புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும்

அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை

யிரிழந்த படை வீரர்களை நினைவுகூரும் நவம்பர் மாதத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களையும் அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார்.

உயிரிழந்த புலி உறுப்பினர்களின் மயானங்கள் மனிதாபிமானமற்ற முறையில் கடந்த அரசாங்கத்தால் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் ஒரு வாரத்துக்கு உயிரிழந்த புலி உறுப்பினர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

விவரம்»


சவூதி அரேபியா நாட்டின் மன்னன் அப்துல் அkஸ் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற அல்குர்ஆன் ஓதல் போட்டியில், இலங்கையிலிருந்து பங்குபற்றிய களுத்துறை இல்ரியா மத்ரசாவின் மாணவன் நஸ்ரின் நவாஸ் முதல் ஐவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவரைப் பாராட்டி நடைபெற்ற வைபவத்தில் மெளலவி அஸ்லம் இமாமி, இல்ரியா அரபிக் கல்லூரியின் நிர்வாக சபை உறுப்பினர்கள் இல்ரியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ந ஸீர் மத்ரசா ஒஸ்தாது மார்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(மொஹமட் இம்தியாஸ், கொழும்பு மத்திய விசேட நிருபர்)

 

 

அது இரகசிய சித்திரவதை முகாமல்ல சரணடைந்த புலிகள் தங்கியிருந்த இடம்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த விளக்கம்

இரகசிய சித்திரவதை முகாம் எதுவும் இருக்கவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இரகசிய சித்திரவதை முகாம் எதுவும் .

விவரம்»

Other links_________________________

மிகச் சிறந்த பட்ஜட்

பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர் வரையான சகல தரப்பும் அரவணைப்பு

பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சருக்கும் பாராட்டு தெரிவிப்பு

எவர் எதைக் கூறினாலும் தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறை கூறுவதற்கு ஒரு சிறு துரும்புமே கிடையாது. உண்மையைக் கூறினால் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இதுவரை வெளிவந்த வரவு செலவுத் திட்டங்களில் மிகச் சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாக இதனைக் கருத முடியும். எதிர்க்கட்சியிலுள்ள ஒரு சிலர் வழமைபோன்று விடயங்களை அலசி

விவரம்»

தமிழ் கைதிகள் விடுதலை எச்சரிக்கை; ஐ. எஸ். ஐ. எஸ். தொடர்பான கருத்து

ஞானசார தேரரின் இனவாத கருத்திற்கு இந்து, இஸ்லாமிய மதகுருமார் கண்டனம்

இந்த அரசாங்கம் சிறைகளிலுள்ள புலிப் பயங்கரவாதிகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதானது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோன்ற இட மளிக்கும் செயலாகவே தான் கருதுவதுடன் இது குறித்து தான் எச்சரிக்கை விடுப்பதாகவும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்திற்கு சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவரான பிரம்மஸ்ரீ இராமச்சந்திர பாபுசர்மா குருக் கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விவரம்»

சூடுபிடித்த விக்னேஸ்வரன் - சுமந்திரன் அறிக்கை போர் விவகாரம்:

ஊடல்காரர்களையும் ஊடகங்களையும் கடுமையாக சாடினார் மாவை எம்.பி.

முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமக்கிடையேயான பிரச்சினையை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள மாவை சேனாதிராசா எம்.பி. சில தமிழ் ஊடகங்கள் தேவையில்லாது இவ்விட யத்தைப்

விவரம்»


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.