புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
சுரேஷ் MP போன்றோரின் புளித்துப்போன கதைகளை கேட்க தமிழர் தயாரில்லை!

சுரேஷ் MP போன்றோரின் புளித்துப்போன கதைகளை கேட்க தமிழர் தயாரில்லை!

சம்பந்தனின் முடிவை வரவேற்கிறார் பாபுசர்மா

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தக்க வேளையில் தனது அரசியல் சாணக்கிய முடிவுக்கு ஏற்ப ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அவர் எடுத்த முடிவு சிறந்ததென ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர். பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வேறு காரணங்களினால் அவர்களது வாழ்வு பாதிக்கப்படக்கூடாது. யுத்தம் அற்ற இலங்கையில் பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஜெனீவா பிரச்சினை காரணமாக இன நல்லுறவு பாதிக்கப்படக்கூடாது என்ற தோரணையில் சம்பந்தன் ஐயாவின் முடிவு அரசியல் சாணக்கியமாகும் இந்த முடிவினை இலங்கை அரசும் வரவேற்று இருப்பதும் அனை வரும் அறிந்ததே.

அதேவேளை சுரேஷ் பிரேமச் சந்திரன் இம் முடிவு பற்றி தம்மிடம் கட்சி கலந்து ஆலோ சிக்கவில்லை எனவும் இந்த முடிவு தெரிவிக்கப்படும் வேளையில் தான் இந்தியாவில் இருந்த தாகவும் தெரிவித்திருக்கின்றார். இது தமிழ் மக்களை மிகவும் ஏளனப்படுத்தும் பதிலாகவே இருக்கின்றது.

பொறுப்பான நேரத்தில் பொறுப்பான இப்படியான முடிவு எடுக்கின்ற நேரத்தில் தாங்கள் வெளிநாட்டில் இருந்த தாகவும் பின்னர் இவ்வாறான முடிவுகளை அறிவிக்கும் தரு ணத்தில் தமிழ் மக்களை ஏமாற் றும் விதத்தில் இந்த முடிவுக்கும் தனக்கும் சம்பந்தம்

இல்லை. சம்பந்தன் ஐயா தான் முடிவு எடுத்தார் என்று கூறுவது வழ மையான தமிழ் கூட்டமைப்பின் சிலரது செயலாகும். தமிழ் மக்களை தமிழ்த் தேசி யம், சுயநிர்ணய உரிமை, பொலிஸ் உரிமை, காணி உரிமை என்று அரசியல் இலாபத்துக்காக உரிமைக்குரல் எழுப்பி தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கையை குழப்புவதில் இனியும் அர்த்தமில்லை. பொறுப்பற்ற விதத்தில் எத்தனை காலம் தான் வெளிநாட்டு பயணம் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற எண்ணு கிறார்.

உங்களை நம்பியிருக்கும் தமிழ் மக்கள் உங்களது புளித்துப்போன கதைகளை கேட்டு தமிழ் மக்கள் நொந்துபோன வாழ்க்கையை காலம் முழுவதும் வாழ வேண்டும் என்ற கொள்கையை தயவு செய்து கைவிட்டு ஒன்றில் கட்சியுடன் கட்டுப்படுங்கள். அல்லது தமிழ் மக்களை விட்டு விடுங்கள் அவர்களாவது நிம்மதியாக வாழ்வதற்கு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.