வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

“முதிர்ச்சியுள்ள விசுவாசமே புதிய மானிடவியலை ஊக்கப்படுத்தும் காரணியாகிறது”

“முதிர்ச்சியுள்ள விசுவாசமே புதிய மானிடவியலை
ஊக்கப்படுத்தும் காரணியாகிறது”
 

மறைபரப்பு ஞாயிற்றுக்கான பரி. பாப்பரசரின் சுற்றுமடல்

அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் மறைபரப்பு ஞாயிறானது மறைமாவட்ட மற்றும் பங்கு குழுமங்கள், அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள், திருச்சபை இயக்கங்கள் மற்றும் அனைத்து இறைமக்களுக்கும் நற்செய்தி அறிவிப்பதில் தமது அர்ப்பணத்தை புதுப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தையும், திருவழிபாட்டு, மறைக்கல்வி, அன்பு மற்றும் கலாசார வாழ்வை வாழ்வாக்குவதற்கு அழைப்புவிடுக்கின்றது.

மிக உயரிய விழிப்புணர்வுடன் தமது பிரசன்னமாகிய கொடையில் மகிழவும் தமது பாடசாலையில் எம்மை உருவாக்கவும், தம்முடன் ஒன்றித்து வாழவும், தமது வார்த்தையினதும் நற்கருணையினதும் மேசைக்கு எம் குருவும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இவற்றின் வழியாக எம்மை அழைக்கின்றார். அவரே கூறுகின்றார். “என் மீது அன்பு கொள்பவர் மீது, தந்தையும் அன்பு கொள்வார்.

நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்” (யோவா 14.21) இறையன்பின் இச்சந்திப்பினால் மட்டுமே நாம் எதிர்நோக்கி இருப்பதற்கு விளக்கமளித்து எமது இருப்பை உருமாற்றவும் இறைவனோடும் எம்மத்தியிலும் ஒன்றிப்பை வாழவும், எமது சகோதரர் மத்தியில் உறுதியுள்ள சான்று பகரவும் இயலுமாயுள்ளது. (காண்க 1 பேதுரு 3.15) செபத்தினாலும், இறைவார்த்தை தியானத்தினாலும், விசுவாச உண்மைகளைக் கற்பதாலும் ஊட்டம் பெற்று குழந்தைக்குரிய தன்மையில் தன்னை இறைவனிடம் முழுமையாகக் கையளிக்கக் கூடிய முதிர்ச்சியுள்ள விசுவாசமே இயேசுவின் நற்செய்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய மானிடவியலை ஊக்கப்படுத்துவதற்கு தேவையான காரணமாக திகழ்கின்றது.

மேலும் பல நாடுகளில் கோடைக்கால விடுமுறைகளை முடித்துக் கொண்டு திருச்சபையின் வெவ்வேறு செயற்பாடுகளையும் ஒக்டோபர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கின்றோம். திருச்செபமாலையை செபிப்பதன் வழியாக மனுக்கலத்திற்கான இறைத் தந்தையின் அன்பு திட்டத்தைப் பற்றி தியானிக்கவும், மனுக்குலத்தை இறைவன் அன்பு செய்வது போல அன்பு செய்யவும் மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ள திருச்சபை எம்மை அழைக்கிறது. இதுவும் மறைபரப்பின் அர்த்தமல்லவா?

பிரிவினைகளாலும் பாவத்தினாலும் பிளவுபட்டுள்ள மனுக்குலத்திற்கு மீட்பின் கொடையாகவும் ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மீது அன்பு கொண்டார். (யோவா 3:16) இறைவனின் உண்மையான முகத்தின் வெளிப்பாடாகவும் உள்ள தம் அன்பு மகனில் அன்புக் குழந்தைகளாக இருப்புக்கொள்ளவும், அவரில் எம்மை சகோதர சகோதரிகளாகவும் காண இறைதந்தை எம்மை அழைக்கிறார்.

பாஸ்கா திருயாத்திரைக்காக, ஜெரூசலேமிற்கு வருகை தந்த கிரேக்கர்கள் ‘இயேசுவைக் காண விரும்புகிறோம்’ என்று திருத்தூதர் பிலிப்பிடம் கேட்டுக்கொண்டதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.

(யோவா 12;21) நற்செய்தி அறிவிப்பின் அர்ப்பணமும் பொறுப்பும் ‘மறைபரப்புத் தன்மையை தன் இயல்பாகக் கொண்டிருக்கும்” (திருச்சபையின் நற்செய்தி பணி இல- 2) முழுத்திருச்சபைக்கும் உரியதென்பதை இந்நிகழ்ச்சியானது அக்டோபர் மாதத்தில் எம் இதயத்தில் உருவாக்கப்பெற்ற புதிய வாழ்வின் பரிந்துரையாளர்களாவதற்கு எம்மை அழைக்கிறது.

வரலாற்றை உருமாற்றும் உயரிய இலட்சியங்களை வளர்த்து, பொய்யான மாயைகளும் தேவையற்ற பயங்களும் இன்றி புவியில் அனைத்து மக்களும் வாழ்வதற்கான வீட்டை அமைப்பதற்கு பல்வேறு நிலைகளில் வளர்ந்து வரும் தனிமை மற்றும் அதிசயிக்க வைக்கும் அலட்சியத் தன்மை நிறைந்துள்ள பல் இன சமூகத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் நாம், எதிர்நோக்கின் அடையாளமாக எம்மை அர்ப்பணித்து அனைத்துலக சகோதரத்துவத்தை உருவாக்க பயில வேண்டும்.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் புதிய தசாப்தத்தின் பரம்பரையினர் முன்னால், சிறப்பாக நற்செய்தியை பெற்றுக்கொள்ளவும், அதை அறிவிக்கவும் சிறப்புரிமை பெற்றுள்ள ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் இளைஞர் முன்னால் இயேசுவைப் பற்றி பேசுவதற்கு மட்டுமல்ல, அவரை கண்ணால் காணக்கூடிய வகையில் பிரசன்னப்படுத்தி மீட்பரின் முகத்தை ஒளிரச் செய்யவும், 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க யாத்திரிகர்களைப் போல இன்றைய மக்களும் விசுவாசிகளிடம் கேட்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையைத் தாங்குகிறார்கள் என அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவரே உண்மை, அவரிலே தான் அவர்கள் வாழ்வின் உண்மையையும் அர்த்தத்தையும் காண்கிறார்கள்.

தனிப்பட்ட ரீதியாகவும், குழுமமாகவும் மேய்ப்புப் பணி சார்பானதுமான ஆழமான மன மாற்றமின்றி திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரும் முழுத்திருச்சபையையும் தாம் பெற்றுக்கொண்ட மறைபரப்பு பணி ஆணையை நம்பிக்கைக்குரிய முறையில் நிறைவேற்ற முடியாது என்பதே இச்சிந்தனையின் கருத்தாகும்.

உண்மையில் நற்செய்தி அறிவிக்கும் பணிக்கான அழைப்புப் பற்றிய அறிவு நிலையானது. ஒவ்வொரு விசுவாசியையும் மட்டுமல்லாது எல்லா மறைமாவட்ட பங்கு குழுமங்களையும் முழுமையாக புதுப்பித்தலுக்கும் திருச்சபைகள் மத்தியில் மறைபரப்புப் பணி ஒத்துழைப்புக்கான பாரிய திறந்த மனநிலையையும், ஒவ்வொருவரது இதயத்திலும், எல்லா மக்கள் மத்தியிலும் பண்பாடு, இனம் நாட்டினர், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கும் ஊக்குவிக்கின்றது.

சகோதரத்துவம், தாழ்ச்சி, அமைதி என்பவற்றின் ஊற்றாகவும் சுதந்திரத்தினதும் முன்னேற்றத்தினதும் புளிப்பு மாவாகவும் உள்ள நற்செய்தியில் காணப்படும் ஒற்றுமை எனும் வரையறையினுள் பல் பண்பாட்டு உறவை உள்வாங்குவதற்காக திருச்சபை ஒருமை வாழ்வை ஊக்குவிக்க இடைவிடாது முயலும். பல் மறைமாவட்ட குருக்கள் பரிமாற்றத்தாலும் துறவியர், மறையாசிரியர், பொதுநிலை மறைப்பணியாளர்களாலும் இவ்விழிப்புணர்வு நிலை உயர்வடைகிறது. (காண்க, தி. நசெபணி, இல 08) திருச்சபை உண்மையிலேயே ‘கிறிஸ்துவின் ஓர் அருளடையாளம் போல் விளங்குகின்றது.

திருச்சபையின் மறைபரப்பு பணியினால் அனைத்து மக்களையும் தம்முடன், தந்தையுடனும் தூய ஆவியுடனும் உறவுகொள்ள வைக்கும் இறைமகன் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதனாலேயே இத்திருச்சபை உறவு வாழ்வு உருவாகிறது. (1 யோவா 1.3) இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே புதிய உறவொன்றை கிறிஸ்து நிறுவுகிறார். ‘கடவுள் அன்பாயிருக்கிறார். (1 யோவா 4.8) என்பதை அவரே நமக்கு வெளிப்படுத்துகிறார்.

அதே வேளையில் அன்பு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டளையே மனிதரின் அடிப்படை சட்டம் எனவும் அவர் நமக்கு கற்பிக்கின்றார். எனவே அன்பின் பாதை எல்லா மனிதருக்கும் திறந்திருக்கிறது எனவும் அனைத்துலக சகோதரத்துவத்தை நிறுவும் முயற்சி வீணானதல்ல எனவும் அவர் இறையன்பில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உறுதியளிக்கிறார். (இன்றைய உலகில் திருச்சபை, இல. 38)

நற்கருணையில் திருச்சபை “உறவு வாழ்வுத் தன்மையை” நற்கருணையிலிருந்து அப்ப இரசத்தில் பிரசன்னமாயிருக்கும் கிறிஸ்து தமது அன்பு பலியினால் தமது உடலாக திருச்சபையை ஏற்படுத்தி எம்மை மூவொரு இறைவனுடனும் எம் ஒவ்வொருவரிடையேயும் ஒன்றிப்பை ஏற்படுத்துகிறார். (காண்க 1 கொரி 10.16) அன்பின் அருளடையாளம் எனும் அப்போஸ்தலிக்க அறிவுரையில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

‘அருளடையாளத்தில் நாம் கொண்டாடும் அன்பை எமக்கென்று மட்டும் கொண்டிருக்க முடியாது. இயல்பிலேயே அது எல்லோரோடும் பகிரப்பட வேண்டும். இறைவனின் அன்பே உலகுக்குத் தேவையாயுள்ளது. அது கிறிஸ்துவைச் சந்தித்து அவரை விசுவாசிக்க வேண்டியுள்ளது. (இல 84) இவ்வகையில் நற்கருணை திருச்சபை வாழ்விற்கு மட்டுமல்ல.

இவளது மறை தூதுப்பணிக்கும் ஊற்றும் ஊரணியாகவுள்ளது. “உண்மையில் நற்கருணைத் திருப்பபையானது. மறைத்தூதுத் திருச்சபையாகும். ‘தந்தையுடனும் அவருடைய மகன் இய§சு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கின்றோம். (1 யோவா 1.3) என உறுதியாக அறிக்கையிட முடியும்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, மறைப் பணியின் பரந்த தன்மையை உற்று நோக்குவதற்காக இதயக் கண்ணை அகலத் திறந்திருக்கும் உலக மறைபரப்பு ஞாயிறு தினமாகிய இன்று நற்செய்தி அறிவிக்கும் திருச்சபையின் பணியில் உயிரூட்டுமான பங்காளிகளாக எம்மைக் காண்போம். எமது திருச்சபைகள் மத்தியில் உயிரூட்டத்தின் அடையாளமாக மறைபரப்பு ஆர்வம் எப்பொழுதும் திகழ்கிறது.

(மீட்பரின் பணி ) மீட்பளிக்கும் அன்பின் நம்பிக்கையுள்ள தூதுவர்களாக ஒற்றுமை, சகோதரத்துவம், ஒருமைப்பாடு என்பவற்றின் தனித்துவ சாட்சியமாக திருச்சபைகளின் ஒத்துழைப்பு திகழ்கிறது. எனவே, செபிப்பதற்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இளம் திருச்சபைகளுக்கு உண்மையான சகோதர உதவி புரியவும் எனது அழைப்பை புதுப்பிக்கிறேன். அன்பினதும் ஒருமைப்பாட்டினதும் இத்தகைய அடையாள செயல்கள் மறைப்பரப்பு நாடுகளில் பணியாற்றும் குருக்கள், குருமாணவர்கள், மறை யாசிரியர்களுக்கு உதவியாக அமைகின்றன. இப்பகிர்வு பணியை மேற்பார்வை செய்ய உதவிபுரியவும் திருத்தந்தையின் மறைபரப்பு சபையினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மறைபரப்பு ஞாயிறுக்கான வருடாந்த செய்தியை நிறைவு செய்கையில் தமது உயிரைக் கூட தியாகம் செய்யும் அளவுக்கு மிகத் தொலைநாடுகளிலும் கஷ்டமான இடங்களிலும் இறையாட்சிக்கு சான்று பகர தம்மை அர்ப்பணித்துள்ள அனைத்து மறைபரப்பாளர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டைத் தெரிவிக்கிறேன்’.

நற்செய்தியை அறிவிப்புப் பணியில் முன்னிலை வகிக்கும் அவர்களுக்கே ஒவ்வொரு விசுவாசியும் தனது நட்பையும் நெருங்கிய ஒன்றிப்பையும் ஆதரவையும் வழங்குகின்றனர். ‘முகமலர்ச்சியோடு கொடுப்பவரை அன்பு செய்யும்’ (2 கொரி 9.7) இறைவன் அவர்களை ஆன்மீக ஆர்வத்தினாலும் ஆழ்ந்த மகிழ்ச்சியினாலும் நிரப்புவாராக, மரியாவின் ‘ஆம்’ எனும் பதிலைப்போல சகோதர அன்புறவுக்கான இறை அழைப்புக்கு அன்புறவுக் குழுமம் அளிக்கும் ஒவ்வொரு தாராளமான பதிலும் புதிய அப்போஸ்தலிக்க திருச்சபைத் தாய்மைக்கு ஊக்கமளித்து, காலம் நிறைவேறிய போது தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பிய (கலா 4.4) அன்பே உருவான கடவுளின் மறைப்பொருளின் முன்னிலையில் பணிவோடு கூடிய அச்சத்தில் புதிய திருத்தூதர்களுக்கு தன்னம்பிக்கையும் துணிவையும் வழங்குகின்றது.

இப்பதிலானது ‘அனைத்து மனுக்குலத்தையும் ஒரே இறைமக்களாக உருவாக்கும் தூய ஆவியின் ஒரே ஆலயமாகக் கட்டியெழுப்பவும்” திருச்சபையின் நற்செய்தி பணி 07) விரும்பும் இறைவனின் திட்டமானது நிறைவு பெறும் என்பதை ‘எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ள’ (உரோம 12.12) எல்லா விசுவாசிகளையும் திறமையடையச் செய்கிறது.

அருட்பணி

லொயிட்சாந்திகுமார் -

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »