புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
மூத்தோர் கெளரவிப்பும் இரு நூல்கள் அறிமுக விழாவும்

மூத்தோர் கெளரவிப்பும் இரு நூல்கள் அறிமுக விழாவும்

உளவள ஆலோசகர் கா. வைத்தீஸ்வரனின் இரு நூல்கள் வெளியீடும் மூத்தோர் கெளர விப்பும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ. தேவராஜ் ஆகியோர் கலந்து சிறப்பிக்க வுள்ளனர்.

இறை ஆராதனையை செல்வன் ந. ஸ்ரீராமும், வரவேற்வுரையை செல்வன் ந. யோகப்பிரவணவன் நிகழ்த்த, தொடக்க வுரையை சைவபுலவர் சு. செல்வத்துரை ஆற்றுவார்.

மூத்தோர் கெளரவிப்பில் சமூகஜோதி ச. இலகுப்பிள்ளை, கொழும்பு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி க. விசாலாட்சி, ஓய்வு நிலை வங்கியாளர் எம். சபாரத்தினம், ஓய்வு நிலை தபாற் திணைக்கள மாவட்ட முகாமையாளர் எம்.எஸ்.எஸ். தேவராஜா, திருமதி குண மணி சபாரத்தினம் மற்றும் ஈ. திருநாவுக்கரசு ஆகியோரை கெளரவிப்பு நடைபெறும்.

கா. வைத்தீஸ்வரனின் “நெஞ்சில் வலியுடன் வாழ்தல்” என்ற நூலின் வெளியீட்டுரையை வைத்திய கலாநிதி எம். யோகநாதன் நிகழ்த்த, குடும்ப உறவுகள் என்ற நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை சட்டத்தரணி சோ. தேவராஜா நிகழ்த்துவார்.

இரண்டு நூல்களின் முதற் பிரதிகளை திரு, திருமதி. சுப்பிரமணியம் தம்பதிகளும், திரு, திருமதி திருஞானம்சம்பந்தர் தம்பதிகளும் பெற்றுச் சிறப்பு செய்வார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.