புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

இலங்கை வருகிறார் இமானுவேல்

இனப்பிரச்சினை இறுதித் தீர்வில் மிக முக்கிய வகிபாகம்

நல்லாட்சி அரசின் சர்வமதத் தலைவர்களூடாக தீர்வு காணும் ஜனாதிபதி, பிரதமரின் முயற்சிக்கு அடிகளார் உரமூட்டுவார்

உலகத் தமிழர் பேரவையின் தலைவரும், இலங்கை வாழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அதிக அக்கறை கொண்டவருமான வண. பிதா அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் தங்கியிருக்கும் அடிகளார் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடை ஒன்றின் காரணமாக நாட்டிற்கு மீண்டும் திரும்பி வருவதில் சில சட்டச் சிக்கல்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது இன்றைய நல்லாட்சி அரசினால் அத்தடை நீக்கப்பட்ட காரணத்தினால் அவர் இலங்கை வருவதற்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விவரம்»

பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி

பொதுநலவாய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தை சந்தித்தபோது எடுத்த படம்.

(படம் : சுதத் சில்வா)

 

யாழ். மறை மாவட்ட ஆயராக வண. ஜஸ்ரின்

யாழ். மறை மாவட்டத்தின் 11 ஆவது ஆயராக வண. ஜஸ்ரின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அபிஷேகம் செய்யப்பட்ட போது எடுத்த படம். யாழ். மரியன்னை பேராலயத்தில் நேற்று திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

(படம் : சுமித்தி தங்கராஜா)

Other links_________________________


ஆறாந்திகதி தினகரன் வாரமஞ்சரியில்

சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்தால்

நாம் இனவாதியா? – பொது பலசேனா செயலர் ஞானசார தேரர்

பேட்டியை எதிர்பாருங்கள்

எம்மை வீழ்த்த நினைப்போர் மத்தியில்

மக்கள் பணிக்காக நாம்போராடுகிறோம்

பிரதமர் ரணில்

அதிகாரத்தை பெற்றுக் கொள்வது சுலபம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, தேவைப்பாடு என்பவற்றை நிறைவேற்றவே நாங்கள் பதவிக்கு வந்தோம். ஆனால் எங்களை வீழ்த்துவதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அவர்களது எண்ணங்களை முறியடித்து மக்கள் சேவைக்காக நாம் எம்மை அர்ப்பணித்துச் செயலாற்றி வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விவரம்»

ஆட்டம் கண்டு வரும் மஹிந்தவின் கூட்டணி

எழுபதிலிருந்து இருபதாக குறைந்துள்ள எம்.பி.க்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பாராளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தல் முடிவடைந்த கையோடு மஹிந்த தரப்புக்கு சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரி விக்கப்பட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர் பத விக்கும் உரிமை  கோரப்பட்டது. ஆனால் இப்போது இருபதுக்கும் குறைவான எம். பிக்கள் குழுவே மஹிந்தவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. . . .

விவரம்»

கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதியில்

விக்னேஸ்வரன் மனவேதனை

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மீண்டும் ஒருவிதமான மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது. அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

விவரம்»


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.