புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முதல் திரை நீக்கம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முதல் திரை நீக்கம்

நாடுகள் உண்டு; ஐக்கியம் உண்டா? ஐக்கிய நாடுகள் சபையில் அமர்ந்திருந்த 194 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை நோக்கி என் பார்வை சுற்றிச் சுழன்ற போது இக்கேள்வி என் மனதினுள் பட்டென எழுந்தது.

எல்லாமாக 194 உறுப்பு நாடுகளின் மன்னர்கள். இளவரசர்கள், ஜனாதிபதிகள், பிரதம அமைச்சர்கள், வெளி விவகார அமைச்சர்கள் உட்பட ஏனையோர் தம் தம் நாடுகளை குறிக்கும் மின்னொளி வெளிச்சம் போட்டு பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளின் பின்னால் உள்ள ஆசனங்களில் வீற்றிருக்கின்றனர்.

ஒவ்வொரு தலைவர்கள் பின்னாலும் செயலர்கள், ஆலோசகர்கள் என மேலும் ஐந்து பேர்களாக அதிகாரிகள் அமர்ந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டிற்கும் வரை யறுக்கப்பட்டுள்ள எல்லைக் குள் மாத்திரமே அவர்கள் அமர்ந்திருக்க முடியும். வேறு நாடுகளின் ஆசனங்களில் அவர்கள் போய் அமர்ந்திருக்க முடியாது. தத்தமது நாடுகளின் எல்லைக் கோடுகளுக்கு உட்பட்ட இந்த வியூகம் அந்தந்த நாடுகளின் சுதந்திரம், சுய நிர்ணயம், தன்னாதிக்கம் ஆகியவற்றை பறைசாற்றி நின்றது. “இது எங்கள் நாடு நீங்கள் எவரும் அத்துமீறி எமது எல்லைக்குள் பிரவேசிக்க முடியாது” என்ற எடுப்போடு ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளும் ஐ.நா சபையில் போடப்பட்டிருந்த தத்தமது ஆசனங்களில் அமர்ந்திருந்த சீர்வரிசை ‘இந்த வட்டாரத்தின் சொந்தக்காரர்கள் நாம்’ என்று அவர்கள் இறுமாப்பு கொள்ளச் செய்ததை நாம் உணர முடிந்தது.

எல்லாமாக 194 நாடுகள். இதில் மொத்தமாக 54 அரபு - முஸ்லிம் நாடுகள்.

நாடுகள் உண்டு -

ஐக்கிய முண்டா?

ஐக்கிய நாடுகள் சபை - இதுவே உலக தாய் சபைக்கு சூட்டப்பட்டுள்ள அழகுப் பெயர்.

ஐக்கியத்தை ஏற்படுத்துமுகமாக தோன்றிய ஆரம்ப உலக தாய் சபை ‘ழிலீaguலீ oஜீ nations’ தேசங்க ளின் கூட்டமைப்பு என்று அறிமுக மானது. உலக முதல் யுத்தத்தின் பிறகு உலக சமாதானத்தை கட்டியெழுப்பும் வண்ணம் ழிலீaguலீ oஜீ nations உருவாக்கப்பட்டது.

இரு உலக யுத்தங்களின் பின் ஒத்தடம்

போட இரு சபைகள்

முதலாவது உலக யுத்தத்தின் பிறகு, இயற்கைக் கோளாறு என்று நினைக்கும் வண்ணம் அது அஸ்தமித்து விட்டது.

இரண்டாவது உலகப் போரின் பிறகு மீண்டும் உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இந்த ஐக்கிய நாடுகள் சபை (ஸிnitலீனீ னிations லிrganization) உதயமாகியது.

1945, ஒக்டோபர் 24ம் திகதி அமெரிக்காவின் அன்றைய தலைநகர் நியுயோர்க்கை மையமாகக் கொண்டு இது எழுந்தது. ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் பேரவையின் சாசனத்தை (விhartலீr) உருவாக்கினர்: சீன குடியரசு, பிரான்ஸ், சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இந்த ஐந்து நாடுகளுமே ஆரம்ப பாதுகாப்பு சபையாக பிரகடனம் செய்யப்பட்டன.

வெட்டும் ‘வீட்டோ’

ஐக்கிய நாடுகள் சபைமுன் கொண்டு வரப்படுகின்ற தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதா? அல்லது நிராகரிப்பதா? என முடிவெடுப்பது இப்பாதுகாப்பு சபையின் கடமையாகும்.

எந்தவொரு விடயத்தில் எந்தவொரு நாடும் சம்மதம் தெரிவிக்க மறுத்தால் குறிப்பிட்ட பிரேரணை நிராகரிக்கப்படும். இதற்கு பெயர் “வீட்டோ Vலீto பலம்” என்பதாகும். காலப் போக்கில் இந்த வீட்டோவினால் வெட்டி விடப்பட்ட பல பிரேரணைகள் உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆயுதமாக விளங்கியது. இது உலக நாடுகளை உறுத்தும் ஒரு இராட்சத முறையாகுமென விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டோ பலத்தை வெட்டி விட வேண்டும் என உத்வேகமான குரல் இன்று நாடு கடந்து நாடு எதிரொலிக்கின்றதை நாம் கேட்க முடிகின்றது.

உலக நாடுகளை ஐக்கியப்படுத்தி சமாதானத்தை மலரச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, தன் மூலாதார கடமையிலிருந்து தடம் புரண்டு விட்டது என்ற குமுறல் நாம் இன்று பல கோணங்களிலிருந்து கேட்க முடிகிறது.

