புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
மிகச் சிறந்த பட்ஜட்

மிகச் சிறந்த பட்ஜட்

பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர் வரையான சகல தரப்பும் அரவணைப்பு

பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சருக்கும் பாராட்டு தெரிவிப்பு

எவர் எதைக் கூறினாலும் தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறை கூறுவதற்கு ஒரு சிறு துரும்புமே கிடையாது. உண்மையைக் கூறினால் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இதுவரை வெளிவந்த வரவு செலவுத் திட்டங்களில் மிகச் சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாக இதனைக் கருத முடியும்.

எதிர்க்கட்சியிலுள்ள ஒரு சிலர் வழமைபோன்று விடயங்களை அலசி ஆராயாது தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக மேலெழுந்தவாரியாக அறிக்கைகளை விட்டாலும் நாட்டு மக்களது சகலவிதமான தேவைகளையும் அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையப் பெற்றுள்ளது எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாதாரண பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரையான நாட்டு மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தி அவர்களது தேவைப்பாடுகளை அவரவர் தராதரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக மக்களது அன்றாட வாழ்வுடன் தொடர்புபட்ட முக்கியமான பதினொரு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இது மக்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரும் நிவாரணமாக உள்ளது. அத்துடன்அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட் டுள்ளதுடன் விவசாயிகள் மற்றும் மீனவ சமுதாயத்தினருக்கும் நிவாரணமளிக்கப்பட் டுள்ளதாகவும் அவர்கள் கருத்துத் தெரிவித் துள்ளதுடன் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் தமது பாராட் டுகளையும் தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.