வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்

2011 ஒக்டோபருக்கு முன்

குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும்
மின்சாரம் வழங்கப்படும்

யாழ். குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் 2011 ஒக்டோபருக் கிடையில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.என்.சி. பேர்டினண்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் மின்வலு எரிசக்தி அமைச்சு அடுத்தடுத்து பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார்.

இது விடயத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். குடாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் சம்பந்தமான விபரங்களை அவர் ஜனாதிபதிக்கு விபரமாக தெரிவித்தார்.

மேலும் குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

எவ்வாறெனினும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், 20 வருடம் மக்கள் பட்ட கஷ்டம் போதும்.

இனியும் அவர்களுக்கான நன்மைகளில் தாமதம் வேண்டாம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

வவுனியாவில் நடைபெற்ற வட மாகாண அபிவிருத்தி மீளாய்வு நிகழ்வின் போது இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். குடாநாட்டின் அரைவாசிப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பெருமளவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும்.

மின்சார விநியோகத்துக்கு உபயோகப்படுத்தும் சில உபகரணங்கள் பழுதடைந்தமையே தாமதத்துக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் பெருமளவு பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட பிரதேச அதிகாரிகளால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உள்ளூர் இணைப்புகளில் தாமதம் ஏற்படுமானால் தேசிய மின் தொகுதியிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மின்சாரம் சம்பந்தமான மேற்படி விடயத்தில் அமைச்சர் டக்ளசுக்கு ஆதர வாக யாழ். குடாநாட்டிற்கு விரைவில் மின் சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அழுத்தமாக வலியுறுத்தினார். (ஸ - ர - து)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
»