புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

ராசி பலன்

மேடம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் சந்தோஷமான வாரம். பரணி நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனிக்கவும். கார்த்திகை நட்சத்திரகார்களுக்கு கணவனுக்கோ, மனைவிக்கோ மருத்துவ செலவு ஏற்படலாம்.

பெண்கள் - உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதி உண்டு. கணவன் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்கள் ஆதரவாய் இருப்பார்கள்.

உத்தியோகம் - புது வேலை மாற்றம் சிலருக்கு மனதிற்கு நிம்மதி இருக்காது. வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும். அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் உதவி கிடைக்கும்.

தொழில் - புது தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடலாம். கடன் முயற்சியில் வெற்றி உண்டு. தனியார் தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

பரிகாரம் - சனிக்கிழமை 9 நல்லெண்ணை தீபம் ஏற்றம்- சனிஸ்வரனுக்கு. புதன் கிழமை வில்வ அர்ச்சினை செய்யவும் - ஈஸ்வரனுக்கு.

இடபம் (கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ரோகினி நட்சத்திரகாரர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்கவும். வெளியூர் பிரயாணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்கவும். மிருகiரிடம் நட்சத்திரகாரர்கள் எந்த வித கவலையும் வேண்டாம். இனிதான வாரம்.

பெண்கள் - சகோதர, சகோதரிகளின் பலம் ஓங்கும். மருத்துவ செலவு குறையும். யாரிடத்திலும் வாக்குவாதம் வேண்டாம். தவிர்க்கவும். சிலருக்கு பொன், பொருள் சேரும் காலம்.

உத்தியோகம் - மேல் அதிகாரிகளின் ஆதரவு கூடும். யாதொருவரிடமும் கடன் பெறுதலை தவிர்க்கவும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீகள். சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

தொழில் - பங்கு வர்த்தக எதிர்பார்த்த லாபம் தரும் புதிதாக தொடங்கும் தொழிலில் தடைகள் வரலாம். இருந்தபோதிலும் மனதில் திருப்தி இருக்கும். புதிய நட்புடன் தொழில் வேண்டாம்.

பரிகாரம் - சிவனுக்கு திங்கட்கிழமை 2 நெய் தீபம் ஏற்றவும். புதன் அன்று கிருஷ்ணருக்கு துளசி அர்ச்சினை செய்யவும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்)

மிருiரிடம் நட்சத்திரகாரர்களுக்கு நண்பர்கள் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனிக்கவும். திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாளாக இருந்த சுமைகள் குறையும்.

பெண்கள் -எந்த விதமான மனகுறையும் இந்தவாரம் இல்லை. பணபற்றாகுறை, குடும்ப ஒற்றுமை, பிறந்த வீடு, புகுந்த வீடு இப்படி எல்லா பக்கமும் உங்களுக்கு வெற்றி உண்டு. மனதைரியம் அதிகரிக்கும். யாதொரு செயலும் மனதிற்கு திருப்தியை தரும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் வேண்டாம். மனதிற்கு இதமான வாரமாக அமையும்.

வியாபாரம் - புதிய தொழில், விரிவாக்கம், கூட்டத் தொழில் இப்படி அனைத்திலும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்க உதவி பெறுவீர்கள். பெரிதும் எதிலும் மாற்றம் இல்லை, இந்த வாரம்.

பரிகாரம் - புதன்கிழமை அன்று 5 தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

கடகம் (புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)

புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலம் தேறும் மருத்துவ செலவு குறையும். பூசம் நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு உறவினர்களுடன் சற்று கருத்து வேறுபாடு உண்டு. பாதிப்பு ஏதும் இல்லை.

பெண்கள் - பிறந்த வீட்டால் பயன் உண்டு. வீடு, நிலம் வாங்குவது, விற்பது உங்களது எண்ணம் போல் நடக்கும். தொலைரதூரம் செய்தி மனதில் நிம்மதி தரும். சிலருக்கு தெய்வீக பணியில் ஈடுபாடு அதிகரிக்கலாம்.

உத்தியோகம் - அரசு, தனியார் பணி திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசாங்க உதவி எதிர்பார்த்தோருக்கு தகுந்த பலன் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கள் சந்தோஷம் வளரும்.

வியாபாரம் - தனியார், கூட்டுத் தொழில் இரண்டுமே திருப்தி தரும். பண புழக்கம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் பெரிதாக லாபம் தரும். எதிர்பார்த்த வெளியூர் வியாபாரம் கைகூடும்.

பரிகாரம் - திங்களன்று சிவபிராணை வில்வம் கொடுத்து அர்ச்சினை செய்யவும். தயிரன்னம் தானம் செய்யவும்.

