வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்ைகயான செயற்பாடுகள் மேலும் துணிச்சல் பெறட்டும்

நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்ைகயான செயற்பாடுகள் மேலும் துணிச்சல் பெறட்டும்

நல்லாட்சி அரசாங்கத்திற்குக் கடந்த வியாழக்கிழமையுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்த ஓராண்டில் பல சவால் மிகுந்த பாதைகளைக் கடந்து வந்துள்ள அரசாங்கம், நாட்டு மக்கள் மனத்தில் நிரந்தரமாய் ஓரிடத்தைத் தக்க வைத்துக் ெகாள்வதற்கும் சர்வதேச ரீதியில் நாட்டின் செல்வாக்கை நிலைநாட்டிக்ெகாள்வதற்கும் இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்கள் எண்ணற்றவை என்பது எல்லோரும் அறிந்ததே!

என்றாலும், அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியிருக்கும், நிறைவேற்றி வரும் பணிகள் குறித்து, அரசியல் நோக்கங்களைத் துறந்து நோக்கினால், எவராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில், தனித்து ஓர் அரசியல் கட்சியினால் நிர்வகிக்கப்படும் அரசாங்கத்திற்கும் சுய நோக்கின்றி ஏனைய அரசியல் அமைப்புகளையும் அரவணைத்துக்ெகாண்டு முன்னெடுக்கப்படும் ஒரு நல்லாட்சிக்குமி டையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. வேறுபாடுகள் என்பதைவிடவும் அவற்றைச் சவால்கள் எனச்சொல்வதே சாலப்பொருந்தும்.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆட்சியை முன்னெடுத்து நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றுகொண்டி ருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, ஓர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மக்கள் விடுதலை முன்னணியையும் இணைத்துக்ெகாண்டு இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டை நிர்வகிப்பதென்பது பாராட்டத்தக்கது. இதனை சர்வதேச நாடுகளும் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்ைகயான செயற்பாடுகள் என வகை பிரி த்துப் பார்க்குமிடத்து, ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்ைககள், மூடப்பட்ட கொலை வழக்குகள் தொடர்பிலான மீள் நீதி விசாரணை, பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்பட்டமை, தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டு வந்தமை, காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தமை ஆகிய செயற்பாடு களைக் கோடிட்டுக்கூற முடியும். அதேநேரம், பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குத் தலை வணங்கியமையும் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக அமைந்தது எனலாம்.

ஆயினும், அண்மைய காலமாக அதிகம் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு விடயமாக காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தை அமைப்பது முக்கியமானதாக விளங்குகிறது. இஃது முற்றிலும் ஒட்டு மொத்த அரசின் அல்லது நாட்டின் பொறுப்புக் கூறலில் உள்ள முக்கிய வகிபாகத்தைப் பறைசாற்றுவதாக இருக்கின்றது எனலாம். பொதுவாக இலங்கை மீது சர்வதேசம் கொண்டிருக்கும் தப்பபிப்பிராயத்தைக் களையவும் நன்மதிப்பை நிலைநிறுத்துவதற்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அலுவலகம் அமைக்கும் செயற்பாட்டின் ஊடாக மேற்கொள்ள முடியும்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளக ரீதியில் என்னதான் நல்லிண க்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதனை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டிய ஒரு தேவைப்பாட்டுக்குள் அரசு நிர்ப்பந்திக்கப்படிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணைவாக, பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் நம்பகமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கு இந்தக் காணாமற்போனோர் அலுவலகம் முக்கிய பங்காற்றும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

தென்னாபிரிக்காவில் 1990களின் நடுப்பகுதியில் தேசிய ஐக்கியத்தையும் மீளி ணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கான சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் பணிகளைப் போன்று அல்லாவிட்டாலும், இலங்கைக்ேகயுரிய தனித்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்பட்டு உண்மையைக் கண்டறிந்து தீர்வினைப் பெற்றுக்ெகாடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருக்கின்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி தென்னாபிரிக்க ஜானதிபதி நெல்சன் மண்டேலா, சட்டத்தை நிறைவேற்றி பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் தலைமையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை அமைத்தார். அதன்படி 1996இல் விசாரணைகளை ஆரம்பித்த இந்தக் குழு 1960 முதல் 1994 வரை இடம்பெற்ற நிறவெறிக்கு எதிரான செயற்பாடுகளின் உண்மையைக் கண்டறிந்து நிவாரணம் வழங்கியது. 2002ஆம் ஆண்டு வரை இந்தக் குழுவின் பணிகள் தொடர்ந்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறவும் குற்றமிழைத்தவர்கள் மன்னிப்புக் கோரவும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தோரில் சுமார் ஆறாயிரம்பேரின் மன்னிப்புக் கோரிக்ைககள் நிராகரிக்கப்பட்டமை இங்குக் குறிப்பிட்டுக் கூற வேண்டிய தொரு விடயமாகும். ஏனெனில், அரசாங்கம் அமைக்கவிருக்கும் காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக நாடு காட்டிக்ெகாடுக்கப்படும் என்றும் படை வீரர்கள் பலிக்கடாவாக்கப்படலாம் என்றும் சில எதிரணி அரசியல்வாதிகள் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஆணைக்குழு விசாரணையின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு அரசியல் ரீதியிலும் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டது. ஆகவேதான், ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவின் மாதிரியைப் பல்வேறு தரப்பினரும் பிரஸ்தாபித்திருந்தனர். எனினும் அந்த நாட்டில் அப்போது இருந்த சூழ்நிலைக்கும் இலங்கையின் தற்போதைய சூழ் நிலைக்கும் அரசியல் பக்குவத்திற்குமிடையிலான இடைவெளிகளைக் கருத்திக்ெகாண்டு, இலங்கைக்கு ஏற்ற விதத்தில் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரிகளும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எந்த வகையிலும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு அனுமதிப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்திக் கூறியிருந்தும், எதிரணியில் சிலர், இன்னமும் தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பொய்ப்பரப்புரைகளைச் செய்து வருகின்றனர்.

எனவே, நல்லாட்சி அரசாங்கத்திற்குப் பக்கபலமாக உள்ள அரசியல் கட்சிகளின் துணையுடன் இனவாதச் சக்திகளை நாட்டு மக்களுக்கு இனங்காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதை இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். விசேடமாக 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இழக்கப்பட்ட மனித உயிர்கள், சொத்துகள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதுடன், அதற்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளின்போது ஏற்பட்ட இழப்புகளையும்கூட இந்த அலுவலகம் கண்டறியவிருக்கின்றது. மேலும் 1971 ஆம் ஆண்டின் கிளர்ச்சி முதல் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்ைக விடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நன்மையடைவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். அதேநேரம் தற்போது காணாமற்போனோர் தொடர்பில் கலக்கமடைந்திருக்கும் உறவுகளுக்கு ஒரு நிரந்தர விடை கிடைக்கும்.

நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்னம பயப்பது மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் இலங்கையில் செல்வாக்கினை நிலைநிறுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்ைகயான செயற்பாடுகளை மேலும் துணிச்சலுடன் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.