வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி; பிரதமர் நேரில் சென்று பாராட்டு

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி; பிரதமர் நேரில் சென்று பாராட்டு

இலங்கையின் பங்குச் சந்தை என்றுமில்லாதவாறு மிகவும் சிறப்பாக இருந்ததென அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தையில் நேற்று ஆகக் கூடிய முதலீடு 1000 பில்லியன் ரூபாவாக இருந்தது.

இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் இது முதற்தடவை யாகும்.

பணவீக்கமும், வங்கி வட்டி வீதங்களும் குறைந்ததே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய வளர்ச்சி நாட்டில் அபிவிருத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று கொழும்பு பங்குச் சந்தைக்கு திடீர் விஜயம் செய்தார்.

கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள அலுவலகம் சென்ற பிரதமர் அங்கு அதிகாரிகளுட னும் பங்குச் சந்தை ஆணை யாளர் உதய சிறி காரிய வசத்தையும் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பங்குச் சந்தை 30 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்காக உழைக்கும் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை பிரதமர் ரட்ணசிறி பாராட்டினார். (ரு-ஜ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •