

இறக்கும் போது இவருக்கு வயது 84 ஆகும். இலங்கையிலிருந்து 1990 ஆம் ஆண்டு முதல் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த இவர் திடீர் சுகயீனமுற்று நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி கிராமத்தில் 1930.11.17ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு - 15 மட்டக்குளியில் நீண்ட காலமாக வசித்து வந்தார்.

இலங்கை கம்யூனிஸ் கட்சியின் (ரஷ்யன் வில்) நீண்டகால செயற்பாட்டாளராக இருந்த இவர் முற்போக்கு இலக்கியங்களை படைப்பதற்கு தன்னை அர்ப்பணித்து முழுமையாக செயற்பட்டவர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாட்டிற்கு ஜீவநாடியாக திகழ்ந்த இவர் தேசாபிமானி, சுதந்திரன், புது யுகம் சோவியட் நாடு, சோவியட் செய்தி மடல், சக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அவர் பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அத்துடன் துரைவி நினைவு விழாவில் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி