புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

ஐடியல் எஞ்சினியரிங் உங்கள் கனவை நனவாக்குகிறது

ஐடியல் எஞ்சினியரிங் உங்கள் கனவை நனவாக்குகிறது

உங்கள் கனவை நனவாக்குவதற்காக ஒரு பொறியியல் நிறுவனம் உங்களுக்குத் தேவைப்படும்போது தொழில்வாண்மை, தகுதியான ஆளணி, உரிய வேளையில் நிர்மாணத்தைப் பூர்தி செய்யும் திறன் முதலானவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும். இந்த அனைத்துத் தகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதுதான் ஐடியல் என்ஜினியரிங் தனியார் நிறுவனம்.

தொழில்சார் பொறியியலின் ஒழுக்காற்றுத்தன்மை வடிவமைப்பு, நிர்மாணம் மற்றும் சூழலின் இயற்கை அமைப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.

ஐடியல் என்ஜியனிரிங் பிறேவேட் லிமிடட்டில் உள்ள நிபுணத்துவமிக்க குழு, சகலரையும் கருத்திற்கொண்டு, உள்ளக மற்றும் வௌிப்புற வடிவமைப்புகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ஐடியல் என்ஜினியரிங் மலிவான விலையில் தரமான சேவைகளை உச்ச திருப்தியுடன் அதன் வாடிக்ைகயாளர்களுக்கு வழங்கி வருகிறது.

ஐடியல் என்ஜினியரிங் பரந்த தொழில்சார் நிபுணர்குழு ஒன்றினைக் கொண்டுள்ளது. ஆய்வு, சுருக்கமான வளர்ச்சி, கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பு, இயந்திர மற்றும் மின்சார சேவைகள் கழிப்பறை குழி வடிவமைப்பு, நிலத்தை ஒழுங்கமைத்தல், கேள்விப்பத்திரங்களை ஆவணப்படுத்தல், நிர்மாண முகாமைத்துவம் போன்றவற்றை உயரிய சர்வதேச தரத்தில் மேற்கொண்டு வருகிறது.

நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள Ideal Engineering (Pvt) Ltd., தரமான சேவைகளை மலிவான விலையில் வழங்குவதனை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

Ideal Engineering ஆல் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமனை குடியிருப்புகள், நகரம் மற்றும் கடலை நோக்கியதாகக் காணப்படுகிறது. இந்த அடுக்கு மாடி மனைகள், கொழும்பிலுள்ள ஆடம்பர வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதத்தில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் பிரபலமான இலங்கைக் கட்டடக் கலைஞர்களால், சர்வதேச தரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கட்டடப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணத்துறையில் காணப்படுகின்ற சவால்களை ஏற்று, குறுகிய காலத்தில் கட்டடங்களைப் பூர்த்திசெய்து கொடுத்துள்ளது. Ideal Engineering அனுபவமுள்ள ஊழியர்களையும் நவீன உபகரணங்களையும் கொண்டுள்ளது.

தெஹிவளை நகரின் வண்வற் பிளேசில் இலக்கம் 41இல் ஐடியல் என்ஜினியரிங் (Ideal Engineering) க்ரீன் ஸ்டார் சிடி (Green star city) என்ற பெயரில் இன்னுமோர் ஆடம்பர மனைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் துறையில் அனுபவமுள்ள இந்நிறுவனம், மனத்தைக் கவர்கின்ற, அழகான இந்திய மகா சமுத்திரத்தை நோக்கியதாக அமைந்துள்ளது. இந்த மாடி மனைக்குடியிருப்புகள் நவீன கட்டடக் கலைக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்றைய நவீன நாகரிகத்துக்கு ஏற்ற வகையில், உள்ளக வசதிகள் உல்லாச நகரில் உள்ளவாறான வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, நிலமாடியில் அதிநவீன் ஷொப்பிங் கொம்ப்ளெக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாடியில் நீச்சல் தடாகமும் உடற்பயிற்சிக் கூடமும் (ஜிம்) அமைக்கப்பட்டுள்ளன.

அடுக்கு மனைக் குடியிருப்பிலிருந்து இலகுவாகச் செல்லக்கூடிய விதத்தில் சுற்றுப்புறத்தில் ஹொட்டல்கள், வங்கிகள், மருத்துவ மனைகள், சினிமா, நிகழ்ச்சி மண்டபங்கள், நவீன சந்தைத் தொகுதி, வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் முக்கியமான இடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கத அம்சங்களாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.