வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
மக்களின் அபிலாஷைகளை நிறைவுசெய்துள்ள ஓராண்டு

மக்களின் அபிலாஷைகளை நிறைவுசெய்துள்ள ஓராண்டு

நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடக்கம், அரசியல் வாக்க்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு தேவையான கால முகாமைத்துவம் பற்றி சிந்திப்பது தற்போது சாலச்சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் கபீர் ஹாஷிம் அண்மையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் பலவந்தமாக சட்டங்களை அமுல்படுத்தியது எங்களுக்கு தெரியும். நிதிச்சட்டதித்தினை எதுவித பொறுப்புணர்ச்சியுமில்லாமல் நிறைவேற்றிக்கொண்டார்கள். அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்று எங்களாலும் அப்படி செய்ய முடியாது. நாங்கள் மக்களுக்கு உத்தரவாதமளித்தது அப்படியான ஒரு அரசை நாங்கள் ஒருபோதும் உருவாக்குவதில்லை என்றே. நாங்கள் சட்ட வரையறைக்குள்ளேயே எங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்றோம்.

கூட்டு எதிர்க் கட்சியினர் சிறிய மனிதர்களைப்பற்றி பேசுகின்றனர். அவர்களது ஆட்சியின்போது சிறிய மனிதர்கள் மீது அடித்த அடியே அவரகளால் இன்னும் எழுந்திருக்க முடியாமல் உள்ளது. என்கிறார் அமைச்சர் ஹாஷிம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்கள் இப்போது சிறிய மனிதனைப்பற்றி பேசுகினறனர். எங்களுக்கு ஒரே வருடத்தில் வித்தை காட்ட முடியாது. ஆனால் நாங்கள் இடுகின்ற அடித்தளம் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே முன்னணி நாடாக எம் நாட்டினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையே நல்லாட்சி எடுத்து வருகின்றது.

அரசாங்கத்தினை பொறுப்பேற்று ஒரு வருடத்தினைப் பூர்த்திசெய்கின்ற இத்தருணத்தில் பலமான பொருளாதார நெருக்கடிகளுக்குப் பல காரணங்கள் உள்ளன.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. பொது மக்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் சட்டம் ஒழுங்குக்கு உடபட்ட தார்மிக சமூகமே. அதனை நாங்கள் நிலைநிறுத்தவே அயராது உழைத்து வருகிறோம். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கம் ஒன்றினை அமைத்துள்ளோம். புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்க அரசியலமைப்பு சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். சுயாதீன ஆணைக்குழு வெற்றியளித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க முடிந்துள்ளதுபோன்று இன்னும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மக்களுக்கு சட்டத்திலுள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது நீதியானதும் நேர்மையானதுமான சமூகமாகும். கடந்த காலங்களில் வளப்பங்கீடு இடம்பெற்றதில் பாரிய முரண்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒரு நபருடைய தலா வருமானம் 4000 அமெரிக்க டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் நாளொன்றுக்கு 2 டொலருக்கும் குறைவான வருமானம் பெற்ற மக்களே இருந்தனர் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் கானப்பட்டனர். கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு ஏற்ப மொத்த வருமானம் சமமாக பங்கிடப்படக்கூடிய வேலைத்திட்டம் ஒன்று அமுலில் இருக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இந்த அரசாங்கம் சமூக சந்தைப் பொருளாதார முறையொன்றினைப் பின்பற்றியது.

தேசிய ஒற்றுமைக்கு கடந்த வாரத்துடன் ஒரு வதாகிவிட்டது. பல இடக்கரடக்கல்கள் இருந்தபோதிலும் சாதித்துள்ளது. அரசியல் வசதிகளுக்கான இணைப்பாகும். இரு தரப்பினரதும் அதாவது ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அபிலாஷைகளை நிறைவு செய்துள்ளது என்ற காரணத்தினாலேயே இன்றுவரை நிலைத்திருக்கின்றது.

எதிர்தரப்பு உறுப்பினர்கள் தொடருகின்ற கூட்டணிக்கான உத்வேகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ வரவில்லை. இரு கட்சிகளினதும் முக்கிய ஆதரவாளர்களில் இருந்தே வருகின்றது. கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் 51 அங்கத்தவர்களின் தயவுடன் இயங்கி வருகின்றது ஆகவே இது எதிர் தரப்பின் முக்கிய முகாமாக காணப்படுகின்றது. அவர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வமான தலைவர் இல்லை. அவர்கள் எதிர்கட்சித் தலைவர் பதவியினை கேட்டார்கள். அது சரியான நேரத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் மறுக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத் தலைவரை போலல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியாயமான தேவைகளுக்காகவன்றி தனது அமைச்சர்களின் செயற்பாடுகளில் ஒருபோதும் தலையிடுவதில்லை. வித்தியாசமான கருத்துக்கள் இருந்தபோதிலும் பரஸ்பர மரியாதையுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டு நன்மைக்காக கருமமாற்றி வருகின்றனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை இல்லை. உண்மையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய திருத்தங்களை கொண்டுவர மிகவும் ஆர்வமாக உள்ளார். ராஜபக்ச யுகத்தில் காணப்பட்டது போன்ற வரம்பு மீறல் நடவடிக்கைகளை தவிர்க்க உதவும் என அவர் நம்புகிறார். இதனை நிறைவுசெய்துகொள்ள அவருக்கு ஜனாதிபதியினது மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரதும் ஆதரவு இன்றியமையாததாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.