எனவே, நாடுகள் குவிந்த உலக சபையாக இருப்பினும், நாடுகளில் ஐக்கியம் நிலவுகின்றதா? சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதா? ஐ.நா நிலைக்குமா?

சபையின் ‘இலங்கை’ ஆசனத்தில் அமர்ந்திருந்த என் மனது மணிக்கூட்டு ஊசியை போல் சுற்றிச் சுழன்றது.

அப்படியாயின் இந்த ஐக்கிய நாடுகள் சபை உலகுக்குத் தேவைதானா? இதனை இழுத்து மூடிவிடவோ? அல்லது அமெரிக்காவின் நிவூயோர்க் நகரிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்று வோமா? இப்படியான கேள்விக் கணைகள் வருடா வருடம் ஐ.நா சபையின் விவகாரங்களின்போது எதிர்வுக் குரல் எழுகின்றதில் வியப்பொன்றுமில்லை. முக்கியமாக கியூபா, பொலிவியா, லிபியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இந்த குரல் கிளம்பியதை நாம் பல தடைவை கேட்டிருக்கின்றோம்.

எனக்கு ஐந்தாவது முறை

ஐந்தாவது முறையாக இலங்கைக் குழுவின் பிரதிநிதியாக ஐ.நா. மகாசபையில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இறைவனுக்கே எல்லாப் புகழும்!

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எட்டாவது முறையாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுகிறார். இதுவும் ஒரு சாதனை. இலங்கையை இதுவரை ஆட்சி செய்த எந்தவொரு தலைவருக்கும் இந்த பாக்கியம் கிடைத்ததில்லை.

சென்ற செப்டம்பர் மாதம் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூதுக்குழுவில் சேர்ந்து நாம் நியுயோர்க் நகர் வந்து சேர்கிறோம்.

நியுயோர்க்கில் மிகவும் பழைமை வாய்ந்ததும், உலகத் தலைவர்கள் தங்கி நிற்கும் வோர்டோப் தீorlனீorஜீ திlastor ஹோட்டலில் தான் எமக்கும் அறை போடப்பட்டிருந்தது.

உலக நாட்டுத் தலைவர்களுடன்

ஹோட்டலில் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கும் போதும். மின்தூக்கியில் மேலும் கீழும் செல்லும் பொழுதும் பல உலக நாட்டுத் தலைவர்கள் சர்வ சாதாரணமாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் இரட்டிப்பு மடங்கு மகிழ்ச்சி எனக்கு. இங்கு நான் நேருக்கு நேர் சந்தித்த உலக நாட்டுத் தலைவர்களுள் சிலர்:

எகிப்து அரபுக் குடியரசு தலைவர் அப்துல் பதாத் அல்-சீசி, அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அய்பட், பாகிஸ்தான் பிரதம அமைச்சர் முஹம்மத் நவாஸ் ஹரீப், மலேசியப் பிரதமர் டாத்தோ முஹம்மத் நஜீப் துன் ஹாஜி அப்துல் ரஸ்ஸாக், நேபாள பிரதம அமைச்சர் சுஷில் கொய்ராலா, மொரிதானிய ஜனாதிபதி முஹம்மத் அவ்த் அப்துல் அkஸ், கென்யா ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உட்பட வேறு நாட்டுத் தலைவர்களும் இதில் அடங்குவர்.

சாதாரணமாக இந்தத் தலைவர்களை அவர்கள் நாட்டிலோ, வேறு நாடுகளிலோ சந்தித்து கைலாகு கொடுப்பதென்பது அவ்வளவு லேசிப்பட்ட காரியமா, என்ன?

ஆனால் ஒரே ஹோட்டலில் ஒன்றாய்த் தங்கி நிற்கும் போது இராஜியத் தலைவர்கள், சாமான்ய தூதுக்குழு உறுப்பினர்கள் என்ற பேதம் இல்லை. நடந்து கொண்டே அவர்களுடன் பேச்சுக் கொடுக்கலாம். தட்டிக் கொடுக்கலாம், கைலாகு கொடுத்து வாழ்த்தலாம். தகுதி தராதரமின்றி எல்லோரும் சமம், இங்கே.

ஐக்கிய நாடுகள் சபையில் நான் அனுபவித்து மகிழ்ந்த முக்கிய கட்டம் இது!

அங்கு தங்கியிருந்து அடுத்த நாள் விழித்தெழுந்த போது பெரும் பரபரப்பு... ஹோட்டலின் ஒவ்வொரு மாடியிலும் கறுப்பு நிற உடையணிந்த அமெரிக்க பாதுகாப்பு படையினர் மின் தூக்கிக்குச் ‘ழிiஜீt’ செல்லும் வாயிலிலும், மின் தூக்கியின் உள்ளேயும் பாதுகாப்பு படை வீரர்கள் எம்மை உறுத்துவது போல் உசார் நிலையில் நின்றனர்.

சற்று தயக்கத்தோடு ஒரு ‘லிப்டில்’ ஏறி கீழ்மாடியிலுள்ள ஹோட்டலின் வரந்தாவை சென்றடைந்தேன். நூற்றுக் கணக்கான பாதுகாப்பு வீரர்கள் சூழ நின்றனர்.

என் அகன்று திறந்த கண்களினால் சுற்றும் முற்றும் எட்டிப் பார்த்தேன். உலகின் மிகப் பலம் வாய்ந்த மனிதர் அடேயப்பா! ஹோட்டல் வாயிலில் நுழைகிறார். யார் அவர்?....

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.