ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

பாவனைக்குதவாத 20இ000 கிலோ நெத்தலி கருவாடு கண்டுபிடிப்பு : சுமார் ரூ.50 இலட்சம் பெறுமதி

புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் முற்றுகை

பாவனைக்குதவாத 20இ000 கிலோ நெத்தலி கருவாடு கண்டுபிடிப்பு : சுமார் ரூ.50 இலட்சம் பெறுமதி

மனிதப் பாவைக்கு உதவாத 20 ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய நெத்தலிக் கருவாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள மொத்த நெத்தலிக் கருவாட்டினதும் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாவாகுமென அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார். புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள களஞ்சியசாலையினை நேற்று திடீர் முற்றுகையிட்டு சோதனைக்குட்படுத்திய போதே

பழுதடைந்த நெத்தலிக் கருவாடுகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மேற்படி நெத்தலிக் கருவாடுகள் பழுதடைந்து மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்பட்டன. இவற்றினை அங்கிருந்த சேவையாளர்கள் சுத்தப்படுத்தி புதியவை போன்று பக்கற் செய்து வந்துள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்தே இத்திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட் டிருந்தது. குறித்த நெத்தலிக் கடுவாடுகள் பழுதடைந்த நிலையிலேயே துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவா? என்ற சந்தேக எழுந்திருப்பதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சபையின் அதிகாரிகள் கூறுகின்றன. குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட விருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி