புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

‘KAVITHAIMANJAREY’

ஹஜ் ஜ{ப் பெருநாள் வாழ்த்துக்கள்

வாளால் பரவியது இஸ்லாம் என்று
வாயால் பழி சொல்லுகிaர் மென்று
தோழர்கள் நபி தோளோடு நின்று
தொழுதனர் ஓர் இறை என்று
*
வெட்ட வந்தவரை வெட்டிய வீரர்கள்
வாளால் நபி வெட்ட எக்
கட்டத்திலும் துணிந்திலார் - இறை
கட்டளை ஏற்பதே அண்ணலார் துறை
*
வள்ளல் நபி வாழ்வில் பணிந்து
போதித்தனர் நபி தோழர்கள் சேர்ந்து
எல்லாரும் நபியுடன் துணிந்து
ஏற்றனர் இஸ்லாத்தின் யதார்த்தம் உணர்ந்து
*
பொறுமை காத்த பொக்கிஷம் நபி
பொறாமை தீயை அன்பால் அணைத்து
கருவம் களைந்தே ‘காத்தூன்’ நபி
காவலனாய் ஏகத்துவம் போதித்தா ரணைத்து
*
கலக(ம்) நாதி காருண்யம் மதித்து
கடல் கடந்து மார்க்கம் பரப்பி
உலக முழுக்கும் தொழுது காட்டிய
உண்மை மத வழி காட்டி(யவர்)
*
இனி ஆயுதங்கள் தேவையில்லை
அதை கீழே வீசுங்கள் வென்றிடுவீர்
தனி வணக்கமாது மது போதைதள்ளி
அவரவர் கல்பு’டனே போரிடுவீர்!


ஹஜ் ஜ{ப் பெருநாள்

அந்த ஒருநாளில் ஏக இறைவன்
நபி இபுறாஹிமின் கனவில் தோன்றி
சொந்த மகன் இஸ்மாயிலை அறுத்துப்பலியிட
அன்புக் கட்டளையிட்டானே!

தயக்கமெதுவுமின்றி நபியவர்களும் மகனிடம்
அறுத்துப் பலியிட உத்தரவு கேட்கவே
பயமேதுமின்றி இறையோனின் கட்டளையை
நிறைவேற்றிடப் பணிந்திட்டானே மைந்தனும்

வல்ல நாயனும் இபுறாஹிம் நபியின்
இறை பக்தியை இவ்வாறு சோதித்திடவே
நல்ல மனங் கொண்ட நபியவர்களும் மகனை
பலியிட உடன் செயற்பட்டார்களே!

படுக்க வைத்து இபுறாஹிம் நபியவர்களும்
மகனின் கழுத்தை அறுத்திடவே
தடுக்கப்பட்டதே வல்ல நாயனருளால்
கத்தியின் அறுக்கும் சக்தியும்

இதற்குப் பகரமாகவே செம்மறியாட்டை
அறுத்து குர்பானி கொடுக்க ஆணையிட்டு
அதற்காக கிடைத்ததே தியாக ஹஜ்ஜுப் பெருநாளாம்
உலக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனரே இன்றதனை


வாழ்த்தும் பெருநாள்

துல்ஹஜ் பிறை பத்தில்
வாழ்த்து சொல்ல வருகுது
ஹஜ்ஜுப் பெருநாள்...

நபி இப்றாஹிம் (அலை) இன்
தியாகத்தை - நமக்கு
திரையிட்டு காட்டுகிறது...

புனித கஃபாவை தரிசித்து
புண்ணியம் தேட
புன்னகையுடன் அழைக்கிறது...

இஹ்ராம் கட்டும் போதே
இச்சைகளை வெறுத்து
இறைவனுக்கு அடிபணியச் செய்கிறது...

மனித சமத்துவம் பேணுவதில்
ஐ.நாவையும் வென்று
கம்பீரமாய் நிற்கிறது

மஹ்ஷர் மைதானத்தை
மனதில் பதிக்கிறது
அறபா வெளி...

பாவங்களைச் சுட்டெரித்து
பாலகனின் அந்தஸ்தை தருகிறது
நரகிலிருந்தும் பாதுகாக்கின்றது...

ஐம்பெரும் கடமைகளில்
இறுதியாய் வந்து
இறை சோபனம் சொல்கிறது...


நீங்களும் ஒருமுறை - தரிசித்து
நற்பேறு பெற்றிடுங்கள் - என
நம்மையும் அழைக்கிறது...
ஹஜ்ஜுப் பெருநாள்
வாழ்த்துரை சொல்கிறது


தியாகத் திருநாள்

தியாகம் எங்கள் சமூகச் சொத்து
தியானம் எங்கள் எவர்க்கும் சொத்து
நியாயம் எமது நிரந்தரச் சொத்து
நினைப்பதே இந்தப் பெருநாள் வித்து

உடுத்ததை இழக்கப் பிரியப் படாதவர்
உண்பதை இழக்க உறுதி யி(ல்)லாதவர்
தடுத்ததை விலக்கத் தகுதி யி(ல்)லாதவர்
தானதை நினைத்திட இந்தப் பெருநாள்

பெற்ற மகனை மண மகனாக
பெரிய தொகைக்கு விற்றிடுகின்ற
பெற்றவர் இன்று இபுறாகீம் நபி
பெற்ற மகனிடம் துணிந்ததை எண்ணுக.

அறுப்பதா தியாகம் விற்பதா தியாகம்
அடுத்தவர் பொருளைத்
கொள்கை யடிப்பதா?
பொறுதியால் நபிகள் பெற்ற பேறை
பொருந்திக் கொண்டவர் நம்மவர் தானே?

தியாகத் திருநாளிலே திளைத்துக் களிக்கிற
தியாக மனத்தோர் துலங்கி வாழவும்
தியாகம் குறைந்தவர் ஏற்றுப் பெருக்கவும்
தியாகம் குறைந்தவர் ஏற்றுப் பெருக்கவும்
தியாகத் திருநாள் வாழ்த்துக் கூறினேன்


மகிழ்வூட்டும் “ஹஜ்”

வேகத்தை மதிக்கும்
விவேகத்தைக் காட்ட
மக்கள் கூட்டம்
மக்கா நகரில்

ஹாஜிகள் அங்கு
நீரால் உடல் கழுவி
நெற்றியால் நிலம் தழுவி
அல்லாஹ்வை வணங்கி
அறநெறி முழக்கம்

நெஞ்சுருகி இந்த
நேர்ச்சியாய் ஹாஜிகள்
பரிசுத்தமாய் இருந்து
பாவமீட்சி பெறுவர்

இதய சுத்தியோடு
இறைவுணர்வோடு
இனியோராய் இவர்கள்
ஈருலக ஈடேற்றமடைவர்

உயர்மிகு இஸ்லாத்தின்
உன்னத கடமை
மனிதரைப் புனிதராக்கி
மகிழ்வூட்டும் “ஹஜ்”


ஹஜ் பெருநாள்!

கடமை ஐந்தில் வரும்
ஹஜ் ஜென்னும் பெருநாளே
திடமாய் ஹஜ்ஜாஜிகளின்
தேவையை நிறைவு செய்வாயே!

உலக முஸ்லிம்கள் போற்றும்
உன்னத ஹஜ் பெருநாளே
ஏற்ற முள்ள ஹஜ் பெருநாளே வாழ்க
மக்காவில் தரிசிக்கும் நேசத்தோரை
மறவாது யாசித்து அருள்வாய்
இறையின் துணை நாடும்
கண்ணிய வான்களை காப்பாற்று!

குர்பானி என்ற மீகையினால்
குடும்ப தோசத்தை அழித்து விடு
ஹர்பலாவிற் காணும் அனுபவத்தை
கண்ணியப் படுத்தி மீளவை!

காசு உயிர் குல மனைத்தும்
கடத் தேகிச் சென்ற உத்தமரை
லேசு படுத்தி ஹஜ்ஜை சிறப்பாக்கு
கருணை செய்வாய் ஹஜுபெருநாளே!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.