புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
அமெரிக்காவின் சண்டித்தனம்

அமெரிக்காவின் சண்டித்தனம்

இலங்கையில் பலிக்காது
 

மேல்மாகாணசபை உறுப்பினர்

அஜ;மல் மௌஜ_ட்

கேள்வி: உங்களுக்கு அரசியலில் எவ்வாறு நாட்டம் வந்தது?

பதில்: எனது தந்தை லோட் மெளஜூட் சிறந்த ஒரு வர்த்தகர். சமூக சேவையாளர் மக்கள் நலனே அவரது வாழ்வில் பெரும்பகுதியாக விருந்தது. அவர் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்தினார். நாங்கள் கொடுத்துப் பழகிய குடும்பம். ஏழைகளின் பூரிப்பிலே இன்பம் கண்டவர்கள். எனத தந்தைக்கு அரசியல் வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான தொடர்பும் உறவும் இருந்தது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் நாங்கள் நெருங்கிப்பழகினோம். எனவே ஜனாதிபதியின் தலைமைத்துவமும் அவரது ஆளுமைப்பண்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சமூக சேவையில் ஆர்வம் கொண்டுழைத்த நான் அரசியல் மூலம் மக்களுக்குப் பணியாற்ற முடியுமென விழைந்தேன். ஜனாதிபதியின் அனுசரணையும் எனக்குக் கிடைத்ததனால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது.

அரசியல் ஒரு சாக்கடை என்ற கூற்றை நான் பொய்யாக்கி வருகின்றேன். தமது சுயநலன்களையும் குடும்ப நலன்களையும் முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்தும் அரசியல் வாதிகளைப் போல் அன்றி மக்களின் நலனுக்கு முதன்மை வழங்கும் அரசியல் வாதியாக நான் இப்போது பணியாற்றுகின்றேன். எனது பாதை நேரானது, சீரானது. கொழும்பு வாழ் மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளை இயன்றவரையில் தீர்த்து வருகின்றேன். இதற்கான உரிய கெளரவம் எனக்கு கிடைத்து வருகின்றது.

கேள்வி: ஜனாதிபதியின் செயற்பாடுகள் உங்களைக் கவர்ந்ததா?

பதில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமது நாட்டின் தலைவராக ஆகியமை நாட்டு மக்களின் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். ஜனாதிபதி தனித்துவச் சிறப்பு மிக்க பெருந்தலைவர், சிந்தனையாளர், செயல் வீரர். ஒரு தனி மனிதனின் சிந்தனை எந்த நாட்டிலும் அரசியலை வழிநடத்திச் செல்லும் கொள்கையாகவோ அல்லது செயல் திட்டமாகவோ அமைந்தது கிடையாது.

கூட்டுச் சிந்தனையும் செயல் திட்டங்களும் எல்லா நாடுகளிலும் அமுல் நடத்தப்படுகின்றன. நம்நாட்டிலோ ஜனாதிபதி எனும் தனி மனிதனின் சிறப்பான கொள்கைகள், செயல் திட்டங்கள் அற்புதமாக அமைந்து மஹிந்த சிந்தனையாக மிளிருகின்றது.

நாட்டு மக்களின் நலனுக்கான அபிவிருத்தித் திட்டங்களாக அமைந்துள்ள இது பெருமைக்குரிய அம்சமாகும். மஹிந்த சிந்தனைக் கோட்பாடு கடந்த 7 வருடங்களிலும் செயல்படுத்தப்பட்டமையினால் நாடு பாரிய அபிவிருத்தி கண்டுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் பணிகள் அளப்பரியன. அவர்களின் கல்வி, தொழில் வாய்ப்பு மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை ஜனாதிபதி இதய சுத்தியுடன் தீர்த்து வருவதை நான் பெருமையுடன் கூறுகின்றேன்.

கேள்வி: ஜனாதிபதி மீது ஒரு சில முஸ்லிம்கள் இன்னும் குறை கூறி வருகின்றனரே?

பதில்: இவர்கள் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் எப்போதும் அதையே செய்வர். ஆனால் அவர்களின் மனச்சாட்சி உண்மையைத் தொட்டுக் கூறும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்த போதெல்லாம் ஜனாதிபதி உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் அரபுலக ஈடுபாடே இலங்கை என்ற ஒரு நாட்டின் பெருமை வெளிவரத் தொடங்கியதற்கு காரணம். வேண்டுமென்றே அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தூற்றுவதையே சிலர் தமது தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமது வக்கிரபுத்தியைக் கைவிடவேண்டும். நாட்டின் நாடியைத் தடவிப்பார்த்து தமது குற்றச் சாட்டுகளை முன்வைக்க வேண்டும். வேண்டுமென்றே எது செய்தாலும் திரித்துக் கூறி அரசாங்கத்தின் மீது அவச் சொல் கூறுவதை நிறுத்த வேண்டும்.

