வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

இந்தியாவுடன் சுமுகப் பேச்சுக்கு பாகிஸ்தான் விருப்பம்

இந்தியாவுடன் சுமுகப் பேச்சுக்கு
பாகிஸ்தான் விருப்பம் - குரே'p
 

காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவுடன், சுமுகமான முறையில் பேசித் தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடு களுக்கும் பயங்கரவாதம் ஒரு பொதுவான எதிரி என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இருதரப்பு உறவுகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவுடன் சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.

இருநாடுகளும் யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளின் நட்பு நாடு என்ற முறையில் அமெரிக்கா தன் சக்திக்குட்பட்ட வகையில் செயலாற்ற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவை என்று அமெரிக்காவும் உணர்ந்திருக்கிறது.

நாட்டின் பிரிவினையின் வலியை அனுபவித்திராத இருநாடுகளின் இன்றைய இளம் தலைமுறையினர், நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் அதிகமாக இருப்பதுடன், அமைதி தான் வழி என்பதையும் நன்கறிந்திருக்கின்றனர்.

பயங்கரவாதம் இருநாடுகளுக்குமான பொது எதிரி, இருநாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் குரேஷி மேலும் தெரிவித்தார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»