புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

short story

ஹkனா உம்மாவுக்கு ஓரே ஒரு மகள். அவள் தான் சபானா. சபானா அழகி. ஒரு முறைப் பார்த்தால் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. இறைவன் அழகுடன் அறிவையும் கொஞ்சம் கொடுத்துள்ளான். இவள் நடுத்தர வர்க்கத்ததைச் சேர்ந்தவள். இவளை எப்படியோ பெரிய இடத்துப் பெண்ணைப் போல வளர்த்துள்ளார்கள். கல்லூரிப் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடும். நடை, உடை, பாவனை எல்லாம் ஒன்று சேர்ந்து பணக்காரப் பெண்ணோ என்று வியக்க வைக்கும். இவள் வீட்டில் செல்லப் பெண். இவளது விருப்பமே ஈடேறும்.

இதே போன்று இவளுக்கொரு மாமன் மகன். அவன் தான் ரிஸ்வான். இவன் இவளுக்கு நேர் மாறு. படித்தவன். இவளைவிட எட்டு வயது மூத்தவன். அழகன். ஆனால், பண்புள்ளவன். இவன் ஹkனா வழி அண்ணன் மகன். ஹkனா வீட்டிலேயே தங்கிப் படித்துச் சிறிய தொழில் செய்து வருகின்றான். ஐந்து வேளையும் விடாமல் தொழுபவன். ஏழைகள் இடத்தில் அன்பைப் பொழிவான். கஷ்டமென்று வந்தால் தன்னால் முடிந்தமட்டும் உதவுவான். எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையுள்ளம் கொண்டவன். பகட்டுக்கு இடமில்லை. நல்ல குணத்துடன் ஒழுக்கம் கொண்டவன்.

இவர்கள் இருவரும் இப்படியிருக்க சபானா தன்னுடன் படிக்கும் பையனான கைஸ¥டன் தொடர்பு வைத்திந்தாள். அது தான் இளம் பருவத்தில் வரும் காதல். இது ஒருவருக்கும் தெரியாது. இவளது காதலன் கைஸ் அப்படியொரு ஆணழகன். பெரிய பணக்காரன். காரில் தான் வருவான். இவனைச் சுற்றி ஒரு பட்டாளம். இவன் தன் தங்கையை விட்டு இவளுக்குத் தூது விட்டவன். தங்கையின் தோழி. இவனது இந்த அணுகுமுறை இவளைக் கவர்ந்தது. இவள் ஆமோதித்துவிட்டாள். இனி காதல் தொடர்ந்தது. இவளது அழகும் கையை விழச்செய்தது. கைஸ் கொஞ்சம் துடுக்குக்காரன். வாப்பாவின் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவன். ஏனோ தெரியாது படிப்பை விட்டு விட்டு வியாபாரத்தைத் தொடர்ந்தான். இவனுக்கு வாடகை வீடு தேவைப்பட்டது. அதை இவளது வீட்டிற்கு அருகேயே பார்த்தான்.

இவர்களது காதல் வளர இன்னும் வசதியாகப் போனது. சபானாவும் ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டாள். கைஸ் கொஞ்சம் பையன்களைச் கொண்டு வந்து வைத்துக் கொண்டு கொட்டமடிக்கத் தொடங்கினான். இவன் கொஞ்சம் ஊதாரி. செலவாளியும் கூட. இவளது பழக்கங்களும் நாளடைவில் மாறியது. குடியும், கூத்துமாக பிறகு பல போதை மாத்திரைகள் என இருந்தான். இவன் தகப்பன் இவனை ஊருக்கு அழைத்துச் சென்றார்.

சபானா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது இவளது தாயிடம் வந்து மாமன் மகன் ரிஸ்வான் இவளை மணக்க விரும்புவதாகச் சொன்னான். தாயோ இவனைத் தரக் குறைவாகப் பேசி கடித்து அனுப்பிவிட்டாள். அதாவது வீட்டை விட்டு அனுப்பிவிட்டாள். ரிஸ்வான் தொங்கிய முகத்துடன் தன் உடமைகளை சுமந்தவாறு வெளியேறிவிட்டான். இத்தனைக்கும் இவன் மைத்துனன். உறவுக்காரன். இவனுக்கு மணக்க முடியலில்லை தன் மாமி மகளை. இவன் மனமுடைந்து போனான். இவன் ஏதோ ஒரு ஏஜென்ஸி மூலம் தன் தாயிடம் சொல்லி பணத்தைப் புரட்டி துபாய் சென்று விட்டான். போகு முன் வந்து இவர்களிடம் விடைபெற்றான்.

