புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையினால்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையினால்

இதுவரை கால அநியாயங்களை மாற்றியமைக்க துரித நடவடிக்கை

* 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாகப் பலரும் பலவாறான தகவல்களையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். உண்மையில் அம்மக்களது மீள்குடியேற்றம் எந்த நிலையிலுள்ளது?

உண்மையில் வடபுலத்திலிருந்து வெளியேற் றப்பட்டுள்ள முஸ்லிம்களில் ஏராளமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவே அமைச்சு தகவல்களில் உள்ளது. எனினும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட வில்லை. அதனால் அவர்கள் அங்கு வசிக்காமல் மீண்டும் புத்தளத்திலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டால் தமது சொந்த இடங்களில் வசிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

எனினும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் இன்னுமொரு சிக்கல் நிலையுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் போது, இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியேற்ற முடிந்தது. ஆனால் வடபுல முஸ்லிம்களின் பிரச்சினை அவ்வாறில்லை. ஏனெனில், இடம்பெயரும்போது ஒரு குடும்பமாக இருந்தவர்கள் தற்போது நான்கு குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். எனவே, அவர்களை தங்களின் சொந்த இடங்களில் மாத்திரம் மீள்குடியேற்ற முடியாது. அதற்கு மேலாக வேறு பிரதேசங்களிலும் மீள்குடியேற்ற வேண்டிய தேவையுள்ளது.

* வடக்கு கிழக்கில் பொதுவாக மீள்குடியேற் றப்பட்டுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உங்களது அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது?

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் நிதி கோரினோம்.

எனினும் தற்போதைய சூழலில் அதற்கான வசதி அரசாங்கத்தி டமில்லை. ஆயினும் கடனுதவி பெற்று வட கிழக்கி லுள்ள எட்டு மாவட்டங்க ளில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அநேகமான நாடுகள் இலங்கைக்கு கடனுதவி வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளன. எனவே கடனுதவி பெற்று குறித்த 65 ஆயிரம் வீடுகளையும் கட்டவுள்ளோம்.

* இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எப்போது அமுல்படுத்த திட்ட மிட்டுள்Zர்கள்?

குறித்த விடயத்தில் எமது அமைச்சு விரைவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, வீடு கட்டும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கிறோம். மேலும் குறித்த வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்யவும் திட்டமிட்டுள்ளோம். எனவே, அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டால் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கிறேன்.

* இவ்வாறு அமைக்கப்படவுள்ள வீட்டின் பெறுமதி எவ்வாறு அமையவுள்ளது.?

இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள வீட்டின் பெறுமதி ஐந்தரை இலட்சம் ரூபாவாகும். ஆனால், நாம் அமைக்கவுள்ள வீடு 10 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தது 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட குறித்த வீட்டில் இரு படுக்கையறைகள், வரவேற்பறை, சமயலறை, குளியலறை உட்பட வீட்டுத் தளபாடங்களும் வழங்கப்படவுள்ளன.

* இந்த அறுபத்தையாயிரம் வீட்டுத்திட்டத்தில் குறித்த வடபுல முஸ்லிம்களும் உள்ளடக்க ப்படுவார்களா?

நிச்சயமாக சகலரும் உள்வாங்கப்படுவார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கையின் பிரகாரம் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் வரையில் உரிய முறையில் மீள்குடியேற் றப்படுவதற்கான அவசியம் உள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.

எனவே அந்த 20 ஆயிரம் குடும்பங்களில் சுமார் நான்காயிரம் குடும்பங்கள் வரையில் பல வழிகளில் வீடுகளைப் பெற்றுள்ளன.

எனவே, இன்னும் 16 ஆயிரம் வீடுகள் தான் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு தேவையாகவுள்ளது. ஆகவே முன்னெடுக்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் குறித்த 16 ஆயிரம் வீடுகளை வழங்குவதென்பதில் பாரிய சிக்கல் இல்லை.

மேலும் 65 ஆயிரம் வீடுகள் சிலவேளை போதுமானதாக இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு இன்னும் 10 ஆயிரம் வீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவுள்ளோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.