வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்

இலங்கை - ஈராக்

கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்

இலங்கை- ஈராக்குக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த அமர்வில் ஈராக் வர்த்தக அமைச்சர் கலாநிதி சபா அல்-தீன் அல்-சாபி உட்பட இரு நாட்டு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கும், ஈராக்குக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளன.

சுமார் எட்டு வருடங்களுக்கு பின்னர் மேற்படி அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டு ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு 2002ம் ஆண்டு ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் இடம்பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரு-து)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
»