புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

இவ்வார சிரிப்பு

பாத்திமா 'hனீ

எஹியாகான் - கதீஜா
தெஹிவளை

எமது கல்லூரி

எத்திசை நோக்கினும் பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற் போல் புற்பூண்டு, செடி கொடிகள், மரம் மட்டைகள் இவைகளைத் தாங்கி நிற்கும் உயர்ந்த மலைத் தொடர்கள் ஆங்காங்கே காணப்படும் கற்பாறைகள், இன்னும் பல இயற்கை காட்சிகளைக் கொண்ட நாவல் நகரிலே அமையப்பெற்றுள்ளது சென்.மேரிஸ் கல்லூரி.

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் நாவல் - நகர் மத்தியிலே அமைந்துள்ள மிகவும் பழமைமிக்க எமது இக்கல்லூரி நூறு ஆண்டுகளை தாண்டிக் கொண் டிருக்கிறது.

கடந்த காலங்களில் நாடு போற்றும் நல்ல பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும், சிறந்த அதிபர்களையும் ஆசிரிய ஆசிரியைகளையும், அறிஞர்களையும், கலைஞர்களையும், அரச உத்தியோகத்தர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

எமது கல்லூரியில் இப்போது அதிபர் உட்பட 40 ஆசிரிய ஆசிரியைகள் சேவையாற்றுகிறார்கள். 577 மாணவ மாணவிகளைக் கொண்ட இக்கல்லூரியில் எல்லோரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவம், சமத்துவம் பேணி கல்வி கற்கிறார்கள். எனவே அரிதிலும் அரிதாய் எமக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்தி அழியாச் செல்வமாம் கல்வியை கற்று நல்லறிவு பெற்று நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லவர்களாக வாழ்ந்திடவும் எமது சென் - மேரிஸ் கல்லூரி இன்னும் நல்ல பல முன்னேற்றங்களை அடைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

மழை பெய்யும்போது

மேகம் திரளுது வானம் இருளுது
மின்னல் எங்கும் மின்ன - அதி
வேகம் கொண்ட காற்றும் வீச
மெல்லப் பொழியுது மழையும்

பதறிக்கொண்டு பறவை யெல்லாம்
சிதறி வானில் பறக்க - அங்கே
கதறிக் கொண்டு பசுவும் வந்தது
கன்றை அழைத்துக் கொண்டு

நெல்லுப் பாயும் மழையில் நனைய
நெஞ்சம் பதறிய வண்ணம் - அதை
உள்ளே கொண்டு வருவதற்கு
ஓடிச் சென்றாள் அம்மா

சின்னஞ் சிறிய சிறுவர் நாமோ
சிந்தை மகிழ்ந்து கொண்டு - உடன்
வண்ண வண்ணக் கப்பல் செய்து
வடிவாய் விட்டோம் மிதக்க!
உ.நிசார்

அபிலாஸ்
தரம் - 05,
மது/அம்பேதென்ன தமிழ் வித்தியாலயம்,
மத்துகம.

எம்.ஆர்.அஹமட் சிமாக்
தரம் - 04,
கமு/சது/அல்.அமீர்
வித்தியாலயம், சம்மாந்துறை.

எம்.ஏ.ஆயிஷா ஸைனப்,
தரம் - 04, மது/வெலிப்பன்னை
ரஹ்மானியா மகா வித்தியாலயம்,
வெலிப்பன்னை.

எம்.பி.எம்.ஸஹ்ரான்,
தரம் - 07,
சென் செபஸ்தியன் தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு - 12.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.