புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

சூடு பிடிக்கும் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்

சூடு பிடிக்கும் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்

வ்வருட ஆரம்பத்தில் இலங் கையில் ஏற்பட்ட ஆட்சி மாற் றத்துடன் பொதுவாக எல்லாத்து றையிலும் மாற்றங்கள் ஏற்பட் டன. அவ்வடிப்படையில் இவ்வருட ஆரம்பத்தில் விளையாட்டுத் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கை விளையாட்டுத் துறை என்றால் முழுமை யாக ஆதிக்கம் செலுத்துவது கிரிக்கெட் துறையேயாகும். கடந்த ஆட்சியின் போது விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் கோடிக்கணக்கான பண மோசடிகள் காரணமாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. அதன் எதிரொலியாக கிரிக்கெட் சபையை அன்றைய விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக் கலைத்தார்.

அதன் பின்னர் இடைக்கால சபையை அமைத்து அதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சிதத் வெத்தமுனியின் தலைமையில் நிர்வாகக் குழுவை நியமித்தார். கடந்த பெப்ரவரி முதல் இந்த இடைக்கால நிர்வாக சபையே கிரிக்கெட் துறையை நிர்வகித்து வருகின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் பின் விளையாட்டு அமைச்சில் மாற்றம் ஏற்பட் டது. ஆனால் முன்பிருந்த இடைக்கால நிர்வாக சபையே இயங்குவதற்கு புதிய அமைச்சரும் அனுமதித்திருந்தார். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் இடைக்கால நிர்வாகத்தில் திருப்திகாணா ததால் பல பிரச்சினைகள் உருவாகின. இதனால் புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு புதிய கிரிக்கெட் நிர்வாக சபைக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற ஏற்பாடுகளைச் செய்து அதற்கான திகதி யையும் அறிவித்தார்.

இதனடிப்படையில் கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற் கான தேர்தல் 2016 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்த லுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி 3.00 மணி வரை ஏற்றுக் கொள் ளப்படும் என்று விளையாட்டுத் துறைப் பணிப்பாளர் நாயகம் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவி த்துள்ளார்.

வேட்பு மனுத்தாக்கலில் ஆட்சேபனைகள் இருந்தால் அன்று மாலை 6.00 மணி வரை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படு கின்றது. கடந்த மாதம் விளையாட்டமைச் சினால் முடிவு செய்ததற்கிணங்க 2016 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என்று பணிப்பாளர் நாயகம் கே. டி. எஸ். ருவன்சந்திர மேலும் கூறியு ள்ளார்.

இம்முறை கிரிக்கெட் நிர்வாகிகள் தேர் வின் போது முன்புள்ள விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 15 ஆம் திகதியிலிருந்து புதிய விதி முறை நடைமுறைக்கு வரும்படியாக விதி முறைகளை மாற்றியமைத்துள்ளது. மேற் குறிப்பிட்ட தினம் வரை தொடர்ந்து நான்கு வருடங்கள் பதவி வகிக்காத ஒருவர் தான் விரும்பிய பதவிக்கு போட்டியிட புதிய விதிமுறைக்கமைய சந்தர்ப்பம் கிட்டி யுள்ளது. அதற்கமைய தொடர்ந்து நான்கு வருடங்கள் கிரிக்கெட் சபையில் ஏதாவ தொரு பதவியில் இருந்தால் அப்பதவிக்கு இனி மேல் போட்டியிட முடியாது. ஆனால் வேறு பதவிகளுக்குப் போட்டியிட முடியும். இவ்வடிப்படையில் நடைபெற விருக்கும் கிரிக்கெட் சபைத் தேர்வு குறித்த மேற்படி விதிமுறைகள் அடங்கிய கடிதங் களை பதிவு செய்யப்பட்ட எல்லா விளை யாட்டுக் கழகங்களுக்கும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் நிர்வாகத் தேர்வின் போது வாக்களிக்கத் தகுதிபெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு எதிரான ஏதும் முறைப் பாடுகள் இருந்தால் இம்மாதம் 23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன் அந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் கே. டி. எஸ். ருவன்சந்திர மேலும் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் பதிவு செய்யப் பட்ட 86 விளையாட்டுக் கழகங்களும், மாகாண விளையாட்டு சங்கங்கள் உட்பட மாவட்ட விளையாட்டு சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள் ளனர்.

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கிரிக் கெட் சபைத் தேர்தலில் அரசியல்வாதி களும் போட்டியிடலாம் என விளையாட் டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக யார் முன் வந்து போட்டியிட்டாலும் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித் துள்ளார்.

இம்முறை கிரிக் கெட் சபைத் தேர்வுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகரும் முன்னாள் கிரிக்கெட் சபை தலைவருமான திலங்க சுமதிபால தலை மையில் ஒரு குழுவும், முன்னாள் கிரிக்கெட் சபை செயலாளர் நிசாந்த ரணதுங்க தலைமையில் ஒரு குழுவும் போட்டியிடுகின்றன. முன்னைய ஆட்சிக் காலத்தில் கிரிக்கெட் சபைத் தேர்தலில் திலங்க சுமதிபால போட்டியிடுவதற்கு தடை விதித்திருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

பல கோடிக்கணக்கான பணம் புரளும் இவ்விளையாட்டின் நிர்வாகிகளாக வருவ தற்கு பொதுத் தேர்தல் போல் இப்பொ ழுதே மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதே போல் கட்சி மோதல்களும் இடம் பெற்று வருகின்றனது.

முக்கியமாக நிஷாந்த ரணதுங்க குழுவி லிருந்த அவரின் நெருங்கிய சகாவான மோஹான் த சில்வா திடீரென சுமதிபால குழுவை ஆதரரிப்பதால் எதிரணியினரான ரணதுங்க குழுவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சுமதிபால குழுவிலிருந்து செயலாளர் பதவிக்கு மோகான் த சில்வாவும், உப தலைவராக கே. மதிவாணனும் போட்டி யிடுகின்றனர். பொருளாளராக யாரைக் களமிறக்குவது என்பது இன்னும் முடிவாக வில்லை.

புதிய விதிமுறைகளுக்கமைய முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவர் ஜயந்த தர்மதாச நிர்வாக் குழுவில் அங்கம் வகிப்பதால் இம்முறை அவர் போட்டியிட வில்லை. எனவே அவர் சுமதிபாலக் குழுவை ஆதரரிக்கத் தீர்மானித்துள்ளார். எனவே அக்குழுவுக்கே இம்முறை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருத முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.