வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை

அமெரிக்கா கூறுகிறது

ஒசாமா பாகிஸ்தானில் இருப்பது குறித்து உறுதியாக தகவல் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனும் அவனது நெருங்கிய கூட்டாளியுமான அய்மான் அல் ஜவாஹிரியும் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் சுகபோகமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு அளித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த கதவலை மறுத்துள்ள அமெரிக்க துணை பாதுகாப்பு செயலர் வில்லியம் லின்,

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வசித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல, பின்லேடன் இருக்குமிடம் துல்லியமாக தெரிந்திருந்தால் எப்போதோ பிடித்திருப்போம் என்றார்.

மேலும் தொலைக்காட்சிகளில் வெளியான தகவல்கள் மிகைப்படுத்தப்பட் டிருக்கலாம். பின்லேடன் ஐ.எஸ்.ஐ. இன் பாதுகாப்பில் இருப்பதாக வெளியான அந்த செய்தியை நாங்கள் பார்க்கவில்லை என்றும் கூறினார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»