புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

சாம்பியன்ஸ் லீக் Twenty 20:

சாம்பியன்ஸ் லீக் Twenty 20:

இறுதிப் போட்டியில் சென்னை - கல்கட்டா பலப்பரீட்சை

2014 சாம்பியன்ஸ் லீக் 20 ற்கு 20 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. கடைசியாக நடந்த யிஜிழி போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியினர் இம்முறை சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டு முதன்மைச் சுற்றில் அனைத்துப் போட்டிகள் மற்றும் அரை இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறப்பாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியினர் ஹோபாட் ஹரிகன்ஸ் அணியினரை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹோபாட் ஹரிகன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட் களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அரை இறுதியில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 65 ஓட்டங்க ளால் தோல்வியடையச் செய்து சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. முதன்மைச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இரு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த போதும் கல்கட்டா அணியுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் முதன்மைச் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியினரை படுதோல்வியடையச் செய்து 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றதால் சென்னை அணியினர் கிண்ணத்தை வென்று மீண்டும் சாம்பியனாகும் வாய்ப்புகள் உள்ளன.

எப்படியாயினும் சமபலமுள்ள இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி யிஜிழி கிண்ணத்தை வென்றுள்ள இதுவரை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றிராத கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியா அலது 2010 சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ள இறுதிப் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றிகொள்ளப் போவது என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுவரை நடைபெற்றுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கிண்ணத்தை வென்ற அணிகள் வருமாறு:

2009 - நிவ் சவ்த் வேல்ஸ்

2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2011 - மும்பாய் இந்தியன்

2012 - சிட்னி சிக்ஸஸ்

2013 - மும்பாய் இந்தியன்ஸ்

* இம்முறை இறுதிப்போட்டி நேற்று (04) இரவு 8.00 மணிக்கு நடைபெற இருந்ததுடன் பத்திரிகை அச்சுக்குப் போகும்வரை போட்டி ஆரம்பிக்கப்படவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.