புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

இலங்கையில் இரண்டு ஷங்ரி - லா ஹோட்டல்கள்

இலங்கையில் இரண்டு ஷங்ரி - லா ஹோட்டல்கள்

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஷங்ரி-லா ஹோட்டலுக்கு மற்றும் ரிகோர்ட்ஸ் இலங்கையில் இரண்டு ஹோட்டல்களை நிர்மாணிக்கவுள்ளது.

முதலாவது ஷங்ரி-லா ஹோட்டல், கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது.

இந்து சமுத்திரத்தை முற்றிலும் பார்த்து ரசிக்கும் விதத்தில் கோல் ஃபேஸ் கிறினுக்கும் பெய்ரா ஏரிக்கும் இடையில் புதிய ஷங்கரி-லா ஹோட்டல் அமையவுள்ளது. முன்னதாக அரசாங்கத்திடமிருந்து 10 ஏக்கர் நிலப்பரப்பைக் கொள்வனவு செய்தமையை ஜனவரி 2011 இல் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட இந்த ஹோட்டல் குழுமம் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஹோட்டலைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் 45 நிமிடத்தில் ஹோட்டலை சென்று அடைய முடியும். இதைவிட இலங்கையின் தெற்குக் கரையோரப் பிரதேசமான ஹம்பாந்தோட்டையில் 145 ஏக்கரில் 315 அறைகளைக் கொண்ட ‘சிட்டி றிசோர்ட்’ என்ற தனது இரண்டாவது நிர்மாணத்தையும் ஷங்ரி-லா நிர்மாணித்து வருகின்றது.

பேண்தகு வழிகாட்டல்களைப் பின்பற்றி நிர்மாணிக்கப்படும் ஷங்ரி- லா ஹோட்டல் இதுவரையில் இல்லாத வரையில் 45 ச. மீ. தொடக்கம் 55 ச. மீ பரப்புடைய (484 ச. அடி- 592 ச அடி) 661 விசாலமான அறைகள் கொண்டதாகக் கட்டப்படவுள்ளது. இதில் 90 ச. மீ. 225 ச. மீ. பரப்புடைய 43 விசேட அறைத் தொகுதிகளும் (968 ச. அடி- 2,421 ச. அடி) இதில் உள்ளடங்குகின்றன. இவை மட்டுமன்றி Sushi bar. Steakhouse. Seafood, Market, Indian, Restaurant, Islamic Restaurant போன்ற பல சுவையகங்களும் கூரையின் மேற்தட்டில் நிகழ்வுகள் நடாத்தக்கூடிய Sky Lounge ஏற்பாடுகளையும் இது கொண்டிருக்கும்.

நாள் முழுவதும் வாடிக்கையாளர்கள் விரும்பிய உணவு வகைகளை சுவைத்து மகிழும் விதத்தில் Straits Spice Market, Szechuan உணவகம் Macanese உணவகம் ஆகியவையும் தமது சேவையை இங்கு வழங்கக் காத்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்களுக்காக Take Out, Deli. Irish Pub Tea Lounge மற்றும் Wine/ cigar room முதலியனவும் இங்கு அமைந்திருக்கும்.

கொழும்பிலேயே மிகப் பிரமாண்டமான மாநாட்டு மண்டபம் 4,780 ச. மீ. மேற்பட்ட பரப்பில், (50,598 ச. அடி) மூன்று தளங்களில் இங்கு அமையவுள்ளது. கூட்டங்கள், வரவேற்பு உபசாரங்கள் முதல் தனிப்பட்ட நிகழ்வுகள் யாவையும் இங்கு நடாத்த முடியும்.

health club, எட்டு treatment rooms உள்ளிட்ட ஸ்பா நிலையம், 25 X 12 மீ அளவுடைய Junior Olympic- size lap Pool திறந்த வெளி டெனிஸ் விளையாட்டரங்குகள் இரண்டும் இணைந்த மகிழ்வூட்டும் வசதிகளை வழங்குகின்றது.

இரண்டாவது ஷங்ரி- லா ஹோட்டல்ஸ் மற்றும் றிசோர்ட்ஸ் இலங்கையின் தெற்குக் கரையோரப் பிரதேசத்தில் 145 ஏக்கரில் அமையவுள்ளது. இவ் உல்லாசவிடுதிக்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது. 2014ஆம்ஆண்டில் திறந்த வைக்கப்படவுள்ள இப்புதிய Hambantota Resort and Spa, sri lanka தற்பொழுது தலைநகர் கொழும்பில் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷங்ரி- லா ஹோட்டலுக்கு மேலதிகமாக நிர்மாணிக்கப்படுகின்றது.

ஷங்ரி- லா ஹம்பாந்தோட்டை றிஸோர்ட் அன் ஸ்பா அமைவிடத்தைச் சுற்றி கோல்ஃப் மைதானம் தென்னந்தோப்புகள், மற்றும் மணல் மேடுகள் அமைந்திருக்கும் கடற்கரைக் காற்றைத் தாராளமாக அனுபவிக்கும் வண்ணம் 315 தங்கும் அறைகள், 24 விசேட அறைத்தொகுதிகள் 50 ச.மீ. முதல் 250 ச.மீ. வரையான (538 ச. அடி 2691 ச. அடி) பரப்பளவில் அமைந்திருக்கும்.

இந்த உல்லாசவிடுதி அமைந்துள்ள நிலப்பகுதி யால சரணாலயம், பறவைகளுக்கு விசேடமான புத்தல தேசியப் பூங்கா ஆகியவற்றின் எல்லையாக அமைந்துள்ளது. இதைவிட 40க்கு மேற்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க சுற்றுலாத் தளங்கள் குறுகிய தூரங்களில் அமைந்துள்ளன. இந்த நிர்மாணப் பணிகளுடன் ஷங்ரி- லாவின் Care For Nature Project எனும் சரணாலயத் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அருகி வரும் விலங்கினங்களை இனங்கண்டு அவற்றுக்கு சரணாலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான கலந்துரையாடல்களில் ஹோட்டல் தற்பொழுது ஈடுபட்டுள்ளது. இதற்காக Eco Centre ஒன்றும் அவ்விடத்தில் நிர்மாணிக்கப்படும். இதில் விருந்தினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு சுற்றாடல் விழிப்புணர்வு பற்றி கற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் சூரிய கலங்களைக் கொண்டு பிறப்பிக்கும் சக்தியில் சுடுநீர் பெறப்படும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.