கேள்வி: யுத்த வெற்றிக்கு பிரதான காரணம் என்னவென்று நீங்கள் கருதுகின்aர்கள்?

பதில்: ஜனாதிபதியின் ஒப்பற்ற ஆளுமை, தலைமை தாங்கும் பண்பு ஆகியவையே இவற்றுக்கு பிரதான காரணம். என்பதே என் உறுதியான கருத்து. புலிகளை இராணுவ ரீதியில்மட்டுமன்றி மானசீகமான ரீதியாகவும் அவர் தோற்கடித்தார், சிதைத்தார். புலிகளின் தலைவர்களான கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை ஜனநாயக வழிக்குக் கொணர்ந்த பெருமை ஜனாதிபதியையே சாரும். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வயல் வெளிகளில் சேற்றை மிதித்து வந்த இந்தத் தலைவர் மக்களின் அடிநாதப் பிரச்சினைகளை அறிந்தவர். பேச்சுவார்த்தை மூலம் புலிகளை வழிக்குக் கொண்டு வரமுடியாது என்பதை அனுபவரீதியாக உணர்ந்த அவர் இராணுவ வழியைத் தேர்ந்தெடுத்தார். அவரது இராஜதந்திரமும் அரசியல் சாணக்கியமும் யுத்தத்தை இலகுவாக வெல்ல வைத்தது.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சி நடத்துவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனரே?

பதில்: உலக நாடுகளின் தலைவர்களுக்கு சகோதரர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர். நமது நாட்டில் கூட முன்னைய அரச தலைவர்களுக்கு சகோதரர்களும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கிடைத்த பேரதிஷ்டம் எவருக்கும் கிடைக்கவில்லை. அவரது சகோதரர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சகோதர வாஞ்சை, விட்டுக் கொடுக்கும் பண்பு, இதுவரையில் நான் கண்டதில்லை. அவர்கள் இந்த நாட்டின் மீது அளவிட முடியாத பற்றுகொண்டவர்கள். ஜனாதிபதியின் வழிகாட்டலில் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் திறம்படப் பணியாற்றுகின்றனர். நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுகின்றனர். ஜனாதிபதியின் புதல்வர் ராஜபக்ஷ தந்தையின் அடியொற்றி பணியாற்றுகின்றார். இந்த குடும்ப ஒற்றுமையை சகிக்க முடியாத ஜீரணிக்க முடியாத சக்திகளே அவர் மீது சேரு பூசி வருகின்றனர்.

கேள்வி: இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்: இனப் பிரச்சினை என்று ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. இனப்பிரச்சினையைக்காட்டி அரசியலில் ஆதாயம் தேட முயற்சிக்கிறது ஒரு கூட்டம்.

கேள்வி: ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் பிரேரணை கொண்டு வருவது பற்றி என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்: இந்த முயற்சியில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளே வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இன்று முஸ்லிம் நாடுகளில் காட்டி வரும் சண்டித்தனத்தை இலங்கையிலும் பிரயோகிக்க நினைக்கிறது. முஸ்லிம் நாடுகளையும் அந்நாட்டு மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்களையும் கருவருத்து வருகின்றது.

இலங்கையில் யுத்தக் குற்றம் நிகழ்ந்த தாக போலி வீடியோ நாடாக்களைக்காட்டி மனித உரிமைப் பேரவை நாடுகளை தம்பக்கம் ஈர்க்க அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பகீரதப் பிரயத்தனங் களை மேற்கொண்டு வருகின்றன.

பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பு எனத் தடைசெய்யப்பட்டதே புலிகள் இயக்கம். பிரிட்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளிலும் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 32 நாடுகளில் புலிகளுக்கு தடை இப்போதும் இருக்கின்றது. எனினும் புலிக் கொடியைத் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் இன்னும் அனுமதி வழங்கியுள்ளமை நகைப்புக்கிடமானதே. ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போட் உரையை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இரத்துச் செய்த பிரிட்டிஷ் அரசு பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கவே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளித்தது.

அமெரிக்கா, பிரிட்டன் ஏகாதிபத்திய வாதிகள் பயங்கரவாதம் தொடர்பான இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. எனவே ஜெனீவாவில் இவர்கள் பிரேரணை கொண்டு வந்தாலும் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.

கேள்வி: கடந்த கால அரசியல் பணிகளாக பல நல்ல காரியங்களை நிறைவேற்றியுள்ளதாக கொழும்பு வாழ் மக்கள் பலர் கூறக் கேட்டிருக்கின்றோமே?

பதில்: நான் உழைப்புக்காக அரசியலில் ஈடுபடவில்லை. எனது உழைப்புக்கான பயனை இறைவன் நிறையவே தந்துள்ளான். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். மேலும் எனக்கு இறைவன் தந்த சொத்தில் இருந்தும் நிதியில்இருந்துமே பல்வேறு சமூகப்பணிகளை நிறைவேற்றி வருகின்றேன். நான் இன வெறுபாடற்றவன். சிங்கள, தமிழ், சகோதர மக்களை நான் சார்ந்த இனத்தின் சகோதரர்களைப் போல மதித்து வந்துள்ளேன். இந்த இன செளஜன்யம் மேலும் மேலும் தழைத்தோங்கும் வகையிலேயே எனது அரசியல் பணிகள் அமைந்துள்ளன.

