புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

கன்னங்கள் அழகாக ஜெலிக்க

கன்னங்கள் அழகாக ஜெலிக்க

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயல்கிறோம். ஆனால், பெரிய கன்னங்கள் மற்றும் தாடைகள் போன்றவற்றை வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன.

அதனைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அது மட்டுமன்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, ஒரு நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10நிமிடம் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு.

இவ்வாறு வாய்விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே, தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த சூயிங்களம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் இரண்டை தாடைகளை தவிர்க்கலாம். நன்கு பெரியதாக இருக்கும். கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தாக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தாக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.

மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10, 20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம். வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.