வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010


உளவளத்துணையில் அசாதாரண உளவியலின் பங்கு

உளவளத்துணையில் அசாதாரண உளவியலின் பங்கு

இன்றைய நிலையில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைக்குட் பட்டுத்தான் வாழ்கிறார்கள். பிரச்சினையில்லாத மனிதர்களை உலகில் எங்குமே காணமுடியா துள்ளது. அவ்வாறு தனக்கு எவ்விதமான பிரச்சினையுமில்லை என்று ஒருவர் கூறுவாராயின் அவர் உண்மையில் ஒன்றில் தன்னை ஏமாற்றுகின்றார் அல்லது பொய் சொல்லுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உளவளத்துணை என்பது, உளப் பிரச்சினைக்கு உள்ளானவரின் உள்ளத்தை சீர்மைப்படுத்துவது. இத்துறையை பொறுத்தவரையில் இரண்டு நபர் முதன்மைப்படுத்தப் படுகின்றார்கள். உதவிநாடி, மற்றவர் உளவளத்துணையாளர்.

நெறிபிறழ்வு உளவியல் (Abnormal) என்பது ஒருவரின் சாதாரண விருத்தி போக்கு அசாதாரண நிலையடைவது.  Normal - Abnormal. என்று குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக சாதாரண வழக்கில் காணப்பட்ட ஒரு மனிதனிடத்தில் வித்தியாசமான உளப்போக்குகளான யோசனை, அதிக பயம், சோர்வு, பதகளிப்பு போன்றவை காணப்படும்போது அது உண்மையில் பிறழ்வு நடத்தைகளை வெளிப்படுத்து கிறது. இவ்வாறான மனிதர்கள் அன்றாட நடைமுறை வாழ்வில் பல உளத்தாக்கங்களுக்கு உட்படுகின்றார்கள்.

பிறழ்நிலை உளவியல் தொடர்பான ஆய்வில் இரண்டு எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கங்கள் எமக்கு கிடைக்கின்றன.

1. உளவளத்துணை (Counsellig)

2. உளமருத்துவம் (Maticin)

முதலாவது விடயத்தில் பிறழ்நிலைக்குட்பட்ட ஒருவருக்கு உளவளத்துணை வழங்கும் போது அது உளவியல் தளத்திலிருந்து மோற்கொள்ளப்படுகின்றது. இதனை உளவளத்துணையாளர் மேற்கொள்கிறார். உளமருத்துவம் என்பது மருத்துவ தளத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனை உளமருத்துவர் மேற்கொள்கிறார்.

உளவளத்துணையில் மருந்துகள் இல்லை, மாறாக உளத்தை சீர்மைப்படுத்துவதும் சிநேகபூர்வமான உறவுகளுமே முன்னெடுக்கப்படுகிறது. உளமருத்துவத்தில் பல்வேறுபட்ட மருந்துகள் உட்பட்ட உயிர் இரசாயனவியற் பிரயோகங்களே பயன்படுத்தப்படும்.

ஒருவர் உளத்தாக்கங்களுக்கு உட்படும் போது பல்வேறு வகையில் தாக்கங்களை வெளிக்காட்டக் கூடும். அந்த வகையில் பிறழ்வு நடத்தைகளை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும்.

1. சாதாரண மனமூட்டம் சம்பந்தப்பட்டது (Mood)
 

2. மனமூட்டம் சம்பந்தப்பட்டது (Mood Disorders)

3. சிந்தனை சம்பந்தப்பட்டது (Cognativ Disorders)

சாதாரண மனமூட்டம் சம்பந் தப்பட்டதில் பின்வரும் உளத்தாக் கங்களும் உளநோய்க்கான அறிகுறிகளும்.

Tension  (குழப்பம்) ஆத்திரம், வியர்வை

stress (நெருக்கீடு) கோபம், பசியின்மை, ஓய்வின்மை

Somatization (மெய்ப்பாட்டு நோய்) தலைவலி, இடுப்புவலி, உடல்வலி

Anxiety (பதகளிப்பு) பயம், வியர்வை

Anxiety  :- குறிப்பு - ஐந்து வகைப்படும்

1 GAD (மாயம்) பயம், வேறொரு உலகத்தில் இருத்தல்

2 OCD  (அர்த்தமற்ற எண்ணம்) தொடர்ச்சியான கைகழுவுதல்

3 PANIC ATTACH  (உச்ச பயம்) 10 அல்லது 15 நிமிடத்திற்கு மரணபயம்

4 PHOBIO  (அச்ச நோய்) சனக்கூட்டத்திற்கு பயம், இருளுக்கு, மலை

5 PTSD (நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனவடு) நடைபெற்ற சம்பவம் கண்முன் தோன்றுதல்

Normal Depresion (சாதாரண மனச்சோர்வு) கவலை, சுறுசுறுப் பின்மை

மனமூட்டம் சம்பந்தப்பட்டதில் பின்வரும் உளத்தாக்கங்களும் உளநோய்க்கான அறிகுறிகளும்.

Depresion (மனச்சோர்வு) கவலையில் மூழ்கியிருத்தல், தொடர்ச்சியான யோசனை

Mania (பித்து) அதிகம் கதைத்தல், அளவுக்கதிகமான தன்னம்பிக்கை

சிந்தனை சம்பந்தப்பட்டதில் பின்வரும் உளத்தாக்கங்களும் உளநோய்க்கான அறிகுறிகளும்.

உளமாய நோய்கள் இவை இரண்டு வகைப்படும்

A Cute Psychosis (தீவிர உளமாய நோய்கள்) கட்டுக்கடங்காமல் கத்திக்கொண்டிருத்தல்.

Schizophrenia (நாட்பட்ட உளமாய நோய்கள்) மாயப்புலனுணர்வுகள் காணப்படும்.

