வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009


இந்திய மற்றும் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நேற்று (06) இலங்கை கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
(ரஞ்சித் ஜயவீர)

 

பிரிட்டி~; அமைச்சர் /போஸ்டர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

*மன்னாருக்கும் சென்று நிலைமைகள் ஆராய்வு
*
சரணடைந்த புலிகளுடனும்   கலந்துரையாடல்

இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபோஸ்டர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு விஜயம் செய்தார்.சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக்ஃபோஸ்டர் நேற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.எம். ஏ. ஜி. என்ற அமைப்பினர் நிலக்கண்ணி வெடி, மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கும் சென்று அவற்றின் பணிகள் குறித்தும் ஆராய்வார்.

விவரம் »
 

சிறந்த கல்வியை வழங்கி புத்திஜீவிகளை உருவாக்குவதில்
அரசு அர்ப்பணிப்பு

திக்வெல்லையில் ஜனாதிபதி

நாட்டில் சகல மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கி அவர்களை புத்திஜீவிகளாக உருவாக்குவதில் அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாக அன்றி அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டியதன் பொறுப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்களையுமே சாரும். கிராமிய சிறுவர்கள் நகரத்தை ஆக்கிரமிப்பது போன்று முழு உலகத்தையும் ஆக்கிரமிக்கக் கூடிய அறிவையும் தெளிவையும் அவர்கள் பெறுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் சிங்கள மாணவனும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவனும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசிலில் முதலிடம் வகிப்பது எமது வெற்றிகரமான கல்விச் செயற்பாடுகளுக்கான சிறந்த சான்றாகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவரம் »
 

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி;
பிரதமர் நேரில் சென்று பாராட்டு

இலங்கையின் பங்குச் சந்தை என்றுமில்லாதவாறு மிகவும் சிறப்பாக இருந்ததென அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தையில் நேற்று ஆகக் கூடிய முதலீடு 1000 பில்லியன் ரூபாவாக இருந்தது. இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் இது முதற்தடவை யாகும். பணவீக்கமும், வங்கி வட்டி வீதங்களும் குறைந்ததே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய வளர்ச்சி நாட்டில் அபிவிருத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது. பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று கொழும்பு பங்குச் சந்தைக்கு திடீர் விஜயம் செய்தார்.

விவரம் »