ஊருக்குப் போனவன் அது தான் சபானாவின் கதாநாயகன் கைஸி. திரும்பவந்து சேர்ந்தான். இவனைத் தொடர்பு கொண்டு மனம் வருந்தி ஹkனாவிடம் வந்து பெண் கேட்டான். ஹkனாவிற்கு இவர்களது விடயம் கொஞ்சம் அரசல் புரசலாக காதுக்குள் எட்டியிருந்தது. இவன் தனியாக வந்து பெண் கேட்கவும் இவள் மறுத்துவிட்டாள். ஹkனா இவனுக்குப் பெற்றோருடன் வருமாறு கூறி பதிலளித்து விட்டாள். கைஸ் இது தான் தருணம் என எப்படியோ இரு வாரங்களில் தன் பெற்றோர் சகிதம் வந்து சேர்ந்தான். இவர்களது பெற்றோர் ஏதோ ஒருவாறு அறிமுகம் முடிந்ததும், கல்யாணப் பேச்சை எடுத்தனர். இவள் சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டாள். யோசித்துக் கூறுவதாக சொல்வி அனுப்பி வைத்தாள்.

சபானா கைஸ¤டன் தொடர்பு வைத்திருந்தாள். தொலைபேசியில் கதைக்கத் தொடங்கினாள். இவளது தாய் கைஸ¥க்குத் தன்னைத் தர மறுப்பதைச் சொல்லி விட்டாள். உடனே கைஸ் ஹkனாவிற்கு சபானா அனுப்பிய கடிதங்களையும் போட்டோக்களையும் கொண்டு வந்து காட்டி இவற்றை போஸ்டர் அடிப்பதாகக் கூறினான். சபானா தன் தாயிடம் வாதாடினாள். விளைவு படிப்பு தடைப்பட்டது. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். இது இப்படியே தொடர்ந்தது.

கொஞ்சம் காலம் போனதும் எப்படியோ இரு வீட்டாரும் சமரசமாகப் பேசி வீட்டில் திருமண ஏற்பாடு செய்து சபானாவையும், கைஸையும் திருமண பந்தத்தில் நுழைத்தார்கள். கைஸ¤ம் நல்ல பிள்ளையாக இருந்தாள். சபானா சந்தோஷத்தின் உச்சிக்கே போனாள். கைஸ் அவளது குடும்பத்துடன் இவளைக் கொண்டு போய் வைத்துக் கொண்டாள். ஹkனா ஒன்றும் கூறவில்லை. இறுதியில் சபானா தாயானாள்.

காலம் யாருக்குக் காத்திருக்கும்? அழகிய ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். அவனும் அழகானக் குழந்தை. இவர்களது இல்லறத்துக்கு அடையாளம். இவன் வளர்ந்து ஒரு இரண்டு வருடத்தில் இவன் மீண்டும் கர்ப்பம். கைஸ் தந்தையை விட்டு வெளியேறி வேறாக வந்தான். தனி குடித்தனமும் சென்றான்.

இப்பொழுது கைஸ் சொல்லியது தான் சட்டம். அவன் தன் புது நண்பர்களுடன் பழகத்தொடங்கினான். நன்றாகக் குடித்தான். சிகரட்¨ட் இடைவிடாது புகைத்தான். போதாக் குறையாக பணம் கொண்டு போய் நைட் கிளப்புகளில் விளையாடத் தொடங்கினான். பெண்களுடனும் தொடர்பு வைக்கத் தவறவில்லை. இது எப்படியோ இவளது தந்தைக்குத் தெரிய வந்தது. அவர் இவனது வீடு தேடி வந்து கத்திவிட்டுப் போனார். சபானா ஒன்றுமே பேசவில்லை. இப்பொழுது அவளுக்கும் தெரிந்துப் போனது. காதல் கண்ணை மறைத்தது. இவள் கணவன் பக்கமே பேசினாள். இது கேள்விப்பட்டு ஹkனாவும் வந்து சபானாவிற்கு புத்தமதி சொல்லிப் போனாள்.

