புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

'பாட்டா-அத்த'' தொழில்துறை வலய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 4,60,000 அமெரிக்க டொலர ஒதுக்கப்பட்டுள்ளது!

'பாட்டா-அத்த'' தொழில்துறை வலய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 4,60,000 அமெரிக்க டொலர ஒதுக்கப்பட்டுள்ளது!

தென்மாகாணத்தில் பாரிய கைத்தொழில் பேட்டையாக விளங்கும் 'பாட்டா-அத்த' தொழில்துறை வலையம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உடனடி மெகா வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தங்காலையில் அமைந்துள்ள இத்தொழில் துறை வலையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் விஜயத்தினை மேற் கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரி'hட் பதியுதீன் அவ்வயையத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குறைப்பாடுகளை ஆராய்ந்து வந்ததுடன் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

சில குறைப்பாடுகளை அமைச்சர் 24 மணி நேரத்துக்குள் தீர்த்து வைத்தமையும் குறிப் பிடத்தக்கது. அமைச்சரின் இத்துரித செயற்ப hட்டிற்கு தென்மாகாண வர்த்தக சமூகங்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

இத்திடீர் விஜயத்தின் போது அமைச்சர் அவ்வலைய முதலீட்டாளர் சங்க உறுப்பினர் கள் ஆகியோரை சந்தித்து உரையாடினார். அதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் கூட் டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத நிலையில் இருந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கும் முகமாக ஒவ்வொன்றாக அலசி ஆராயப்பட்டது.

இவ் உரையாடல்களின் முடிவில் அவசர தேவைகளின் நிமித்தம் உட்கட்டைப்பு வசதிக ளுக்காக முக்கியமாக பாதைகளை பழுது பார்க்கும் தேவைகளுக்காக அந்ந இடத்தி லேயே 4 60 000 அமெரிக்க டொலர் உடனடி யாக ஒதுக்கப்பட்டது.

அமைச்சின் பணிப்புரைக்கு அமைய அமைச் சின் அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிகாரிகள் இப்பணிகளினை நேரடியாக கண் காணிப்பார்கள்.

பாரிய முதலீட்டு வளைமாக திகழும் 'பாட்டா-அத்த' தொழில்துறை வளையம் 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 106 ஏக்கர் கொண்ட இவ்வளையத்தில் ஐந்து கைக்தொழில்பேட்டைகள் செயலில் ஈடுபடு கின்றன மற்றும் 1200 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். டுநழஉh டுயமெய (Pஎவ) டுவனஇ சுயபையஅ டுவனஇ யனெ ளுநயெமய டீரடைனநச டுவன ஆகிய நிறுவனங்கள் தற்போது இங்கு செயல்பாட்டு வருகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.