புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* ஊர் இரண்டுபட்டதால் “வித்தி”யாசமான கொண்டாட்டம்

ஜெனீவாவுக்கு போவதில்லை எண்டு சம்பந்தன் ஐயா விட்ட அறிக்கையால் கூட்டமைப்புக்குள்ளே ஒரு சிலரால் குத்துவெட்டு. அரசியல் ஞானம் இல்லாத கத்துக்குட்டிகளால்தான் அந்த நிலை, தாமும் குழம்பி தம்மைப் போன்ற எண்ணம்கொண்ட சனத்தையும் குழப்பிவைத்திருக்கினம். தலைவர் தலைவர்தான், தலைமைக்குத் தகுதியானவர்தான் எண்டதை சம்பந்தன் ஐயா உணர்த்தியிருக்கிறார். ஆனால் கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூரவாசனை. ஆனாலும் எங்கட "வித்தி" யாசமான ஒருவருக்கு கூட்டமைப்புக்குள்ள பிளவு ஏற்பட்டதில் ஏகப்பட்ட மகிழ்ச்சியாம். போட்டியில்லாம வடக்கு முதலமைச்சராக அல்ல முதலமைச்சர் வேட்பாளராக தெரிவாக வழிபிறந்துள்ளதாம் எண்டு. குட்டையைக் குழப்பி மீனை "வித்தி" யாசமாக பிடிக்கிறதென்பது இவருக்கு கைவந்த கலை. தமிழுக்கு தினமும் "குரல்" கொடுத்து வரும் அந்தப் பத்திரிகைக்காரரை அப்பவும் சரி இப்பவும் சரி முட்டிமோதவிட்டு வருபவர் இவர்தான் எண்டு அவர்களே காதோரமா போட்டிருக்கினம்.

* மனோ அண்ணாவில் பளிச்சென்ற 31 பற்கள்

'ராவய' பத்திரிகை நடத்திய விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதியோட எங்கட மனோ அண்ணா கொடுப்புக்குள்ள வலி எண்டு பிடுங்கின ஒரு பல்லுப்போக மீதமாயுள்ள 31 பல்லையும் காட்டியபடி சந்தோசமாக கதைத்தவர். புகைப்படக்காரரும் சுத்திவளைச்சு நாலுபக்கத்தாலும் படங்களா எடுத்துத் தள்ளினவை. அண்ணாவின்ற பிறந்தநாளுக்கும் ஜனாதிபதி டெலிபோனில் வாழ்த்துக் கூறினவர். இப்பவும் கண்டவுடன் முதலில் குசலம் விசாரித்தபின்தான் உரையாடல். தன்னைப் பற்றியும், தனது அரசைப் பற்றியும் அண்ணா எத்தனைதூரம் விமர்சிக்கிறார் எண்டு நன்கு தெரிந்திருந்தும் கூட, ஜனாதிபதியின் பண்பு யாருக்குமே வராது. வேறயாரும் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதியை பார்த்துச் சிரித்துக் கதைத்து குசலம் விசாரிச்சா அண்ணாவுக்கு கோபம் அடிவயிற்றிலிருந்து இயற்கையாகவே வந்துவிடும். ஆனால் தான் செய்ததால தவிர்க்க முடியாது போய்விட்டது என்று அறிக்கை விடுவாரோ தெரியாது. இந்தச் சிரிப்பை உண்மையாக்கி அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தால் நல்லது எண்டு இனியாவது ஏன் அண்ணா யோசிக்கக்கூடாது?

பிழைப்பைக் கெடுக்கவுள்ள சிலரின் நினைப்பு

ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற நினைப்பில சிலர் இன்னமும் காணப்படுகினம். நாட்டுப்பற்றில்லாத இந்தச் சிலர் செய்துவரும் கோணங்கித்தனமான செயல்களால் உலக அரங்கில் எங்கட நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இண்டைக்கு இந்த அரசாங்கம் புலிகளை அழிக்காம இருந்திருந்தா இப்ப எதிராக கதைக்கிற பலர் உயிரோட இருந்திருப்பினமோ தெரியாது. புலியின்ர கொலைப்பட்டியலிலிருந்து காப்பாத்திவிட்டதற்கு இவர்கள் காட்டும் கைமாறு இதுதான். இவையை மாதிரித்தான் பயங்கரவாதத்தை அழியுங்கோ, அது எங்கட நாட்டுக்கும் ஆபத்தா இருக்கு எண்டு உதவிகளும் செய்து ஆதரவு கொடுத்த நாடுகளெல்லாம் இண்டைக்கு யுத்தக் குற்றம், போர் வரையறை மீறல் எண்டு கதைகள் சொல்லுகினம், யார் எதைச் சொன்னாலும் ஆண்டவன் எல்லாத்தையும் மேலயிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அகத்திலும் புறத்திலும் எமது நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்த நினைக்கிறவைக்கு இன்னும் இரண்டு வாரத்தில் இருக்குது பதில்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.