ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35

புறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை

முகாமையாளர் உட்பட 94 பேர் கைது

மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி

சூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஐந்து சூதாட்ட நிலையங்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மேற்கொள்ளப் பட்ட இந்த அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சூதாட்ட நிலையங் களின் முகாமையாளர்கள் உட்பட 94 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் பெண்ணொருவரும் அடங்கும். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரசேன நாயக்கவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது ஆலோசனைக்கு அமைய மாளிகாகந்தை மஜிஸ்திரேட் நீதவானிடமிருந்து தேடுதல் நடத்துவதற்கான அனுமதியை பெற்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த அதிரடி சுற்றிவளைப்பை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளனர்.

விவரம்

வேட்பாளர்களுக்குரிய விருப்பு இலக்கங்கள் நாளை

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியி டும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கூடாக நாளை (11) வழங்கப்படவுள்ளன.

விவரம்


ஜெனீவா மாநாட்டுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் பெளஸி சவூதி பயணம்

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கான ஆதரவைப் பெறுவதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வரும் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (9) பகல் சவூதி அரேபியாவுக்குப் பயணமானார்.

விவரம்

போதைப் பொருளற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டம் இன்று வெலிகந்தையில் ஆரம்பம்

அமைச்சர் மைத்திரிபால இன்றைய நிகழ்வில் அதிதி

போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத் திட்டம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை, வெலிகந்தைவில் இன்று 10ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.

விவரம்

நேற்றைய எதிரிகளை அரவணைத்து சமாதானத்தை ஏற்படுத்தினால் நாடு வளம்பெறும்a

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட பாப்பரசர் பிரான்ஸிஸ் விடுத்த செய்தி

கொழும்பு அதிமேற்றிராணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிற்கு இலங்கை வருமாறு விடுத்த அழைப்பினை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருப்பதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

விவரம்

கொழும்பு, கொம்பனித்தெரு விதானகே மாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் 130 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச வருகை தந்தபோது எடுத்த படம். கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முசம்மில், குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர். (படம்: தெஹிவளை கல்கிஸை நிருபர் - அஷ்ரப் ஏ. சமட்)


டயலொக் லீக் றக்பி போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டி இலங்கை கடற்படை அணிக்கும் மலையக சிங்க அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் வெலிசர கடற்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை காணலாம்.

(படம்: உதேஸ் குணரத்ன)





ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன். வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களில் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