புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

BPPL இன் உயர் தரதொழிற்சாலைகள் இலங்கை ஊடகங்களுக்கு அறிமுகம்

BPPL இன் உயர் தரதொழிற்சாலைகள் இலங்கை ஊடகங்களுக்கு அறிமுகம்

தென்கிழக்காசியாவின் பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட தூரிகை உற்பத்தி வசதிகளைக் கொண்ட இலங்கையின் முன்னணி தூரிகை மற்றும் இழை (Filament) ஏற்றுமதியாளரான BPPL -Beira Parawood Products Ltd சிறந்த ஏற்றுமதி திறமையை வெளிக்காட்டி தனது சந்தைப் பிரிவில் முன்னணியில் உள்ளது. டீநசைய குழு என முன்னாளில் அழைக்கப்பட்ட இந்நிறுவனம் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலிய hபோன்ற சந்தைகளில் ஏற்கனவே உயர்தர தூரிகை மற்றும் இழை வழங்குனராக பலமாக காலூன்றியுள்ளது. ஒரு குறித்த சந்தையில் செயற்படும் BPPL, முன்னணி உலக வர்த்தக நாமங்களான Oates,Grainger மற்றும் ubbermaidை ஆகியவற்ற்றின் விருப்பத்திற்குரிய வழங்குனராக திகழ்கின்றது.

இந்நிறுவனம் தொடர்ச்சியாக சிறந்த உறுதியான உற்பத்தித் திறனை பதிவு செய்துவரும் அதேவேளை புதிய சந்தைகளில் தனது இருப்பை விஸ்தரிப்பதுடன் ஏற்கனவே உள்ளசந்தைகளில் ஆழமாக வேரூன்றுகிறது. BPPL இன் விஸ்தீரணமானது உலகளாவியது. அதன் 70 சதவீதமானமான உற்பத்தி அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நாமங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் 13 சதவீதம அவுஸ்திரேலியா மற்றும் நியு+சிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் பொருட்கள் கனடா, ஐரோப்பா, இந்திய உபகண்டம் மற்றும் ஏனைய நாடுகளிலும் உள்ளன. Home-Depot>Rona>Lowes மற்றும் Mitre-10 போன்ற பெரிய அளவிலான விற்பனையாளர்கள் BPPL இன் முக்கிய நுகர்வோராக விளங்குகின்றனர்.

அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி னுச.அனுஷ் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் "உறுதியான நெறிமுறை மற்றும் நிலைதகு உற்பத்தி முறைமை என்பவற்றின் பின்னணியில் BPPLM னது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தினூடு தூரிகை உருவாக்கத்தின் எல்லைகளை நோக்கி முன்னேறுகிறது. ஓர் நிறுவனமாக நாம் எப்போதும் எவ்வாறு விடயங்களை சிறப்பாகவும், பொறுப்புணர்வோடும் அர்த்தமுள்ளதாகவும் செய்து எமதுவாடிக்கையாளருக்கு மட்டுமல்லாது நாட்டின் அறிவுத்தளத்திற்கும் பெறுமதி சேர்ப்பது தொடர்பாக சிந்திக்கின்றோம். BPPL இற்காக நாம் பல இலட்சியத் திட்டங்களை கொண்டுள்ளதோடு அவற்றை அடையும் பாதையில் பயணித்துக் கொண்டுள்ளோம். இலங்கையானது அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இவ்வேளையில் உள்ள+ர் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் பெருமைதகு உள்ள+ர் நிறுவனமாக எம்மை நிலைநாட்டுவதே எமதுதேவை."

BPPL சுற்றுப்புறச் சு+ழலுடன் நட்புறவான தூய்மைப்படுத்தும் பொருட்களை வர்த்தக மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக தொழில்துறை நியமங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்கின்றது. ஐந்து உயர் தரதொழிற்சாலைகளையும் பண்டகசாலைகளையும் 210,000 சதுர அடி விஸ்தீரணத்தில் கொண்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.