புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

நயன்தாராவுக்காக மதம் மாறிய காதலர்

நயன்தாராவுக்காக மதம் மாறிய காதலர்

தமிழ் பட இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நடிகை நயன் தாராவுக்காக கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த ~நானும் ரவுடிதான்' பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகி றார்கள் என்பது பழைய செய்தி.

புதிய செய்தி, விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவிற்காக இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார் என்பதுதான். ஏற்கனவே, நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யு+ காரும், பெசண்ட் நகரில் வீடும் வாங்கிக் கொடுத்தார். மேலும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் அதற்கு யாராவது ஒருவர் மதம் மாற வேண்டுமே!

ஏற்கனவே, இயக்குனர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி னார் நயன்தாரா. அதன் பின் அந்த காதல் முறிந்ததும், மீண்டும் தனது தாய் மதத்திற்கே திரும்பினார். சமீபத்தில் ரோம் சென்று அங்கு போப்பை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது நயன்தாராவுடன் சென்றிருந்த விக்னேஷ் சிவன், ரோமிலேயே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டர் என்ற தகவல் வெளியாகி யிருக்கிறது. நயன்தாரா அவரின் பெயரையும் விக்டர் என்று மாற்றிவிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.