புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
முஸ்லிம்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ள செயல்

முஸ்லிம்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ள செயல்

பாரிஸ் நகரத் தாக்குதலுக்கு முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்

பிரான்சின் தலைநகரமான பாரிசில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது.

“பாரிஸ் நகரில் அப்பாவி மக்கள் மீதான தாக்கு தல் மூலம் ஐ.எஸ்.முழு உலக முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் பிரதிமையைக் களங்கப்படுத்தும் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு பயங்கரவாதக் குழு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இஸ்லாம், அப்பாவி உயிர்களைப் பறிக்கும் செயலை நிராகரிக்கும் கருணை மற்றும் சகிப் புத்தன்மை கொண்ட ஒரு மதமாகும். போர்க் காலங்களில் கூட, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலம் மேற்கொள் ளப்படும், எந்த குற்றச் செயலுக்கும் எந்த இறையியல் அடிப்படையும் கிடையாது. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா இஸ்லாத்திலும் அல்லது எந்த ஒரு நாகரீக சமுதாயத்திலும் காண முடியாத இந்த பயங்கரவாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

சிரியா, ஈராக் மற்றும் பிற அரபு நாடுகளின் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தப் படுகொலைகளை யிட்டு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா அதிர்ச்சியடைந்துள்ளது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும், குறைந்தது 80 பேர் ஆபத்தான நிலையிலும் 127 பேர் இறந்துள்ள நிலையிலும் பாரிஸில் இடம்பெற்ற இந்த பெரும் தாக்குதலின் மூலம் மேற்கத்திய உலகுக்கு தங்கள் கொலை வெறியை விஸ்தரித் துள்ளனர்.

பிரான்ஸ் மீதான அவர்களது இலக்கு மத்திய கிழக்கில் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கத் தூண்டும் செயலாகவோ அல்லது இக்குழுவினரின் அட்டூழியங்க ளுக்கு அஞ்சி பாதுகாப்பான நாடுகளில் தஞ்சமடையும் முஸ்லிம் அகதிகளைத் தடுத்து நிறுத்தும் செயலாகவோ இருக்கலாம் என்பதால் சர்வதேச சமூகம் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.