புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

கர்ப்பத்தின் போது உடலுறவா?

கர்ப்பத்தின் போது உடலுறவா?

பொதுவாக கர்ப்பத்தின் போது உடலுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷய மாகும். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடலுறவில் இன்பம் குறைந்தே காண ப்படும். முதல் மூன்று மாத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும்போது உடலுறவு கொள்ள வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது. அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்துவிடும். அதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும், உடலுறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அதற்கா¡க கவலைப்பட வேண்டாம், உடலுறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புக¨ளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூடுமானவரை ஆணுறைப்பயன்படுத்தி உடலுறவுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும். கர்ப்பிணி பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உடலுறவுக் கொள்ளலாம். 8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக்கொள்ளும் போது தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக்கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது. எனினும், சிலருக்கு கர்ப்பப்பை பல வீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உடலுறவுகொள்ள வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.