சிங்கம் (மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)

இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். பழையகடன் பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள், நண்பர்களின் வருகை மனதில் பலம் தரும். பணபற்றாகுறை விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். எந்த விஷயத்திலும் கவனம் தேவை.

பெண்கள் - புதிய உறவு மற்றும் புதிய நண்பர்கள் ஆகியோர் உதவுவார்கள். பிறந்த வீட்டால் லாபம் உண்டு. குடும்பம் குழந்தைகளால் முன்னேற்றம் உண்டு. மருத்துவ செலவுகள் குறையும்.

வியாபாரம் - பங்கு வர்த்தகம் நல்ல லாபம் கொடுக்கும். அரசு வழியில் உதவி உண்டு. தனியாக தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள், மனைவி வழியில், கடன் உதவி கிட்டும். கூட்டுத்தொழிலாளிகளால் மனகசப்பு ஏற்படும்.

உத்தியோகம் - செய்யும் வேலையில் பதவி உயர்வு சிலருக்கு உண்டு. வேலை மாற்றம், இடம் மாற்றம் இப்போது இல்லை. பண பற்றாக்குறை தீரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

பரிகாரம் - மகம் நடசத்திரகாரர்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு சிறந்தது. பூரம் மற்றும் உத்தரம் நட்சத்திரகாரர்களுக்கு ஞாயிறன்று சிவவழிபாடு நல்லது. சிவனுக்கு ஒரு தீபம் ஏற்றி வில்வ அர்ச்சினை செய்யவும்.

கன்னி (உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

வாரத்தின் மத்தியில் நல்ல செய்தி வரும். சொத்து விவகாரங்களில் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் பெரிதாகவும் நஷ்டம் வராது. பொதுவாக எந்த ஒரு செயலிலும் சற்று யோசித்து முடிவெடுக்கவும். வரவுகள் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும்.

பெண்கள் - குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன், மனைவியிடையே சிறு கசப்புகள் வரலாம். சிலருக்கு திருமண தடை விலகும். பிறந்த வீட்டாலும், சகோதர, சகோதரிகளிடையே சற்று கருத்து வேற்றுமை வரலாம்.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் சகதொழிலாளிகள் பிரிந்து செல்லும் சூழ்நிலை வரலாம். செலவுகள் அதிகரிக்கும். தனியார் தொழில் செய்பவர்கள் பண பற்றாக்குறை ஏற்படும். புது முயற்சி இப்போது வேண்டாம்.

தொழில், உத்தியோகம் - அரசு வேலை, தனியார் தொழில் இரண்டுமே நன்றாக இருக்கும். பெரிதாக மாற்றம் இல்லை.

பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். வியாழனன்று தட்சணாமூர்த்திக்கு 3 நெய்தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும்.

துலாம் (சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு வாரம் முழுவதும் குதுகலமான தாள். விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு உறவினர் நண்பர்கள் வருகை அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை வாரம் முழுவதுமே சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் புது நட்பு, உறவு ஆகியவை மனதிற்கு இதம் தரும்.

பெண்கள் - பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஆதரவு தரும். மனதில் குழப்பங்கள் தீரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். தொலைதூர செய்தி சந்தோஷம்தரும்.

வியாபாரம் - தனியார், கூட்டுத்தொழிலில் எந்த மாறுதலும் இல்லை. அரசாங்க உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் விரிவாக்கம் இப்போது வேண்டாம். புது தொழிலில் முயற்சி சற்று தள்ளி போடவும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் எதுவும் மாறுதல் இல்லை. மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். வேலை மாற்றம் முயற்சி இப்போது வேண்டாம். பணியில் மாற்றம் ஏதும் இல்லை.

பரிகாரம் - வியாழனன்று குருபகவானுக்கு 3 நெய் தீபம் ஏற்றவும். முருகன் ஸ்தலம் சென்று வரவும் 3 நருபருக்கு அன்னதானம் செய்யவும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு சற்று மன உளைச்சல் இருக்கலாம். அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பொதுவாக இந்தவாரம் பணவிரயம் இருக்கலாம். கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.

பெண்கள் - உறவினர்கள், நண்பர்களின் வருகை இருக்கும். செலவுகள் கூடலாம். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்பாடு ஆகும். சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவார்கள். சிலருக்கு காதல் கைகூடி திருமணம் நிச்சயமாகும். மனதில் புதிய தைரியமும், உற்சாகமும் ஏற்படும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். செலவுகள் கூடும்.