மேற்கூறிய வகையில் பிறழ்வு நடத்தைக்கு உட்பட்டவரிடம் இவ்வாறான உளநோய்களும், உளத்தாக்கங்களும், அறிகுறிகளும் காணப்படும். உளவளத்துணைச் செயற்பாட்டில் தொழில் வாண்மை மிக்க உளவளத்துணை யாளர் அவசியம் நெறிபிறழ்வு

உளவியல் என்றால் என்ன? எவ்வாறான உளநோய்கள் காணப்படுகின்றன, அவை ஒவ்வொன்றும் எவ்வாறான அறிகுறிகளை காட்டும். இதற்கான சிகிச்சை, திட்டமிடல் என்ன? என்ற அசாதாரண உளவியல்  (Abnormal)  பற்றிய அறிவு அவசியப்படுகின்றது. ஏனெனில் இவற்றில் விளக்க மான அறிவு இல்லாத போது ஒரு தொழில் வாண்மை மிக்க உளவளத்துணையாளரினால் பாதிப்புக்குள்ளான சேவை நாடிக்கு உதவ முடியாமல் போய்விடும்.

பிறழ்வு உளவியலை பொறுத்த வரையில் உளவளத்துணையின் பின்னணியில் சில வாதப்பிரதி வாதங்களும் காணப்படுகின்றன. திbnorசீal நடத்தைகளை மூளை யின் ஒழுங்குக் குலைவால் ஏற்படும் ஒரு விடயமாக மருத்துவம் விளக்குகின்றது. ஆதலால் மருந்துப் பொருட்களால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்கின்றார்கள். ஆனால் இன்னும் ஓர் சாரார் உளவியல் அணுகுமுறைகளைக் கொண்டு தீர்க்கப்படக் கூடியவற்றுக்கு தேவையற்ற முறையில் மருந்து மாத்திரைகள் பயன்படுத்தப்படு கின்றன என்று குறிப்பிடுகின்றார் கள். எது எவ்வாறு இருப்பினும் உளவளத்துணைச் செயற்பாடு இன்றியமையாத வொன்றாகவே காணப்படுகின்றது.

இதனடிப்படையில் மருந்துகள் இல்லாமல் பிறழ்வு நடத்தைக்கு உட்பட்டவருக்கு உளவளத்துணை வழங்கமுடியுமா? என்றால் அதுவுமில்லை ஏனெனில் எல்லாவற்றுக்கும் சீர்மையம் வழங்கமுடியாது வரையறுக்கப்பட்ட உளநோய்களுக்கு அவசியம் மருத்துவமனைகளில் வைத்து மருத்துவம் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக தீவிர மனச்சோர்வு, (Depresion) பித்து, (Mania), தீவிர உளநோய் (Acute Psychosis), உளப்பிளவை Schizophrenia, ஆனால் உளத்தாக்கம் குறைந்ததன் பின்னர் அவர்களை இயல்பு நிலைக்கு மாற்றுவதற்கு அவசியம் உளவளத்துணை வழங்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் உளவளத்துணையாளர் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.

மேலும் ஏனைய உளநோய்களுக்கு மருந்துகள் அவசியமில்லை ((Stress, Somatization) ஆனால் உளவளத்துணை அவசியம். அதனை உளவளத்துணையாளர் உரிய நுட்பங்கள், சிகிச்சை திட்டங்கள், பொருத்தமான அணுகுமுறைகள் என்பவற்றை பயன்படுத்தி சேவை நாடியின் உள்ளத்தினை சீர்மைப்படுத்த வேண்டும்.

இன்று சமூகத்தில் கூட பிறழ்வு நடத்தைகள் பற்றிய தெளிவில்லாததன் காரணமாக ஒருவருக்கு உளத்தாக்கங்கள் ஏற்பட்டால் அதனை பெரிதுபடுத்துவதில்லை. இதன் காரணமாக இன்று எம்மில் எத்தனையோ சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் அசாதாரண நிலைக்குட்பட்டு பைத்தியங்களாகவும், வாழ்வையிழந்தவர்களாகவும் அலைந்து திரிகின்றார்கள். இவ்வாறான நிலையிலிருந்து சமூகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு உளவளத்துணையாளரினதும் தலையாய கடமையாகும்.

உலகமயமாதலின் காரணமாக மனிதர்கள் நிம்மதியிழந்து, ஓய்வில்லாமல் உளத்தாக்கங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையில் ஒரு பற்றில்லாமல் போகும் போது தன்னுடைய உளக்கிடக்கைளை முறையிட வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பன் தேவைப்படுகின்றான். ஏனெனில் வாழ்க்கையில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒருவர் கூடவேயிருப்பது மனநிறைவையும், ஆறுதலையும் கொடுக்கின்றது. உளவளத்துணைச் செயற்பாட்டில் உளவளத்துணையாளர் சரியான உறவை கட்டியெழுப்பும் போதுதான் உளவளத்துணை வலுவடைகின்றது. உதவி நாடியும் அமைதியடைகிறார்.

எனவே பொருத்தமான அணுகுமுறையை பயன்படுத்தி ஒருவரது நடத்தையிலே நேர் மாற்றங்களை ஏற்படுத்தி இயல்பு நடத்தைகளை உருவாக்க முடியாத போது மாத்திரம் தான் உளமருத்துவரை நாடவேண்டும். அதாவது உளவளத்துணையாளரின் கட்டுப்பாட்டினை மீறிச் செல்லும் போது மட்டுமே உளமருத்துவர் தேவைப்படுகின்றார்.

உளவள ஆசிரியர்

ஏ. றியாஸ்

ரஹ்மானியா ம.வி.

ஏறாவூர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»