ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

ஸ்ரீலங்கா ரெலிகொம் வென்ற, தேசிய சக்தி வினைத்திறன் விருதுகள் - 2013

ஸ்ரீலங்கா ரெலிகொம் வென்ற, தேசிய சக்தி வினைத்திறன் விருதுகள் - 2013

தேசிய தொலைத் தொடர்பாடல் சேவைகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), இலங்கை தேசிய எரிசக்தி வினைத்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறப்புச் சான்றிதழை பெருமையுடன் வென்றிருக்கின்றது.

சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சுடன் இணைந்து, இலங்கை நிலைபெற்றிருக்கும் வலு அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விருதினை இவ்வருடத்தில் பெற்ற ஒரே தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் இக்கம்பனி மட்டுமேயாகும்.

‘விதுல்க - 2013’ சக்தி கண்காட்சியின் ஆரம்ப விழாவுடன் இணைந்திருக்குமாறு ஒழுங்குபடுத்தப் பட்டிருந்த இந்த விருது நிகழ்வானது, பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் பெரிய அளவில் நடந்தது.

ஸ்ரீலரெ நிறுவனம் சார்பாக, திரு. நிரஞ்சன பந்துல செனிவிரத்ன, ளிமிணி/ ஜிowலீr & திவி, பிரதம மந்திரி டி. எம். ஜயரத்னவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வானது சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் மாண்புமிகு ஏ. ஆர். எம். அப்துல் காதர், அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க மற்றும் இலங்கை நிலைபெற்றிருக்கும் வலு அதிகார சபையின் தலைவர் பிரசாத் கல்ஹென, இலங்கை நிலைபெற்றிருக்கும் வலு அதிகார சபையின் இயக்குனர் நாயகம் டாக்டர் துஷித சுகதபால போன்றோரின் ஆதரவுடன் நடைபெற்றது.

மிகவும் பெருமைக்குரிய தேசிய விருதான இது நிறுவனங்களின் தனித்த ஒரு செயற்றிட்டத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அந்த நிறுவனங்கள் முழுவதிலும் பின்பற்றப்படும் சக்தி முகாமைத்துவம் மற்றும் சக்தி சேமிப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்து, அவற்றில் சிறந்தவற்றுக்கு அளிக்கப்படுவதாகும். இந்த விருதானது, உற்பத்தி, சுகாதாரம் மற்றும் சேவைகள் (ஹோட்டல்கள், வர்த்தக கட்டடங்கள் மற்றும் அரசாங்கத் துறை அலுவலகக் கட்டடங்கள் போன்றவை உள்ளிட்டவை) போன்ற, அகன்ற தொழிற்றுறைப் பிரிவுகளில் கடைப்பிடிக்கப்படும் சக்தி வினைத்திறனை இனங்கண்டு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஐந்து கட்டங்களாக மீளாய்வு செய்யப்படுகின்றன. சக்தி முகாமைத்துவத்திற்கான அர்ப்பணிப்பு, இதுபற்றிய ஊழியர்களின் விழிப்புணர்வு, பயிற்சி, நிதி முதலீடுகள், திட்டமிடல், கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், அறிவித்தல், சக்தி செயற்பாடு, புதுப்பிக்கத்தக்க சக்தியின் அதிகரிப்பினை சக்தியின் மூலவளப் பிரிவுகளில் பங்கிடுதல் மற்றும் தர விரிவாக்கம், கழிவுக் குறைப்பு, வாடிக்கையாளர் மனநிறைவு மற்றும் பசுமைப்படிவம் உட்பட்ட பிற சக்தி சம்பந்தப்படாத விளைவுகள் போன்றவை உள்ளிட்ட ஏழு வெவ்வேறு பிரிவுகளில் விண்ணப்பதாரிகள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

பிரதான வலையமைப்பு அதிகாரியான திரு. பிரியந்த பெர்னாண்டஸ், ஸ்ரீலரெக்குக் கிடைத்த இந்த விருதைப் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது, ‘இந்தச் சாதனையையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். நாம் சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வுடன் இயங்குவதில் இந்த விருது இன்னும் ஒரு படியாகும்’ என்றார். ‘பெரிய கூட்டாண்மை நிறுவனம் என்ற வகையில் நாம் எப்போதுமே சுற்றாடல் பற்றிக் கவனம் செலுத்தி வருகிறோம். எமது வணிகமானது சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, காபன் படிவுகளை வினைத்திறனுடன் குறைப்பது எமது பொறுப்பாகும். சக்தி தூதுவரை நியமித்து, சக்தி முகாமைத்துவக் கழகத்தை நிறுவியதன் மூலமாக நாம் சுறுசுறுப்புடன் செயற்பட்டு, எமது சக்தி இலக்குகளை அடைவதற்காக, சக்தி முகாமைத்துவச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறோம். ஊழியர்களுக்கு சக்தி சேமிப்பு மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவினை ஊட்டுவதற்காக, நாடு முழுவதுமுள்ள ஸ்ரீலரெ அலுவலகங்களில் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன’ என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி