வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010


ஒலுவில் மீன்பிடி, வர்த்தக துறைமுகப் பணிகளை டிசம்பர் மாதத்தில் ப+ர்த்தி செய்யத் திட்டம்

ஒலுவில் மீன்பிடி, வர்த்தக துறைமுகப் பணிகளை
டிசம்பர் மாதத்தில் ப+ர்த்தி செய்யத் திட்டம்
 


ஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் வீதியை 100 அடி அகலமாக்கும் வேலைகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (படம்: ஒலுவில் நிருபர்)

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் யாவும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் ஹொஜ்காட் நிறுவன உயரதிகாரி தெரிவித்தார்.

ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. இதில் ஒன்று மீன்பிடித்துறைமுகமாகவும் இரண்டாவது வடக்குப் பக்கம் வர்த்தகத்துறைமுகமாகவும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்துறைமுகத்தின் பணிகள் பூர்த்திடையும் நிலையை எட்டியுள்ளதையடுத்து அரசாங்கத்திடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.

டென் மார்க் அரசாங்கத்தின் 46.1 மில்லியன் யூரோ செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இத்துறைமுக நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியுள்ள 56 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இப்பாரிய இரண்டு பகுதிகளையும் கொண்ட (மீன்பிடி வர்த்தகம்) துறைமுகங்கள் அமைந்துள்ளன.

ஒலுவில் துறைமுக எல்லைக்கு வடக்கே 330 மீற்றர் நீளமான வர்த்தகக் கட்டடத் தொகுதி, எட்டு மீற்றர் ஆழமான கப்பல் சரக்கு இறக்கும் இடத்துடன் இணைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை சுற்றி பாதுகாப்பு மதில் அமைக்கும் வேலைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் 100 அடி அகலமாக்கும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த வருடம் இறுதிக்குள் (2010 டிசம்பர்) ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»