வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

வெலிகமவில் கிரிக்கெட் போட்டி

வெலிகமவில் கிரிக்கெட் போட்டி

வெலிகம புதிய தெரு ‘ஸிக்ஸ் ஹீடர்ஸ்’ விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு அறுவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று வெலிகம அறபா மத்திய கல்லூரி பதியுத்தீன் மஹ்மூத் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

21 வயதுக்குட்பட்டவர்களுக்கான இப்போட்டியில் வெலிகம புதிய தெரு அணிகளான ஸிக்ஸ் ஹீட்டர்ஸ் மற்றும் யங் ஸிக்ஸ் பிறதர்ஸ் ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.

இதில் ‘யங் ஸிக்ஸ் பிறதர்ஸ்’ அணி வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதோடு 10 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு கிண்ணத்துடன் ஆறு ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

இப்போட்டியில் ஆட்ட நாயகனாக எம். மொகமட் தொடர் நாயகனாக நுஸ்ரி அஹ்மட், சிறந்த துடுப்பாட்ட வீரராக அkஸ் அஹ்மட், சிறந்த பந்து வீச்சாளராக அத்ரி மெளலானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு வைபவத்தில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேமால் குணசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார். (அ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »