ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

திருமலை மாவட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி

திருமலை மாவட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி

முதலமைச்சரின் வேண்டுகோளையடுத்து கல்வியமைச்சர் நடவடிக்கை

திருகோணமலையில் தேசிய கல்வியியல் கல்லூரியொன்று அமைக்கப்படவுள்ளது. கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பற்றாக்குறை மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இக் குறைப்பாட்டை போக்குவதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, கல்வியமைச்சர் இதற்கான நடவடிக்கை களை எடுத்துள்ளார். கிழக்கு மாகாணத் திலுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 121 பாடசாலைகளுக்கு தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் தொலைக்காட்சிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் சனிக்கிழமை திருகோணமலை விவேகானந்த கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிஷாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன் பிற்பாடு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரை யாடினார்.

இதன்போதே, தேசிய கல்வியியல் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டிக்கொண்டதுடன் தேசிய கல்வியியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டிய இடத்தையும் கல்வி அமைச்சர் முதலமைச்சருடன் சென்று பார்வை யிட்டார்.

அத்தோடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று கிண்ணியா மத்திய கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) விஜயம் செய்த கல்வி அமைச்சர் கல்லூரியை முழுமையாக பார்வையிட்டு இக் கல்லூரியில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பெளதிக வளங்களையும் பெற்றுத் தருவதாக முதலமைச்சரிடம் உறுதியளித்தார். இதன்போது, மாகாண கல்விப் பணிப்பாளர், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் பட்டதாரி பயிலுநர்களை சில திணைக்களங்களில் சேர்த்துக் கொள்வதற்காக இரவு பகலாக விடாது பாடுட்டு உழைத்த பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயை வாழ்த்தியதோடு இந்நிகழ்விற்கு சமுகமளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, மாகாண பிரதம செயலாளர் டி. எம். சரத் அபேகுணவர்தன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். ஏ. ஏ. புஷ்பகுமார, மாகாண கல்வி ஆணையாளர் எம். டி. ஏ. நிஸாம், வலய கல்வி பணிப்பாளர்களான ஏ. எல். எம். காசீம், சுனில் குணதிலக, என். எஸ். பேமசந்திர, யு. எல். எம். காசீம், குருவிட தர்மசேன, எம். எஸ். ஏ. ஜலீல், ஏ. எம். அகமட், என். விஜேந்திரன், ஆர். சுகிர்தராஜன், எம். ஏ. விமலசேன, எஸ். சக்கரவர்த்தி, என். புள்ளேநாயகம், எஸ். சிரிகிரிஸ்னராஜா, பீ. எம். எம். எஸ். எஸ். எஸ். பஸ்நாயக்க, ஏ. விஜயானந்த மூர்தி, பணிப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேயின் இணைப்புச் செயலாளர் மூதூர் ஐ.ம.சு.கூ. தலைவருமான ஜெயினுதீன் அமீர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி