ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

செவ்வாய் இரவு வானில் பூமி

செவ்வாய் இரவு வானில் பூமி

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் கியுரியோசிட்டி இயந்திரம் செவ்வாயின் இரவு வானில் பூமியின் தோற்றத்தை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த புகைப்படத்தில் செவ்வாயின் கீழ் வானில் பூமி ஒரு சிறு ஒளிரும் புள்ளியாக தெரிகிறது. எவ்வாறாயினும் 99 மில்லியன் மைல்களுக்கு அப்பாலும் பூமி சிறு புள்ளியாக தென்படுவது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் செவ்வாயில் மனிதர் சென்றால் அங்கிருந்து பூமி மற்றும் நிலவு வெறுங்கண்களுக்கு தெளிவாக தென்படும் என்று நாஸா கூறியிருக்கிறது.

கடந்த 2012ம் ஆண்டில் செவ்வாயில் தரையிறங்கிய கியுரியோசிட்டி ஆய்வு இயந்திரம் பூமிக்கு தொடர்ந்து தரவுகளை அனுப்பி வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி