புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் சவால்கள்

இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் சவால்கள்

(கடந்தவாரத் தொடர்ச்சி

இனி வருகின்ற காலங்களில் அதிகளவான தொழில் வாய்ப்புகள், தொழில் ஸ்தாபனங்கள் மலையகத்தை அடிப்படையாகக் கொண்டு உள்வாங்கப்படுதல் வேண்டும்.

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல்

பொருளாதார பின்னடைவு, வறுமை, போதியளவு விளக்கங்கள் இன்மை போன்றவற்றால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகின்றது. மலையகத்தில் சிறுவர் சிறுமியரும் இளைஞர், யுவதிகளும் வெளி மாவட்டங்களில் வீடுகள், கடைகள், தொழில் நிலையங்களில் வேலைக்கமர்த்தப்பட்டு குறைந்த சம்பளத்துடன் மிக கொடுமையாக நடத்தப்பட்டு வருகின்றனர், இதன் போது சிறுவர் சிறுமியர்கள் கொல்லப்படுவதும் சாதாரணமாகி வருகின்றது.

முழு இலங்கையையும் எடுத்து நோக்கும் போது மலையக சிறுவர்களிடையே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களைக் காணமுடிகிறது. பாடசாலைக்குச் செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான சிறார்கள் பெரியவர்களாலும் ஏன் பெற்றோர்களாலும் கூட துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். மலையகத்தை பொறுத்தவரையில் அனேகமான சிறுவர்கள் வீடுகளிலும் ஹோட்டல்களிலும் வேலை செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

போக்குவரத்து வசதிகள் போதாமையும் பாதைகள் பூரணமாய் புனரமைக்கப்படாமையும்.

தோட்ட உட்கட்டமை அமைச்சினால் பெருந்தோட்ட பாதைகள் கொங்ரிட் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் தோட்ட பகுதிகளிலிருந்து நகரங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகள் மட்டும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இன்று மலையகத்தில் கல்வி, கலை, பொருளாதார, அரசியல் போன்றவற்றில் ஓரளவுவேனும் மாற்றம் கண்டு வரும் இந்நிலையில் தொடர்ந்தும் வீதி புனரமைப்பும், வாகன போக்குவரத்து வசதிகள் இன்றுவரையில் பூரணமாக பூர்த்தி செய்யப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மலையகத்திற்கு என தனி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுவதன் அவசியம்

“சகல துறை மேம்பாட்டிற்கும் ஒரு தனிப் பல்கலைக்கழகம் அடித்தளமாய் அமையும்” மலையகத்தில் கல்வியின் பயன்பாடு பற்றிய கருத்துத் தெளிவு முன்பிருந்த நிலையினை விட சற்று அதிகமாகவே உணர்ந்து கொண்டுள்ளனர். கல்வியைத் தேடும் மாணவர்களின் தொகை அதிகரித்திருக்கின்றது, பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகையும் அதிகரித்திருக்கின்றது. மலையகம் என்ற சொல்லினால் அடையாளப்படுத்தப்படும் இவர்கள் இன்று ஒரு தேசியமாக எழுச்சி கண்டுள்ளனர். பிரதேச ரீதியாகவும் (மாகாண எல்லைகள்), இன ரீதியாகவும் (இந்திய வம்சாவளியினர்) தனக்கென அடையாளம் பதித்த கலாசாரங்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் அம்மக்களை மையமாகக் கொண்டு மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுகின்றபோதே அம்மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, ரீதியான முன்னேற்றகரமான மாற்றத்திற்கு விடுத்திடும் என மலையக புத்திஜீவிகளால் கோரிக்கைகள் விடப்படுகின்றன. மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம் மாயை இல்லை. காலத்தின் அவசியம், மலையக மக்களின் 21 ஆம் நூற்றாண்டின் எழுச்சி திட்டமாகும், இச் சமூதாயத்தின் சகல துறை மேம்பாட்டிற்கும் ஒரு தனிப் பல்கலைக்கழகம் அடித்தளமாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

பெண் தலைமைத்துவ பண்பு வளர்ச்சியின்மையும், அரசியல் பிரதிநிதித்துவமும்

நல்லாட்சி (மிooனீ மிovலீranணீலீ) சிந்தனை மலர வேண்டுமாயின் அனைவரதும் அரசியல் பங்குபற்றல் (ஜிolitiணீal ஜிartiணீipation) இன்றியமையாத ஒன்றாக உள்ளதுடன் அவர்கள் பங்குபற்றுதலுக்கான வாய்ப்புகள் திறந்த தன்மையானதாக இருத்தல் மேன்மைக்குரியதே. ஆனால் இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியல் 30 வீதம் ஒதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்ற குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்டை நாடுகளான இந்தியா, நேபாளம், வங்களாதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலையகப் பெண்களிடையே அரசியல் தலைமைத்துவப் பண்புகள் வளர்ச்சியடையாமை அவர்களின் அரசியல் அந்தஸ்து, நலன்கள் என்பனவற்றில் பூர்த்தியின்மையே நிலவுகின்றது.

மலையகத்தில் இன்னும் பெண்களின் பங்களிப்புகளானது அவர்களது பாரம்பரிய வகிபங்குகளான தாய்மை, குடும்பத்தின் பாதுகாவலர் போன்ற வரையறைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆணாதிக்கம் நிறைந்த, மற்றும் ஆணாதிக்க கருத்தியல் கொண்டு வளர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சமூகம் பெண்களை ஒரு இயந்திரமாகவே தொடர்ந்தும் கணித்து வருகின்றது.

இந்நிலையிலிருந்து வெளிவர வேண்டுமாயின் பால் நிலையில் சமத்துவ நிலையினை ஏற்படுத்த வேண்டியது முக்கிய அம்சமாக அமைகின்றது. குடும்ப பொருளாதாரத்தில் மட்டுமன்றி மலையகப் பெண்கள் அவர்களின் வாழ்வின் பல கட்டங்களிலும் பால் நிலை ரீதியாக அந்நியமாகியுள்ளனர். பால் நிலை சமத்துவத்தில் (மிலீnனீலீr ரிquality) ஆண், பெண் இருவரும் சமமான அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்தினை பெற்றிருக்கின்றனர் என அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவர்களின் சமத்துவம் மலையக சமூகத்திற்குள் குறைவாகவும், மழுங்கடிக்கப்பட்டும் வருகின்றதொன்றாகவே காணப்படுகின்றது. மலையக பெண்கள் பாரம்பரியத்திற்குள் கட்டுண்டவர்களாகவே காணப்படுகின்றனர். மலையக சமுதாயமானது இன்றும் பெண்களை பிற்போக்கான சிந்தனையின் அடிப்படையிலே நோக்குவதால் தொடர்ந்தும் இங்கு பால்நிலை ரீதியான அசமத்துவ நிலையே இடம்பெற்று வருகின்றது.

தொகுப்புரையும் பரிந்துரைகளும்

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் மலையக மக்களின் தேவைப்பாடுகளையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சமத்துவம்: சுயாட்சி : சுய நிர்ணயம் என்ற ரீதியில் அமைதல் சிறப்பு. ஆனால் இலங்கையில் குறைந்தபட்ச தீர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. காரணம் வழங்கப்படும் தீர்வுகள் அனைத்து மக்களின் அவசியப்பாடுகளையும் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக இல்லை. இன்றும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் நடைமுறையிலிருக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளும், அரசியல் மாற்றுக் கொள்கைகளும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் என அனைத்து தரப்பினரையும் முழுமைப்படுத்தும் திட்டங்கள் உள்வாங்கப்படுதல் வேண்டும். மலையக மக்களின் அபிலாஷைகள் கோரிக்கைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் போன்ற துறைகளில் அபிவிருத்தி வேறுபாடுகள் இன்றி, தம்மை தாமே நிர்வகித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். s பல இனத்தினர், பல மதத்தினர் வாழுகின்ற நாடு என்பதனை யாப்பினில் எழுத்துக்களில் பறைசாற்ற வேண்டும். s மொழியுரிமையை அடிப்படையில் தமிழ் மொழி கருத்தில் கொண்டு மலையகப் பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்க வேண்டும். மொழி ரீதியாக இடம் பெறும் பாகுபாடுகளை களைதல் வேண்டும். இதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் வேண்டும். s நுவரெலியா மக்கள் தொகை, புவியியல் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலகங்கள் மீள் நிர்ணயம் செய்யப்படுதல் வேண்டும். s இலங்கையிலுள்ள ஒவ்வொரு இனத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். s மலையகத்தை சேர்ந்தோர் என விகிதாசார அடிப்படையில் சகல அரச சேவைகளுக்கு உள்வாங்கப்படுதல் அவசியம். s அரசாகத்தின் வரவு செலவுத் திட்டங்கள், ஏனைய நிதி விடயங்களில் மலையக மக்களின் சகல துறை அபிவிருத்திக்கும் முன்னுரிமை அளித்தல் வேண்டும். s மலையக மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஊழியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். s பெருந் தோட்டங்களை உள்ளூராட்சி கட்டமைப்புகளுக்கு உள்வாங்கப்படுவதுடன் அவர்களுக்கு போதியளவான சேவைகளைப் பெறக்கூடிய மார்க்கங்களை உருவாக்குதல் வேண்டும். மலையக மக்கள் தேசிய நீரோட்டத்துடன் உள்Zர்க்கப்படல் வேண்டும். s 13 ஆம் சீர் திருத்தத்தினை முழுமையாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தல் வேண்டும். s மலையகத்தில் அவசியப்பாடுகளின் அடிப்படையில் பல்கலைக் கழகம், தொழில் பயிற்சி நிலையங்கள், ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் போன்றன உருவாக்கப்பட்டு தொழில்நுட்ப, தொழில் சார் கல்வி சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். s திட்டமிட்ட பேரினவாதப் புறக்கணிப்புகள் தொடருகின்றமையை தடுத்து நிறுத்துதல் வேண்டும். s சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதனைத் தடை செய்யும் வகையிலான முயற்சிகளும் ஆணைக்குழுக்கள், திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.