வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

ஐ.சி.சி. தரவரிசை மீது ஹஸ்ஸி சாடல்

ஐ.சி.சி. தரவரிசை மீது ஹஸ்ஸி சாடல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மோசமான தரநிலை இதுவாகும். இந்த நிலையில் ஐ.சி.சி. கூறும் தரவரிசையை விட எங்களது அணி பலமானது என்று அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியிருக்கிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘நாங்கள் உலகின் 5வது சிறந்த அணி என்று நான் கருதவில்லை. தரவரிசை எங்கள் அணியின் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என்றே நினைக்கிறேன். தரவரிசை சொல்வதை விட நாங்கள் நிச்சயம் சிறந்த அணி தான் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் உலகின் 5வது சிறந்த அணி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது’ என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »