புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் ஸ்தாபகர்

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ்

கடந்த 64 வருடங்களுக்கு மேலாக அளப்பரிய சமூக சேவைத் தொண்டுகள் செய்து கொண்டு வருகின்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை, 1950 ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தோற்றுவிக்கப் பட்டது. மிகச் சிறந்த கல்விமானும் ஆற்றல் மிகு நிர்வாகியும் புலமை மிக்க அறிஞனும் தூர நோக்காளரும், சமூக சேவையாளருமாகிய கலாநிதி ஏ.எம்.ஏ.அkஸ் அவர்களினால் நிலைநிறுத்திவைக் கப்பட்ட இந்நிறுவனம், சமூ கத்தின் குறிப்பாக இளைஞர், யுவதிகளுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற நிறுவனமாக நிலைத்து நிற்கின்றது.

அபூபக்கர் முகம்மது அப்துல் அkஸ் அவர்கள் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் திகதி யாழ்நகர் வண்ணார்பண் ணையில் அவதரித்தார். அன்னா ரின் முதிர்ச்சிக் காலப்பகுதியில், குறிப்பாகப் பல்துறைகளிலும் சமூகத்திற்குப் பயன்மிகு பாரிய பங்களிப்புக்களை வழங்குவதற்கு, அவர் இந்துக் கல்விக் கூடங்களான ஆர்.கே.எம்.வைத்தீஸ்வர வித்தியாலயம் மற்றும் யாழ்நகர் இந்துக் கல்லூரி ஆகிய பிரபல கல்லூரிகளில் கற்றுக்கொண்ட கல்வியும் அறிவாற்றல்கள் நிறைந்த ஆசிரியப் பெருந்தகைகளிடமிருந்து பெற்றுக் கொண்ட பயிற்சியும் பக்கபலமாகப் பரிமளித்தன. 1933 இல இலண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற அkஸ் அவர் கள், அரசினால் அளிக்கப்பட்ட புலமைப் பரிசில் பெற்றுக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்ககைத்தில் பட்டப் பின் படிப்பைத் தொடப் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைச் சிவில் சேவைப் பரீட்சையில் தேறிய முதலாவது முஸ்லிமாகத் திகழ்ந்த அkஸ் அவர்கள், தன்னுடைய பட்டப் பின் படிப்பைத் தொடராது, நிர்வாகச் சேவையில் இணைந்து கொள்வதற்காக 1935இல் தாய்நாடு திரும்பினார்கள்.

இரண்டாவது உலக மகா யுத்த காலப்பகுதியில், இலங்கையில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக, உணவு உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியத் தேவை அரசுக்கு இருந்தமையால், 1942இல் அkஸ் அவர்கள், உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற திடமான அறிவுறுத்தலுடன் கல்முனை நகருக்கு உதவி அரச அதிபராகக் குறுகிய கால அறிவித்தலுடன் அனுப்பட்டார். இரண்டே இரண்டு வருடங்களில் அவர், உணவு உற்பத்திப் பெருக்கத்தில் படைத்த அரும்பெரும் சாதனை பலராலும் போற்றப்பட்டது. 1944 ஜனவரி மாதத்தில் கொழும்புக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்ட அkஸ் அவர்கள், பெப்ரவரி மாதத்தில் கண்டி மாநகரில் உதவி அரச அதி பராகக் கடமைகளை ஏற்றார்.

1915ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்டி முஸ்லிம் சங்கத்தின் தலைவராக அkஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் பெயரை கண்டி முஸ்லிம் வாலிபர் சங்கம், எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அkஸ் அவர்கள் முன்மொழிந்தமை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1945 இல் ‘யங் முஸ்லிம்’ (முஸ்லிம் வாலிபர்) எனும் பிரசுரத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இந்தச் சங்கத்தில் 29.07.1944இல் அவர் நிகழ்த்திய தலைமை உரையில் ‘வை.எம்’ எனும் ஆங்கில எழுத்துக்கள் ‘யங் மென்’ எனும் பதங்கள், சரீர வயதை அல்லது வயதெல்லையைக் குறிக்கக் கூடாது எனவும், மாறாக இலட்சியம், விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஆகிய பண்புகளைக் கொண்ட மனோநிலையைக் குறிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே ‘முஸ்லிம் வாலிபர் இயக்கத்தில் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் இடமுண்டு’ எனவும் கூறினார். 1945இல் அரச தகவல் அதிகாரியாக நியமனம பெற்றுக் கொழும்பிற்கு மாற்றப்பட்டார். அkஸ் அவர்களும் அன்னாரின் பாரியார் உம்மு அவர்களும், 1947இல் இங்கிலாந்துக்குப் பிரயா ணம் ஒன்றை மேற்கொண்டார்கள். இந்தப் பிரயாணத்தின் போது சில நாட்கள் எகிப்தில் தங்கி இருந்ததினால், 1947 பெப்ரவரி மாதம் கெய்ரோ நகரில் அமைந்திருந்த ‘வை.எம்.எம்.ஏ. நிறுவனத்திற்கு ஒருமுறை சென்று அதன் அமைப்பு முறைகள் உள்ளிட்ட வேறு பல விடயங்களையும் கவனத் தில் எடுத்துக் கொண்ட அன்னாருக்கு, இலங்கையில் இவ்வாறான ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென ஓர் உள்ளார்வம் உண்டாகியது. 1948இல் சிவில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கலாநிதி ரி.பி.ஜாயா அவர்களைத் தொடர்ந்து, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகப் பதவி ஏற்று, வாலிபர் அமைப்புத் தொடர்பாகத் தான் கொண்டிருந்த கருத்துக்களை மீண்டும் புனர் நிர்மாணம் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் பல முஸ்லிம் வாலிபர் சங்கங்கள் இயங்கி வந்தன. எச்.ஏ.மர்ஜான் அவர்களினால் 1917இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட முகத்துவாரம் முஸ்லிம் வாலிபர் சங்கம் அவற்றில் பழமை வாய்ந்ததாக இருந்த துடன் அதன் தலைவராக வைத்தியக் கலாநிதி எம்.சி.எம்.கலீல் அவர்கள் செயற்பட்டு வந்தார்கள்.

முஸ்லிம் வாலிபர் அமைப்பில் முக்கிய பிரமுகராகப் பின்னர் திகழ்ந்த எம்.லாபிர் காசிம் அவர்கள், 1948இல் ஏ.எம்.ஏ.அkஸ் அவர்கள¨ச் சந்தித்து மாளிகாவத்தை முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட வேண்டிய விடயம் குறித்துக் கலந்தாலோசித்தார். இதன் பயனாக 1949இல் மாளிகாவத்தை முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கங்கள் தனியாகவும் வேறுபட்டும் செயற்பட்டன. அவை ஒரு சேவைப் பணிக்கூற்றையோ அல்லது அடையாளச் சின்னத்தையோ கொண்டிருக்க வில்லை.

02.04.1950ஆம் திகதி மாளிகாவத்தை, புதுக்கடை, குருவை வீதி முகத்துவாரம் மற்றும் மத்திய முஸ்லிம் வாலிபர் சங்கங்கள், ஏ.எம்.ஏ.அkஸ் தலைமையில் ஸாஹிராக் கல்லூரியில் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இயங்கிக் கொண்டி ருந்த அனைத்து முஸ்லிம் வாலிபர் சங்கங்க ளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் ‘அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையை நிறுவுவதில் வேண்டும்’ என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக் கெள்ளப் பட்டது.

30.04.1950 ஆம் திகதி 17 முஸ்லிம் வாலிபர் சங்கங்களிலிருந்து 67 பேராளர்கள் கலந்து கொண்ட ஒரு மாநாடு, ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஏ.எம்.ஏ.அkஸ் அவர்களைத் தலைவராகவும் லாபிர் காசிம் அவர்களைச் செயலாளராகவும் கொண்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று முககியத்துவமான நாளாகும்.

காலித் எம்.பாறூக் ... -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.