வியாபாரம் - எந்த புது முயற்சியும் இப்போது வேண்டாம். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பங்கு வர்த்தகம் கைகொடுக்கும்.

பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடவும். வஸ்திர தானம் செய்யவும்.

தனுசு (மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)

குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உடல் ஆரோக்கியம், மன தைரியம் கூடும். எந்த ஒரு புது நட்பையும் நம்ப வேண்டாம். கடன் கொடுப்பது. வாங்குவது இப்போது வேண்டாம். மூலம் - இந்த வாரம் நல்ல செய்தி உண்டு. பூராடம் - குடும்பத்தில் அமைதி நிலவும். உத்ராடம் - எந்த ஒரு செயலிலும் எச்சரிக்கை தேவை.

பெண்கள் - கணவன், மனைவி கருத்து வேற்றுமை மாறும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மாற்றம் உண்டு.

உத்தியோகம் - அரசு பணியில் உள்ளவர்களுக்கு வேலை மாற்றம் மனதிற்கு நிறைவாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்ததுபோல் வரும் கடன் சுமை குறையும்.

வியாபாரம் - வெளிநாட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். புதிய தொழில் தொடக்கம் தள்ளி போடவும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும். அரசு உதவி எதிர்பார்த்ததுபோல் நடக்கும்.

பரிகாரம் - புதன்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சினை செய்யவும்.

மகரம் (உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

இந்த ராசி நேயர்களுக்கு வாரத்தின் ஆரம்பத்தில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். பணப்புழக்கம் திருப்திதரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். மருத்துவ செலவு குறையும்.

பெண்கள் - பிறந்த வீட்டால் பலன் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்காதீர்கள். நண்பர்களிடம் வாக்குவ வாதம் வேண்டாம். அவிட்ட நட்சத்திர பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருவோணம் - இவர்களுக்கு பிறந்த வீட்டால் நன்மை ஏற்படும். உத்ராடம் - இவர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய கடன் முயற்சி இப்போது வேண்டாம். விரிவாக்கம் ஒப்பந்தங்கள் வாரத்தின் இறுதியில் பயன் தரும். பங்கு வர்த்தகம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகம் - வெளியூர் பிரயாணம் நன்றாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு வெகுமானம் உண்டு. வேலை மாற்றம் இப்போது வேண்டும். இடமாற்றம் முயற்சி செய்தால் திருப்தி அளிக்கும்.

பரிகாரம் - திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி அர்ச்சினை செய்யவும். 9 பேருக்கு சனிக்கிழமை அன்னதானம் செய்யவும்.

கும்பம் (அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

இந்த ராசிகாரர்கள் பொதுவாக உடல் நலம் சற்று பாதிக்கலாம். உறவினர்கள் வருகை மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். எந்த புது நட்பையும் நம்ப வேண்டாம். சிலருக்கு திருமணம் கைகூடும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சிறப்படையும் வீடு, நிலம் வாங்குவீர்கள். சொத்து சம்மந்தமான வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. குழந்தைகள் சிறப்படைவார்கள். எதிலும் நிதானித்து யோசித்து முடி வெடுங்கள். சில சூழ்நிலைகள் கட்டாயத்தினால் உருவாகும்.

உத்தியோகம் - வேலை சுமை குறையும். நண்பர்கள் உதவுவார்கள். கடன் தொல்லை தீரும். புதிய வேலை மாற்றம் இப்போது இல்லை. அரசு வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு வேலை மாற்றம் இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம்.

வியாபாரம் - கொடுக்கல் வாங்கலில் நன்மை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. அரசு உதவி கிடைக்கும். புது தொழில் முயற்சி லாபம் உண்டு.

பரிகாரம் - வியாழனன்று முருகனுக்கு, குருபகவானுக்கும் பரிகாரம் செய்யவும்.

மீனம் (பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

உத்ராட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு மருத்துவ செலவு உண்டு. ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு மனதில் அமைதி உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும் வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும்.

பெண்கள் - கணவன், மனைவி அன்பு நீடிக்கும். உறவினர் நண்பர்கள் சகோதர, சகோதரி ஆகியோர் ஆதரவு கிடைக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும்.

வியாபாரம் - தொழிலில் லாபம் உண்டு. கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். பணபற்றாக்குறை இல்லை. கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகம் - அரசு, தனியார் பணியில் மாற்ற உண்டு. விரும்பிய இடம் கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டு. எந்த ஒரு புதிய முயற்சியும் இப்போது வேண்டாம். வெளிநாடு வேலை வாய்ப்பு சிலருக்கு நன்மை தரும்.

பரிகாரம் - வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு 6 நெய் தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.