புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

சருமத்தின் சுருக்கங்களுக்கும் தழும்புகளுக்கும் தீர்வு உண்டு

சருமத்தின் சுருக்கங்களுக்கும் தழும்புகளுக்கும் தீர்வு உண்டு

சருமம்தான் உடல் அழகைக் காட்டும் கண்ணாடி குறிப்பாக, முகம் ஒருவருக்கு அழகானதாக இருக்கவேண்டுமானால், முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் இல்லாது வளவளப்பாகவும் மினுமினுப்பாகவும் காணப்படவேண்டும்.

முகம் தவிர ஏனைய இடங்களில் இத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் சிக்கல் தான். குறிப்பாக நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் நம்மை வயதானவராகக் காட்டுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?

வயது அதிகரிகும் போது நமது சருமத்தின் செல்களுக்குள் காணப்படும் கொலாஜன் (விollagலீn) எனும் சத்துப்படலத்தில் விரிசல் ஏற்படத் தொடங்குகிகறது. இந்த விரிசல்களின் காரணமாகத்தான் கண் இமைகள், தாடை, கன்னம், மார்புப் பகுதி, கைகள் என உடலின் பல இடங்களில் சருமத்தில் தொய்வு ஏற்பட்டு சதை தொங்க ஆரம்பிக்கிறது. மேலும், பிரசவத்திற்குப் பிறகு சில பெண்களுக்கு வயிற்றில் தொப்பை விழக்கூடும்.

இம்மாதிரியான பாதிப்புக்களுக்கு ‘தேர்மேஜ்’ எனும் லேசர் சிகிச்சை சிறந்த பலனைக் கொடுக்கிறது. குறிப்பாக தொப்பையைக் குறைப்பதற்காக செய்துகொள்ளப்படும் ‘லைபோ சக்சன்’ சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சதைத் தொங்கலை இந்த தேர்மேஜ் லேசர் சிகிச்சை சிறப்பான முறையில் குணப்படுத்திவிடுகிறது. தேர்மேஜ் சிகிச்சையின் மூலம் செல்களிலுள்ள கொலாஜன் மீட்டெடுக்கப்படுகிறது. இதனால் 60 வயதானவர்கள் கூட 30 வயது தோற்றத்தைப் பெறமுடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.