திடீரென ஒரு நாள் கைஸ் தந்தையிடம் சென்று புது வியாபாரத்துக்காக பணம் தேவை முப்பதினாயிரம் கொடுத்து ஆரம்பிக்க வேண்டும். மற்றதைத் தவணை முறையில் கட்டலாம் என்று கூறினான். தந்தையும் கொடுத்தனுப்ப அவன் அதை எடுத்துக் கொண்டு போனவன் தான் ட்ரெயினில் மோதி செத்துவிட்டான் என்ற செய்தி வந்தது. சபானா நிலைகுறைந்து போனாள். இவளது உடம்பு தான் வந்தது. எப்படியோ தெரியாம நடந்தது இப்பொழுது ஊருக்கே தெரியவந்தது. ஆம், இவன் கொஞ்சம் கூடுதலாக குடித்திருந்தானாம். இவனது மரணம் சபானாவிற்கு அதிர்ச்சியைத் தந்தது.

ஹkனா வந்து சபானாவை இத்தா வைத்துவிட்டுச் சென்றவள். இரண்டாது குழந்தைப் பிறந்ததும் தான் வந்தாள். வந்து கையோடு அவளது மகளையும் பேரக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள். இது இப்படியிருக்கு இரண்டு மூன்று வருடங்கள் சென்றன. கைஸினது பெற்றோர் வருவதும் போவதும் கொஞ்சம் குறைவடைந்தது. ஆனால் கைஸானது வங்கிலிருந்து காசு பணம் இரு குழந்தைகளுக்கு பங்கிடப்பட்டது. எத்தனை நாளைக்குப் பணம் கூட வரும்? பெரியவள் இப்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கின்றாள். சின்னவள் ஆரம்பப்பள்ளி செல்கின்றாள். யார் நினைத்தோம் இவள் வாழ்க்கைத் தடம் புரளுமென்று? எல்லாம் விதி.

இது இப்படியிருக்க ஒரு நாள் சபானாவும், ஹkனாவும் குழந்தைகளுடன் பாடம் சொல்லிக் கொண்டிருக்கையில் வாசல் கதவு தட்டப்பட்டது. ஹkனா தான் திறந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவள் கண்ணையே அவனாள் நம்பமுடியவில்லை. கட்டழகனாக ரிஸ்வான் நின்று கொண்டு இருந்தான். கண்ணை இமைக்காமல் பார்த்த ஹkனாலை நோக்கி “மாமி, என்னைத் தெரியல்லியா? நான் தான் ரிஸ்வான்” உடனே “வாங்க ரிஸ்வான்” என்று அழைத்தாள். அவன் உள்ளே வந்தவனை உட்கார வைத்து விட்டு கதவை மூடினாள். பின்பு சபானாவின் வாழ்க்கையை எடுத்துக் கூறினாள்.

மாமி கூறியவற்றை செவிமடுத்துக் கொண்டிருந்தவன். மெல்ல தான் வந்த விடயத்தைக் கூறினான். அதாவது படித்த பணக்காரப் பெண்ணொன்றை அவன் தாய் அவனுக்காக பெண் பார்த்து வைத்திருப்பதையும் இவன் வந்ததே பெண் பார்த்து சம்மதம் தெரிவித்தான். கல்யாணம் நடக்கும் என்றும் கூறினான். இதை சற்றும் எதிர்ப்பாராத ஹkனா தடுமாறினாள். இரண்டு வாரங்களில் வருவதாகக் கூறி கொண்டு வந்த சாமான்களை கொடுத்து விட்டுச் சென்றான்.

இவன் வந்து போய் இரண்டு வாரம் முடிந்தது. திடீரென ஒரு ஆட்டோ சத்தம் கேட்டது. அதோட உடனே ஹkனா வீட்டுக் கதவு மீண்டும் தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும் ரிஸ்வான் தன் உடமைகளுடன் நின்றாள். “மாமி, நான் முழுமையாக வந்து விட்டேன். நான் சபானாவையும் அவளது குழந்தைகளும் இனி என் பொறுப்பு என எண்ணி உங்களுடன் வந்து விட்டேன். நான் அவர்களை ஏற்கத் தயார். இனியாவது என்னை உங்கள் மருமகனாக ஏற்பீர்களா? என்றவனை, “இல்லை, மருமகன் இனி நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என்று அவனைப் பார்த்து ஏற்றுக் கொண்டாள். இந்த நாள் தான் உண்மையானத் தியாகத் திருநாள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.