கேள்வி: கொழும்பு வாழ் மக்களின் சமூக நலனுக்காக நீங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: இன்றைய கணனி யுகத்திலே சமூக நலமேம்பாட்டுக்குச் செய்ய வேண்டிய பணி கல்விசார்ந்ததாகவே அமைய முடியும். அமைய வேண்டும். மக்கள் தலை நிமிர்ந்து வாழக் கல்வி முன்னேற்றம் அவசியமானது. நாட்டின் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு தேசிய வருமானத்தின் கணிசமான தொகையைச் செலவிடுகிறது. அந்த நிதிக்கான கல்விப் பயனை மாணவ சமூகம் அனுபவிக்கவேண்டும். பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கல்வியின் தரத்தை வெளியுலகுக்குக் காட்டும் அளவு கோலாக அப் பாடசாலை மாணவர்களின் பொதுப்பரீட்சை பெறுபேறுகள் அமை கின்றன. உதாரணமாகப் புலமைப்பரிசில் பரீட்சையை எடுப்போமானால் தேசிய மட்டத்திலே அதி உயர் புள்ளிகளை பெற்றுப் புகbட்டும் மாணவர்கள் கொழும்புக்கு வெளியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுள் கூடிய விகிதாசாரத்தில் சித்தி பெறுவோரும் கொழும்புக்கு வெளியில் உள்ள பாடசாலைகளைச்சேர்ந்தவர்களாகவே காண்கிறோம். அவ்வாறாயின் தேசிய மட்டத்தில் அதி உயர் புள்ளி பெறும் மாணவரும் அதிகம் பேர் சித்தி பெறும் பாடசாலையும் கொழும்பில் ஏன் அமையக் கூடாது என்பதே என் கேள்வியாகும்.

ஒரு பாடசாலையின் கல்வி முயற்சி சிறப்படையக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பெற்றாரும் மாணவர்களும் தத்தமது கடமைகளைக் கூட்டுப் பொறுப்புடன் செய்ய வேண்டும் ஆசிரியர்கள் கற்பிக்கும் தொழிலை வேதனத்துக்கு மட்டும் தான் எனக்கருதாது எதிர்கால சமூகத்தின் தலை விதி தம் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கருதி தியாக சிந்தனையுடன், சேவை மனப்பாங்குடன், உள்ளன்புடன் கற்பிக்க வேண்டும். அது போலவே பெற்றார் பிள்ளைகளின் கல்விக் தேவைகளை தப்பாமல் கொடுத்துதவுவதுடன் தன் பிள்ளை உண்மையாகவே கற்கிறானா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தற்காலத்தில் மலிந்துள்ள வெளிப்பராக்குகள், பொழுது போக்கைக் கட்டுப்படுத்திக் கற்கப் பண்ண வேண்டும்.

மாணவரும் கல்வியின்தேவையுணர்ந்து கரிசனையுடன் கற்க வேண்டும். இத்தகைய முத்திறத்தாரின் பொருத்தமான செயற் பாடுகள் மூலம் தான் கல்வியில் எதிர் பார்க்கும் பயனைப் பெற முடியும்.

கொழும்பில் உள்ள பாடசாலையில் மேற்குறிப்பிட்ட முத்திறத்தாரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் தேவை என்பது என்எண்ணம். குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகள் பல வற்றின் பொதுப்பரீட்சைப்பெறுபேறுகள்ஆரோக் கியமாக அமைவதில்லை என்பதுகல்வி சார் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

எனவே தான் கொழும்புப் பாடசாலைகளுக்கு வேண்டிய பெளதீக வளங்கள், ஆசிரிய பற்றாக்குறை நிவர்த்தி, சிறப்புப் பாசடாலைகளுக்கான ஆசிரிய நியமனம் போன்ற பல்வேறு தேவைகளை நான் கடந்த பல ஆண்டுகளாக நிவர்த்தி செய்து வருகின்றேன். இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதியுயர் புள்ளி பெறும் கொழும்பு மத்திய தொகுதி மாண வன் அல்லது மாணவிக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் அளிப்பதுடன் அப்பிள்ளையின் பெற்றோருக்கு இலவசமாக சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ளவும் நிதி வழங்க உள்ளேன். அப்பிள்ளைக்குக் கற்பித்தத ஆசிரிய ருக்கும் சன்மானம் வழங்கவுள்ளேன். இவை தவிர கொழும்பு வாழ் மக்கள் ஏழைகளான நோயாளிகளின் நிதித் தேவை அளித்து வருகிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.