புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
காதலியையும் கொன்று தன் உயிரையும் மாய்த்த கடற்படை வீரர்

காதலியையும் கொன்று தன் உயிரையும் மாய்த்த கடற்படை வீரர்

கள்ளக் காதல் காரணமாக தன் காதலியை கொன்றபின் தானும் தற்கொலை செய்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. முக்கியமாக பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டவர்கள் இதனை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. அதில் கடந்த வாரம் மாத்தறையில் இடம்பெற்ற சம்பவமே இது.

மாத்தறை பிரதேச செயலகத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் சமிலா பிரசாதினி அழகானவர். இவருக்கு வயது இருபத்துரெண்டு. இவர் தந்தையை இழந்து பன்னிரெண்டு வருடங்களாகின்றன. அறுபத்து மூன்று வயதுடைய தாய் லீலாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். சமிலா உயர்தர வகுப்பு பாடத்துக்காக விசேட வகுப்புக்கு செல்லும்வேளை கோட்டகொடையை சேர்ந்த இருபத்தொன்பது வயதுடைய சமன்குமார ஜயசிங்கவுடன் தொடர்பேற்பட்டது. இவர் கடற்படையில் கடமையாற்றுபவர். ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் சமன் இளையவராவார். இவருடைய தந்தை இருபத்துமூன்று வருடங்களுக்குமுன் இறந்தார். எழுபத்தொரு வயதுடைய தாய் பி.ஜயவதி சிறியவர்களை கவனித்துவந்தார்.

முரட்டு குணமுள்ள சமன் சமிலாவின் அன்பு கிடைத்தபின் ஓரளவு சாதுவானான் க.பொ.த உயர்தர பரீட்சையில் திறமை சித்தியெய்திய சமிலா பேராதனை சர்வகலாசாலைக்கு தெரிவானார். சந்தர்ப்பம் கிடைக்கும் போது தன் காதலியை சந்திக்க சமன் குமார தவறவில்லை. சமன் யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் கடமையாற்றினார். சமிலாவேறொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருப்பதாக இவர் அறிந்ததினால் சமிலாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சமனை, சமிலாவின் சகோதரர்களும் வெறுக்கும் நிலையேற்பட்டது.

சமிலாவின் சர்வகலாசாலை படிப்பும் முடிந்தது. சமன் விடுமுறையில் வந்த சமயம் இவளை பின்தொடர்ந்தும் தொலைபேசியில் அச்சுறுத்துவதுமாயிருந்தான். இதனால் அவள் தொலைபேசி சிம் அட்டையை மாற்றிவந்தாள். சமன் பைத்தியம் பிடித்தவனானான். இவனது தொந்தரவு பொறுக்கமுடியாத சமிலா மாத்தறை பொலிஸ் நிலையம் சென்று காதலனுக் கெதிராக புகார் செய்தார். பொலிஸ் நிலையம் அழைக்கப்ப்பட்ட காதலன் சமன் எச்சரிக்கப்பட்டு, மீண்டும் சமிலா விடயத்தில் தொந்தரவு செய்தால் கைது செய்து நடவடிக்கையெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத அவன் மீண்டும் சமிலாவை தொந்தரவு செய்தான். ஒருநாள் சமிலா தனியாக வீட்டிலிருந்தார். மூன்று நண்பர்களுடன் முச்சக்கரவண்டியில் வந்த சமன். சமிலாவின் அறைக்குள் நுழைந்து அவளது கையை பிடித்து திருமணம் செய்தால் தன்னை தவிர வேறெவரையும் திருமணம் செய்ய விடமாட்டேன் என்றும். திருமணம் வேண்டாம் என்றால் பிக்குனியாகும்படியும் அதனையும் மீறி செயல்பட்டால் அவளை கொன்று விடுவதாகவும் எச்சரித்து, அவளை கடத்த முயன்றபோது அவள் சப்தமிட அம்முயற்சி தோல்வியடைந்தது. அனைவரும் முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்றனர்.

இச்சம்பவத்தினை சமிலா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார். இதையடுத்து சில மாதங்களின் பின் சமன் மீண்டும் சமிலாவின் வீட்டுக்கு சென்றபோது, சமிலாவின் வீட்டிலுள்ள ஒருவர் சமனின் தலைபகுதியை தடியினால் தாக்க காயமுற்ற சமன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். அத்துடன் அவன் சமிலாவின் குடும்பத்துக் கெதிராக பொலிஸில் முறைபாடு செய்தான். மாத்தறை பொலிஸார் இச்சம்பவங்களில் அக்கறையெடுக்காததால் சமிலா முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக் கோனிடம் முறைப்பாடு செய்தார். விசாரணைக்கு வருமாறு பலமுறை யாழ். முகாமுக்கு அறிவித்தும் சமன் வருகை தராததால், உங்கள் இருவரின் முறைபாட்டை இரத்து செய்ய பொலிஸ் நிலையம் வரும்படி சமனுக்கு பெண் பொலிஸ் பரிசோதகர் அறிவித்ததையடுத்து சமன் பொலிஸ் நிலையம் வந்தடைந்தான். (18ம் பக்கம் பார்க்க)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.