வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ள இலங்கை- ஈராக் கூட்டு ஆணைக்குழு மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள ஈராக் வர்த்தக அமைச்சர் கலாநிதி சபா அல் டீன் அல் சாபி தலைமையிலான குழுவினரை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்ற போது பிடித்த படம்.
(படம்:- கொழும்பு கோட்டை தினகரன் நிருபர் ஏ. எஸ். எம். இர்ஷாத்)


Send money to Sri Lanka - www.timesofmoney.com


வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 221 (வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகையாகும். மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.)Advertisments

 

உள்@ராட்சி சட்டமூலத்துக்கு
கி. மா இணக்கம்

உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு சட்டமூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவிக்கும் பிரேரணை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஏழு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

விவரம் »
 

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்

மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

விவரம் »
 

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது
110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.பிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.

விவரம் »