ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

ஜ_கி நிறுவனத்தின் தெற்காசிய இரண்டாவது பயிற்சி மையம் கொழும்பில் அங்குரார்ப்பணம்

ஜ_கி நிறுவனத்தின் தெற்காசிய இரண்டாவது பயிற்சி மையம் கொழும்பில் அங்குரார்ப்பணம்

nஹீற்காசியாவில் ஜுகி நிறுவனம் தனது இரண்டாவது பயிற்சி மையமொன்றை கொழும்பில் ஆரம்பித்து வைத்தது. இந்நிகழ்வு கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

விசேட அதிதியாகக் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சிங்கப்பூர் ஜுகி நிறுவனத்தின் நிறைவேற்று துணை தலைவர் சையிட்டோ நொரியாக்கி ஆகியோர் பயிற்சி மையத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை தொடர்பாக வர்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தின் இலக்கு குறித்து விபரமாக எடுத்துரைத்தார்.

ஜுகி நிறுவனம் கடந்த 40 வருடங்களாக இலங்கைக்கு தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது. நாங்கள் இலங்கைக்கு ஜுகி தையல் மெஷின்கள் உட்பட அதற்கான தொழில்நுட்ப பயிற்சி, ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம். ஜுகி மெஷின் உலகளவு ரீதியாக மிகவும் பிரசித்திபெற்று வரும் ஒரு பிராண்ட் ஆகும். 160 இற்கும் அதிகமான நாடுகளில் இந்த ஜுகி மிஷின் பாவனையிலுள்ளது. இந்த ஜுகி தையல் இயந்திரத்துக்கு இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளில் சிறந்த வரவேற்பு இருக்கின்றது.

ஆசியாவிலேயே இலங்கை இந்த ஜுகி தையல் இயந்திர மெஷின் தொடர்பில் உயர் தொழில்நுட்ப அறிவைப் பெற்றதுடன் தனது ஆடை உற்பத்தித் துறைக்கு அதிகமாகப் பாவித்து வருகின்றது. அத்துடன் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையானது தேசிய மொத்த உற்பத்தியில் பாரிய பங்களிப்பினையும் அளித்து வருகின்றது. மேற்படி தென்காசியாவில் ஜுகி நிறுவனம் தனது இரண்டாவது பயிற்சி மையத்தினை கொழும்பில் ஆம்பித்து வைத்து பயிற்சி நெறிகளை வழங்குகின்றது. இதனூடாக பலர் நன்மையடைவர் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிங்கப்பூர் ஜுகி நிறுவனத்தின் நிறைவேற்று துணைத் தலைவர் சையிட்டோ நொரியாக்கி தனது உரையில் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் :-

தெற்காசியாவில் ஜுகி நிறுவனம் தனது இரண்டாவது துணிகர பயிற்சி மைய தொடக்க விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பயிற்சி தொடர் இலங்கை ஆடைத் துறை உற்பத்திக்கு நல்ல ஒரு செய்தியாக உள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத் துறை உற்பத்தி வலுவான நிலையில் 2013 ஆம் ஆண்டு 4.3 பில்லியன் அமெரிக்க டொலரினை வருமானமாக ஈட்டியது.

குறிப்பிட்ட இந்த வளர்ச்சி எங்களுக்கு ஒரு வரலாற்று சாதனையாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொருளாதார இலக்குக்கு அமைய ஆடைத் துறை உற்பத்தி 2016 ஆம் ஆண்டு 10 பில்லியன் டொலர்களினை நோக்கி பயணமாக அமைந்துள்ளது. அதேபோல 2020 ஆம் ஆண்டளவில் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது மற்றும் ஆடை உற்பத்தித் துறை ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக நம் நாடு திகழ வேண்டுமென எமது ஜனாதிபதி நோக்காகக் கொண்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், முதல் முறையாக நம் ஆடைத்துறை உற்பத்தி மி 4 உற்பத்தி மட்டத்தில் ஒரு உலகளாவிய பல்தேசிய, சர்வதேச PVH ஸ்தாபனத்துடன் கூட்டுப் பங்காளியாக இணைந்துள்ளது.

இந்த சாதனைகளில் குறிப்பிடத்தக்க வழிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலங்கையின் ஆடை உற்பத்தித் துறைக்கு ஜுகி தொழில்நுட்பத்தின் ஆதரவினை பாராட்ட வேண்டும்.

ஜுகி நிறுவனம் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. இன்று எங்கள் ஆடை உற்பத்தி துறைக்கு 50 சதவீதம் ஜுகி தையல் மெஷின்கள் பயன்படுத்துகின்ற விடயம் இலங்கையை பொறுத்தமட்டில் புதிதல்ல.

சமீபத்திய ஆடை உத்தரவுக்கான வழங்கலை நிறைவேற்றும் நிமித்தம் 750,000 க்கும் அதிகமான ஜுகி தையல் மெஷின்கள் நாடளாவிய மட்டத்தில் மும்முரமாக பயன்படுத்தப்பட்டன.

இன்று இதனை நான் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெற்காசியாவில் ஜுகி தனது இரண்டாவது பயிற்சி மையத்தினை ஆரம்பித்து அதன் மூலம் நம்மவருக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பில் இலங்கையர்களாகிய நாம் பெருமை அடைகின்றோம். தெற்காசியாவில் முதல் மையம் ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே ஜுகி இலங்கையின் சகல ஆடை உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு முக்கியதொரு பங்கினை வகித்து வந்தமைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கும் இலங்கை ஆடை உற்பத்தித் துறை சார்பில், நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக தெற்காசிய சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள இலங்கையின் இயந்திர உற்பத்தி துறையில் ஜுகி நிறுவனத்தினை கூட்டிணைவதற்கு அழைப்பு விடுக்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிங்கப்பூர் ஜுகி நிறுவனத்தின் அதிகாரிகள், ஆடை உற்பத்தித் துறையைச் சார்ந்த அதிகரிகள் மற்றும் இலங்கையின் ஜுகி நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி