புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
ஹொங்கொங் அமைதி ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங் அமைதி ஆர்ப்பாட்டம்

kய் லொங் என்பவர் ஹொங்கொங் மாநிலத்திற்கு சீனாவினால் நியமிக் கப்பட்ட தகுதிவாய்ந்த உயர் அதிகாரி, இவருக்கு முன்னர் இருவர் இப்பதவியில் இருந்தனர். மூன்றாவதாக நியமிக்கப்பட்ட இவர் மூன்று பக்கங்களில் இருந்து கூட்டாக வளர்ந்துள்ள எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்கவுள்ளார்.

இன்றைய நாட்களில் இன்று சீனாவுக்கு சொந்தமான ஹொங் கொங்கில் மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. இதற்கு பின்னால் மூன்று முக்கிய நபர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் சட்டத்துறையிலும் சமூக வியல் துறையிலும் கல்வி போதிப்பவர்கள். அடுத்தது கிறிஸ்தவ ஆலயமொன்றில் உயர்தர அந்தஸ்தில் இருக்கும் மதகுரு நடைபெற்று வருகின்ற இந்த மாணவ - சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இயக்குபவர்கள் இவர்கள். இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

மாணவர்கள் முக்கியமாக பங்கெடுத்துக் கொள்ளும் இந்த நடவடிக்கையில் பிரதான கோரிக்கையாக இருப்பது தற்போதைய தகுதி வாய்ந்த அதிகாரி தனது ஹொங்கொங் நிருவாகத் தில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்பதேயாகும்.

இதே நேரம் சர்ச்சைக்குரிய விடயமாக இரு மாணவர்களினால் கருதப்படும் 2017ம் வருட தகுதிவாய்ந்த அதிகாரிக்கான தேர்தல்களில் அடிப்படை மாற்றங்களை சீனா கொண்டுவர வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

இன்று ஏற்பட்டுள்ள நிலைமை சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களை சீனா வெளிவிவகார அமைச்சரும், அமெரிக்க ராஜாங்க காரியதரிசியும் முன்வைத்துள்ளனர்.

சீனாவின் தயவுடனும் ஆதரவுடனும் 2017ம் வருடம் தகுதி வாய்ந்த அதிகாரி ஹொங்கொங் மாநிலத்திற்கு இம் முறை தெரிவுசெய்யப்படவோ நியமிக்கப்படவோ கூடாது என எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் செய்யும் மாணவர்கள் உடன் வருகின்றனர். இதுவரைக்கும் செயல்பட்ட அதிகாரிகளும் தற்போதைய அதிகாரியும் முற்றக சீனாவுக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டும் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டிருப்ப தாகவும் கூறுகின்றன. 1997ம் ஆண்டு முதல் கூடுதலான பலன்களை சீனாவின் பிரஜைகளே பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். இதில் மாற்றம் அவசியம் என மாணவர்கள் கூறுகின்றனர்.

தனது செல்வாக்கை இங்கு வைத்துக்கொள்ள இது வரைக்கும் சீனா தனக்கு சார்பான வர்த்தக பிரமுகர்களையும் மற்றும் நிதி அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்களையே இங்கு பிரதான இயந்திர பதவிகளுகும் வழங்கி வந்தது.

1842ம் ஆண்டு சீனாவிடம் இருந்து 99 வருட காலத்திற்கு குத்தகைக்காக பிரிட்டன் பெற்றுக் கொண்டது. இந்தக் காலகேடு முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்த போது முன்வரும் 50 வருட காலத்திற்கு இன்றைய ஹொங்கொங்கின் தனித்துவமும் அரசியல் முறையும் வர்த்தக மற்றும் ஏனைய விடயங்களும் ஹொங்கொங் பிரஜைகளுக்கு எந்தவித பாதிப் பையோ அசெளகரியத்தையோ கொண்டுவரக் கூடாது என்ற உத்தரவாத்தின் அடிப்படையிலேயே கையளித்தது. ஆனால் இன்று சீனா படிப்படியாக ஆரம்ப கால கட்டங்களிலேயே தனது அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் இங்கு காட்ட முயற்சித்துள்ளது.

ஒரு நாடு அதே நேரம் இரண்டு ஆட்சிமுறை என்ற சீனா கூறிய கோட்பாடு நடைமுறையில் இல்லை எனவும் அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். 1989ம் ஆண்டு தெனமன் சதுக்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக ளுக்கு பின்னர் நேரடியாக சீன அரசிற்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இன்றைய ஹொங் கொங் சமாச்சாரமாகும் எனவும் மேற் குலகம் கூறுகின்றது.

பல ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஹொங்கொங் இன்று முக்கிய இடத்தினை வகின்றது. எனவே இங்கு உண்டாகும். அரசியல் பொருளாதார நெருக்கடிகள் இந்த ஆசிய நாடுகளையும் பாதிக்கவும் தாக்கவும் கூடும்.

சீனாவிடம் ஹொங்கொங் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலான சீனா பிரஜைகள் இங்கு வந்தனர். இதனால் பல தரப்பட்ட அசெளகரியங்க ளுக்கு நிரந்தரமான ஹொங் கொய் பிரஜைகள் முகம் கொடுத்தனர். சில சம்பவங் கள் பொலிஸ் மற்றும் நீதி மன்றங்கள் வரைக்கும் சென் றன. பிள்ளைகளுக்கான பால்மா உணவுக்கு சீனாவில் தட்டுப்பாட்டு நிலவியபோது அதிகமான மாவினை ஹொங் கொங்கில் இருந்து சீனா வாங்கியது. இதனால் பால் உணவுக்கான தட்டுப்பாடு ஹொங்கொங்கில் உண்டா னது. சுகாதார வசதிகளுடன் கல்வி வசதிகளுடனும் கஷ்டங்கள் ஹொங்கொங்கில் அதிகமான சீனர்கள் வந்தி ருப்பதால் உள்ளன.

இதுதவிர தொழில் துறையிலும் பாரபட்சங்கள் தோன்றியுள்ளதாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதியத்திற்கு கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் பக்கத்தில் சீனா எல்லையுடன் காணப்படும் கிராமங்களில் வாழ்ப்வர்களுக்கு வழங்கப்படு கின்றன. படிப்படியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்க ளின் கை ஓங்கிவரும் இந்த நேரம் சீனா இதுவரைக்கும் நிதானம் போக்கினையே கடைப் பிடித்து வருகின்றது. கடுமையான எந்த நட வடிக்கைகளும் இதுவரைக்கும் இராணுவத்தையே ஏனைய படைகளையோ பாவித்து எடுக்க இன்னும் சீனா முன்வரவில்லை.

பொதுவாக இந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப் பாட்டதினால் பாரிய உயிர் பலிகளோ சேதங்களோ ஏற்படவில்லை இருந்த போதிலும் கூட சீனாவில் இருந்து ஹொங்கொங் வந்துள்ள நடுத்தரமட்ட வர்த்தகர்கள். சந்தோஷம் அடைவதில்லை.

பஸ்லி எம். அவ்ப் ...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.