புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

மெற்றோபொலிட்டன் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு

மெற்றோபொலிட்டன் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீரா சாஹிபின் அமெரிக்கா லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லூரியின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக , இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் நவவி, இசாக் ஹாஜி, மலேசியா தூதுவர், துருக்கி நாட்டுக்கான தூதுவர், துபாய், மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சோர்ஹட் அக்பினர் உயர்கல்வியமைச்சின் கீழ்உள்ள தொலைக் கல்வி நிறுவனத்திண் பணிப்பாளர் வஜிரா பெரேரா மற்றும் பட்டதாரிகளது பெற்றோர்களும் விரிவுரையாளர்ளும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன் -

தன்னுடன் கொழும்பு சாஹிராக் கல்லுாரியில் பயின்ற கலாநிதி சிறாஸ் தனது பாடாசலை நண்பன் என்றும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டவர் என்றும் அவரது இக் கல்லுாரியில் இலங்கையில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகின்றது.

இங்கு 85 க்கும் மேற்பட்டோர் ஆங்கில டிப்ளோமா, சைக்கலோஜி சமூக விஞ்ஞானம், மொழிகள் தொழில்நுட்பம், முகாமைத்துவம் போன்ற பயிற்சி நெறிகளை பயின்று வெளியேறுகின்றனர். மேலும் இங்கு 650 மாணவர்கள் இங்கு கல்வி கற்று உலகில் நாலா பாகங்களிலும் பறந்து சிறந்த கல்வியலாளர்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்கா மற்றும் லண்டன், கல்வி நிலையங்களுடன் இணைந்து சர்வதேச மட்டத்தில் தமது பட்டப் படிப்பையோ, டிப்ளோமா சான்றிதழ்களை பெற்று முன்னேறுவதற்கு காலாநிதி சிறாஸ் மீரா சாஹிபை தலைவராகக் கொண்டு வரும் இக் கல்லுாரி மேலும் விருத்தி பெற்று இந்த நாட்டின் கல்விச் சமுகத்திற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்று வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.